Saturday 3 August 2013

சமதோஷம் !?

புதிய கண்டுபிடிப்பு சமதோஷம் !?



ஒரு பெண்ணின் ஜாதகத்திற்கும் ஆணின் ஜாதகத்திற்கும் பொருத்தம் பார்க்கும் பொழுது பல ஜோதிடர்கள் ஜாதகத்தில் பல தோஷங்கள் இருப்பதாகவும் , அப்படி தோஷம் உள்ள ஜாதகங்களை , அதே மாதிரியான தோஷம் கொண்ட ( சம தோஷம் ) ஜாதகத்துடன் இணைக்க வேண்டும் அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று புதிய கதை ஒன்றை அவுத்து விட்டு இருக்கின்றனர், எங்களுக்கு தலை சுற்றி சுற்றி வருகிறது .

இதற்க்கு முன் செவ்வாய் தோஷம் , ராகு கேது தோஷம் , திசா சந்திப்பு என்று மக்களை குழப்பினார்கள், இப்பொழுது சம தோஷம் என்று புதிதாக துவங்கி உள்ளனர் , அவர்களுக்கு எங்களது சார்பில் ஒரே ஒரு கேள்வி , அதாவது தாங்கள் சொல்வது போல் தோஷமுள்ள ஜாதகத்தை , தோஷமுள்ள ஜாதகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறீர்கள், தோஷம் என்றால் தீமையை தரும் என்பது உங்களின் கருத்தாக இருக்கிறது , அப்படியெனில் ஒரு கெட்டவனுடன் கெட்டவன் சேர்ந்தால் எப்படி நன்மை நடக்கும் , அதிக தீமையான பலனைதானே தரும் .

இதில் எவ்வித உண்மையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை , ஒரு நிலையான புத்தி கொண்ட நல்லவனுடன் ஒரு கெட்டவன் சேர்ந்தால் நிச்சயம் அவனும் நல்லவனாக மாறிவிடுவான் என்பது நிருபிக்க பட்ட உண்மை.
எடுத்து காட்டு : ( காந்தி , விவேகானந்தர் ) இவரை பின்பற்றிய மக்கள்

ஒரு கெட்டவனுடன் கெட்டவன் சேர்ந்தால் சம்பந்த பட்டவன் மற்றும் அவனை சார்ந்தவர்கள் , அனைவரும் பாதிக்க படுவார்கள்
எடுத்து காட்டு : ( ஹிட்லர் மற்றும் அவரது படைகள் , அவரால் பாதிக்கபட்ட மக்கள்  )

ஜாதகத்தில் மட்டும் எப்படி தோஷமுள்ள ஜாதகம் தோஷமுள்ள ஜாதகத்துடன் இணையும் பொழுது நன்மை செய்து விடும் , இதற்க்கு எந்த ஜோதிட நூல்களில் ஆதாரம் உண்டு தயவு செய்து எங்களுக்கு தெரிவியுங்கள் ஜோதிட சிகாமணிகளே !?

திசை சந்திப்பு உண்மையா ?

இல்லவே இல்லை பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் , இருவருக்கும் ஒரே திசை நடந்தால் உடனே திசா சந்திப்பு உண்டு என்று ஜோதிடர்கள் தவிர்த்து விடுகின்றானர் , உண்மையில் நடக்கும் எந்த திசையானாலும் ஜாதகருக்கு எவ்வித ( நன்மை , தீமை ) பலனை தருகிறது என்ற கணிதம் செய்ய தெரியாத ஜோதிடர்களுக்கே இந்த சந்தேகம் வரும் , இந்த சந்தேகத்தின் பலனை ஜோதிடர்கள் பொருத்தம் பார்க்க வரும் அப்பாவிகள் மேல் திசை சந்திப்பு என்று  திணித்து விடுகின்றனர் என்பதே முற்றிலும் உண்மை .

ராகு கேது தோஷம் ,செவ்வாய் தோஷம் , உண்மையா ?

இதை வைத்துதான் பல போலி  ஜோதிடர்களின் பிழைப்பே நடக்கிறது, இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படவே எங்களது வலை பூவில் இதுபற்றிய பதிவுகளை மிகவும் விளக்கமாக கொடுத்துள்ளோம் , படித்து தெளிவு பெறுங்கள் .

சமதோஷம் உண்மையா ?

இதுவும் முற்றிலும் தவறான அணுகுமுறை , ஜோதிட கணிதம் சரியாக தெரியாத பொழுது வரும் குழப்பம் , மேலும் மக்களுக்கு ஜோதிடத்தை பற்றி என்ன தெரிந்து இருக்க போகிறது என்ற மனப்பான்மையின் வெளிப்பாடே ! தோஷம் என்பதிற்கெல்லாம் சமதோஷம் கண்டுபிடிப்பது என்பது உச்ச கட்ட நகை சுவை !

எங்களுக்கு தெரிந்து நல்ல ஜாதக அமைப்பை கொண்ட பல ஆண்கள் , பெண்கள் ஜாதகங்களை தோஷம் இருக்கிறது என்று நல்ல முறையில் அமைய வேண்டிய திருமணங்களை நிறைய ஜோதிடர்கள் தடுத்து விடுகின்றனர் , இதனால் சரியான வயதில் திருமணம் நடக்காமல் ஆண்களும் , பெண்களும் தவிக்கும் தவிப்பிற்கு அவரவர் பெற்றோர்களை கேட்டால் தெரியும் , மக்களே ஜோதிடர்கள் ஒன்றும் ( நாங்கள் உற்பட ) வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை என்பதை உணருங்கள் , தங்களின் குழந்தைகளுக்கு சரியான வயதில் திருமண வாழ்க்கையை அமைத்து தந்து அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் , இல்லை எனில் வரும் காலங்களில் சராசரி திருமண வயது 34 என்று ஆகிவிட வாய்ப்பு உண்டு .

மேலும் ஒரு பெண்ணுக்கு 25 வயதிற்குள் திருமணம் அமைவது அவர்களின் மன நிலைக்கும் , உடல் நிலைக்கும் , பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் ( பெண்களுக்கு சரியான வயதில் பிறக்கும் குழந்தைகள் மிக சிறப்பான திறமைகளை பெற்று இருக்கும் , நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் ) நன்மையென மருத்துவ உலகம் மற்றும் ஆராய்சிகள் அறிவுறுத்துகிறது என்பதை மனதில் நிறுத்துங்கள் .

யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிக்கொண்டு வாழ்க்கையை பணயம் வைக்காதீர்கள் , உங்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நீங்களே என்ற உண்மையை உணருங்கள் மேலும் நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா ? என்பதே உண்மை .

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete