Saturday, 3 August 2013

தேதி vs திருமணம்

களத்திர பாவமும் , காந்தர்வ விவாகமும் !

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு களத்திரம் , குடும்பம் எனும் பாவங்கள் , பாதிக்க பட்டு இருப்பின் , அந்த ஜாதகருக்கு மன வாழ்க்கை அவரின் தேர்வாக இருப்பது மிகுந்த நன்மையை தரும் , மேலும் ஜாதகரின் வினை பதிவிற்கு ஏற்ற அமைப்பில் இல்லற வாழ்க்கை அமையும் .
பொதுவாக களத்திரம் , குடும்பம் எனும் இரு பாவங்களும் பாதிக்க படும் பொழுது ஜாதகருக்கு, சரியான வயதை அடையும் தருணத்தில் தான் பணிபுரியும் இடத்திலோ அல்லது கல்வி கற்கும் இடத்திலோ , தனது இல்லற துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை பெறுவார் , அப்படிபட்ட வாழ்கையை தேர்ந்தெடுக்கும் பொழுது ஜாதகருக்கு வாழ்க்கை துணை 100  சதவிகீதம்  சரியாக அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது .
மேலும் ஜாதகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் சில சிரமங்களை அனுபவிக்கும் நிலை ஏற்ப்படலாம் , ஆனால் ஜாதகர் இதை ஏற்றுக்கொள்ளும் மன நிலை வேண்டும், காரணம் தனது கர்ம வினை பதிவினை போக்கி கொள்ள இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது . இந்த கருத்தை புரிந்துகொண்டால் ஜாதகரின் எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும் .

களத்திரம் , குடும்பம் எனும் இரு பாவங்களும் பாதிக்க படும் பொழுது சில ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை மாற்று இனத்திலோ அல்லது வேறு மதங்களை சேர்ந்த துணையையோ ஏற்றுகொள்ளும் தன்மையும் ஏற்ப்படலாம் , அப்படி ஒரு நிலை வருமாயின் அந்த வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக அமையும் , ஜாதகர் தொழில் , வருமானம் ஆகிய விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். 
களத்திரம் , குடும்பம் எனும் இரு பாவங்களும் நன்றாக இருப்பவர்களுக்கு இந்த நிலை ஏற்ப்பட வாய்ப்பு இல்லை , பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் நல்ல முறையில் திருமண வாழ்க்கை அமைய சுய ஜாதகத்தில் களத்திரம் , குடும்பம் எனும் இரு பாவங்களும்  100   சதவிகிதம் நன்றாக  இருப்பது அவசியமாகிறது , இந்த அமைப்பை சார்ந்தவர்களுக்கு நிச்சயம் திருமண வாழ்க்கை பெரியோர்களால் சரியான நேரத்தில் , சரியான துணையை மனம் செய்துகொள்ளும்  தன்மை ஏற்ப்படும், இல்லற வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சி ஆக அமையும் .
தனது இல்லற வாழ்க்கை துணையை தானே தேர்ந்தெடுக்கும் அன்பர்கள் கிழ்க்கண்ட ஒரு சிறு விஷயத்தை கவனத்தில் கொண்டு தேர்ந்தெடுத்தால் அவர்களின் வாழ்க்கை 100  சதவிகிதம் வெற்றி பெற வாய்ப்பு உண்டு :

 1 , 10 , 19 , 28  தேதிகளில் பிறந்தவர்கள்,  3 , 12 , 21 , 30 மற்றும் 7 , 16 , 25 தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .  
2 , 11 , 20 , 29 ,  தேதிகளில் பிறந்தவர்கள், 9 , 18 , 27  தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .  
 3 , 12 , 21 , 30 தேதிகளில் பிறந்தவர்கள், 1 , 10 , 19 , 28  மற்றும்  3 , 12 , 21 , 30 .   7 , 16 , 25 . 8 , 17 , 26 தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .   

4 ,13 ,22 ,31  தேதிகளில் பிறந்தவர்கள்,  4 ,13 ,22 ,31 . மற்றும்    7 , 16 , 25 தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
5 , 14 , 23  தேதிகளில் பிறந்தவர்கள், 2 , 11 , 20 , 29 ,  மற்றும்  5 , 14 , 23  தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .  
6  , 15 , 24   தேதிகளில் பிறந்தவர்கள், 1 , 10 , 19 , 28  மற்றும் 7 , 16 , 25 தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் . 
7 , 16 , 25  தேதிகளில் பிறந்தவர்கள், 1 , 10 , 19 , 28  மற்றும்  3 , 12 , 21 , 30 . 4 ,13 ,22 ,31 .  7 , 16 , 25 .  8 , 17 , 26  தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் . 
8 , 17 , 26  தேதிகளில்  பிறந்தவர்கள், 3 , 12 , 21 , 30 . மற்றும்   7 , 16 , 25 .  8 , 17 , 26  தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .
9 , 18 , 27  தேதிகளில் பிறந்தவர்கள்,  2 , 11 , 20 , 29 ,  தேதிகளில் பிறந்தவர்களை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .   
மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்கள் , தவிர்க்க வேண்டிய இல்லற துணையின் தேதிகளை கொடுத்து இருக்கிறோம் இவரை கருத்தில் கொண்டு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து பாருங்கள் உங்களின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையாக அமையும்

No comments:

Post a Comment