Saturday, 3 August 2013

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?




அயல் நாடுகளில் ஒருவருக்கு மிக சிறப்பான வேலை அமைந்து , கைநிரைவாக வருமானம் பெற்று தனது தாய் நாட்டில் வாழும் , தனது உறவுகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று தனது வாழ்க்கையை பணயம் வைத்து கடும் உழைப்பால், முன்னேற்றம் அடைந்து தானும் நன்றாக  வாழ்ந்து, தன்னை சார்ந்தவர்களையும் நன்றாக வாழ வைக்கும் ஜாதக நிலைகளை பற்றி கொஞ்சம் ஆய்வு செய்வோம் !
 6  ம்  வீடு
முதலில் வெளி நாடு செல்வதற்கு ஒரு ஜாதகத்தில் ஆறாம் வீடு சர ராசியாகவோ , ஸ்திர ராசியாகவோ அமைந்து, ஆறாம் பாவகம்  100  சதவிகிதம் நன்றாக அமைந்து அந்த ராசி மண் தத்துவம் அல்லது நீர் தத்துவம் அமைப்பை பெற்று இருக்குமாயின் ஜாதகருக்கு வெளிநாடு செல்வதற்கு , எந்தவித தடைகளும் ஏற்ப்படாமல் பயணம் மேற்கொள்ள வசதி வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும் , பயணங்களில் எந்தவிதமான உடல் தொந்தரவுகளோ அல்லது சட்ட சிக்கல்களோ ஏற்ப்படாமல், இனிமை நிரந்த பயணமாக அமையும் .
மேலும் மற்ற நாடுகளில் உள்ள உணவு வகைகளை ஏற்றுகொள்ளும் உடல் அமைப்பு , சீதோசன நிலையை ஏற்றுகொள்ளும் உடல் அமைப்பு , வெளிநாடுகளில் வாழும் மக்களின் முழு ஆதரவு அவர்களின் ஒத்துழைப்பு என, பல விஷயங்களை நல்ல முறையில் அமைய நிச்சயம் இந்த 6  ம்  வீடு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் .

  8  ம் வீடு

இரண்டாவது ஜாதகர் வெளிநாடு வந்தாகிவிட்டது, தான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் , தனது மேல் அதிகாரியின் உதவியும் , தான் தங்கும் இடத்தின் தன்மையும் , அங்கே அமையும் சிறப்பான வசதிகளும்.
 பணியில் விரைவான முன்னேற்றமும், பயணம் செய்ய நல்ல வாகன வசதியும் , பயணம் செய்யும் காலங்களில் எவ்வித பாதிப்பையும் தராத நிலையும் ஜாதகருக்கு அமைய வேண்டுமெனில்,  ஜாதகத்தில் 8  ம் வீடு சர ராசியாகவோ , ஸ்திர ராசியாகவோ இருந்து 100  சதவிகிதம் நன்றாக 
அமைந்து .
  8  ம் வீடு மண் தத்துவம் அல்லது நீர் தத்துவம் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் . மேலும் ஜாதகருக்கு கேளிக்கைகள் , விளையாட்டு , நல்ல பொழுது போக்கு அமைய வேண்டும் எனில் இந்த 8  ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது நலம் தரும் .

 12  ம் வீடு

முன்றாவதாக ஜாதகர் வெளிநாடு சென்று ஒரு நல்ல வேளையில் அமர்ந்து , அனைத்து வசதிகளையும்,  அனுபவிக்கும் யோகத்தை பெற்றாகி விட்டது , சரி இனி ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தும் தனது சந்ததியினருக்கும் சேமித்து பாதுகாக்கும் தன்மை , அந்தநாட்டு குடி உரிமையை பெறுவதில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலை .
 வெளிநாடு செல்லும் பொழுதும் , வரும்பொழுதும் பாதுகாப்பான பயணம் , வெளிநாடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு நிம்மதியான வாழ்க்கை , அங்கேயே ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொள்ளும் தன்மை , நல்ல உணவு , தாய் நாட்டில் இருப்பவர்களால் எவ்வித தொல்லையும் அற்ற நிலை , நிரந்தர வேலை , அந்த வேலையில் ஜாதகரின் ஈடுபாடு அதனால் ஜாதகருக்கு ஏற்ப்படும் முன்னேற்றம் , நல்ல ஆடை  ஆபரண சேர்க்கை , நல்ல சுக போகங்களை அனுபவிக்கும் யோகம் அனைத்தையும் ஜாதகருக்கு அளிப்பது 12  ம் பாவகமே , அதற்க்கு இந்த 12  ம் வீடு  சர அல்லது  ஸ்திர ராசியாக வந்து , மண் அல்லது நீர் தத்துவத்தை பெற்று 100  சதவிகிதம் நன்றாக இருப்பது அவசியம் .
மேற்கண்ட அமைப்பை பெற்று ஜாதகருக்கு லக்கினம் நன்றாக இருந்து நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் 6  8  12  வீடுகளின் பலனை நடத்துமாயின் ஜாதகர் நிச்சயம் வெளிநாடுகளில் சகல யோகத்தையும் அனுபவிக்கும் தன்மையை தடையில்லாமல் நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

No comments:

Post a Comment