Sunday, 8 September 2013

யார் கெட்டா என்ன?

சுக்கிரன் கெட்டா சுகமில்லை குரு கெட்டா செல்வாக்கு இல்லை புதன் கெட்டா அறிவில்லை சந்திரன் கெட்டால் குண்மில்லை சனி கெட்டா தொழில் இல்லை செவ்வாய் கெட்டா துணிவில்லை சூரியன் கெட்டா முன்னோர் ஆசியில்லை...!!

செவ்வாய்,சனி இருவரும் ரொம்ப முக்கியம்...செவ்வாய் உடல் பலத்தை குறிப்பது என்றால் சனி உழைப்பை சொல்கிறது சனி கெட்டால் சோம்பேறியாகிறார்கள்..செவ்வாய் கெட்டால் கோபத்தால் எல்லாவற்றையும் இழக்கிறார்கள்....ஒரு ஜோசியர், குருவை திட்டுவார் சனியை பாராட்டுவார்...குரு செல்வாக்கை கொடுக்கும் ..ஊர்ல நல்ல மரியாதையை கொடுக்கும்.. ஆனா பாக்கெட்ல பத்து பைசா இருக்காது சனி கர்மகாரகன் ..இந்த உலகத்துக்காக தன் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டே இருக்க வைக்கும்.. சனிதான் நல்லவன் என்பார்..சனி கெடாம நல்லாருந்தா போதும்..என்பார்..

No comments:

Post a Comment