Thursday 10 October 2013

பொண்ணுங்களை மகாலக்ஷ்மின்னு சொல்றாங்களே ஏன்?

பொண்ணுங்களை மகாலக்ஷ்மின்னு சொல்றாங்களே ஏன்?

ஒரு அழகான பொண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்றாங்களே ஏன்?

கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு விட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வந்துருக்குன்னு சொல்றாங்களே எதுக்கு?  

அந்த பொண்ணோட அமைதியான குணத்தை வச்சு மட்டும் அல்ல. நல்ல பழக்க வழக்கங்களை பார்த்து மட்டும் சொல்றது இல்லை. ஒவ்வொரு பொண்ணு உடம்புலேயும் மகாலக்ஷ்மி இருக்கு. தர்ம சாஸ்த்திரம் அப்படிதான் சொல்லுது.

அது தெரியுமா உங்களுக்கு.

ஒரு பொண்ணு கல்யாணம் ஆகாமல் கன்னியா இருக்கும் போது காதுக்கு கிழ்புறம்,   கழுத்து பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வாளாம்.  

அந்த பொண்ணுக்கு திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில்,  நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி. 

அதுனாலதான் பொண்ணுங்க தலை சீவாமல் இருக்க கூடாது.  திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்கணும் என்று சொல்கிறார்கள்.

சில பொண்ணுங்க இருக்கும் பத்திரகாளியா. ஆத்தா புண்ணியவதி, அலங்கார ரூபினி,  பார்த்தால் பச்சை மரம் கூட பத்தி எரயும்முள்ள என்று சொல்கிற மாதிரி கொடும் கோலியா இருக்கும்.  என்ன செய்ய... அதுவும் ஒரு அவதாரம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

இன்னொரு செய்தி.

இது பேசன் உலகம்.  மார்டனா ட்ரெஸ் போடுறது பொண்ணுங்களுக்கு பிடிக்கும். ஆனா செய்ய கூடாத ஒன்னு இருக்கு.

என்ன?

அது கால்ல தங்க கொலுசு போடுறது.  

தங்க கொலுசு போடுற அளவுக்கு வசதி இருந்தா போட்டுகிறதுல என்ன தப்பு?

தப்பு தான்.  இந்த மகாலட்சுமி தங்கத்தில் குடி இருப்பாள்.  அதனால  இடுப்புக்கு கிழே தங்கம் வரக்கூடாது.  அப்படி தங்கத்தை கால்ல போட்டால்..... அடுத்த பிறவியில் சொறி நாயா பிறந்து தெரு தெருவா அலைய வேண்டி வருமாம்.  இதுவும் தர்ம சாஸ்த்திரம் தான் சொல்லுது.

ஓகே.

அருள் இல்லாருக்கு அவ்வுலகம்  இல்லை. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை.  அருளையும் பொருளையும் தருவது யார்?

மகாலக்ஷ்மி.

தனலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, வித்யாலட்சுமி, சந்தானலக்ஷ்மி, விஜியலட்சுமி, கஜலக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி என்றெல்லாம் அழைக்கப்படும்  அஷ்ட லக்ஷ்மியின் கூட்டுத்தான் மகாலக்ஷ்மி.

லக்ஷ்மி என்றால் அழகு என்று பொருள்.

லக்ஷ்மி என்றால் அன்பு என்று பொருள். 

லக்ஷ்மி என்றால் கருணை என்று பொருள்.

லக்ஷ்மி என்றால் இரக்கம்  என்று பொருள். 

லக்ஷ்மி என்றால் செல்வம் என்று பொருள்.

வெறும் அச்சடித்த காகிதங்களையும்,  சில்லறை நாணயங்களையும் தருபவள்  இல்லை மகாலக்ஷ்மி.

அன்பை தருபவள், அழகை தருபவள், கருணையை தருபவள், இரக்க குணத்தை தருபவள்.

ஒரு வீட்டில் மகாலக்ஷ்மி குடி இருக்கிறாள் என்றால்,  அந்த வீட்டில் நிம்மதி இருக்கிறது என்று பொருள். 

அந்த வீட்டில் சந்தோசம் இருக்கிறது என்று பொருள்.

நோய்நோடிகளோ, பெரிய அளவில்  வைத்திய செலவுகளோ  இல்லை என்று பொருள்.

உறவில் பிரிவுகளோ,  அதில் முறிவுகளோ இல்லை என்று பொருள். 

பிள்ளை செல்வங்களால் எந்த தொல்லையும் இல்லை என்று பொருள். 

கற்ற கல்விக்கோர் வேலை, பெற்ற ஞானத்திற்கு ஏற்ற மதிப்பு இருக்கிறது என்று பொருள்.

அந்த வீட்டில் விபத்துகளும், துர் மரணம் எதுவும் நடக்கவில்லை என்று பொருள். 

அகிலாட கோடி பிரமாண்ட நாயகியாக வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி ... இந்திரா லோகத்தில் சொர்க்க லக்ஷ்மியாக இருக்கிறாள்.  

பாதாள லோகத்தில் அவளுக்கு பெயர் நாக லக்ஷ்மி.

நாடாளும் மன்னர்களிடம் ராஜீய லக்ஷ்மியாக இருப்பாள்.

நம்மை போல் சாதாரண மனிதர்களிடம் கிரக லக்ஷ்மியாக விற்றிருப்பாள்.  இந்த மகாலக்ஷ்மி அருள் கிடைத்தால் இல்லை என்ற சொல் இல்லாமல் போகும், அதிஷ்ட தேவதைகளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.  நல்லவர்கள் மனதில் நாளும் விற்றிருக்கும் மகலக்ஷ்மியை நாமும் வணங்குவோம்.
 

2 comments: