Thursday, 10 October 2013

உங்கள் வீடு ஆண் மனையா பெண் மனையா?

உங்கள் வீடு ஆண் மனையா பெண் மனையா?


ஒரு மனை என்பது சின்னதோ, பெரிதோ அதை பற்றி கவலையில்லை. அந்த மனையின் குறுக்கே, வாஸ்து புருஷன் கையை காலை நீட்டி படுத்திருக்கிறதா ஒரு ஐதீகம்.


அதா சொர்க்கத்திலேயே வீடு கட்டினாலும், எட்டுக்கு எட்டுல பெட்ரூமை கட்டியாச்சுன்னு வச்சுக்கோங்க. தூங்காத வரம் வாங்கின மாதிரி ஏங்க வேண்டியதுதான்.

போகட்டும்.

மனிதர்களில் ஆண் பெண் தெரியும். விலங்குகளில் ஆண் பெண் தெரியும்.  அதே மாதிரி மனையிலும் ஆண் பெண் இருக்கு தெரியுமா?

இது வேறயா?

ஆமா... ஆண் மனை பெண் மனை என்று இரண்டு இருக்கு. தெற்கு வடக்கு பகுதி நீலம் அதிகமாக இருந்து, கிழக்கு மேற்கு பகுதி நீலம் குறைவாக இருந்தால் அது பெண் மனை எனப்படும்.

இது போன்ற மனையை பெண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றார் போல், வீடு அமைப்பது நல்லது.

கிழக்கு மேற்கு பகுதி நீலம் அதிகமாக இருந்து, தெற்கு வடக்கு பகுதி நீலம் குறைவாக இருந்தால் அது ஆண் மனை எனப்படும்.

இந்த மனையை ஆண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றார் போல் வீடு அமைப்பது நலம்.

1 comment: