Sunday, 10 November 2013

கார் கழுவுவதற்கான வழிமுறைகள்.............

உலர்ந்த துணிகாரை துடைக்கும்போது உலர்ந்த துணியை பயன்படுத்தக் கூடாது. உலர்ந்த துணைியை வைத்து துடைக்கும்போது காரில் கீறல்கள் விழுந்துவிடும்.

சூரிய குளியல் ஆகாது.. அதிக வெயிலில் வைத்து காரை கழுவுவதை தவிர்க்கவும். அதிக வெயில் நேரத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி கழுவும்போது கொஞ்சம் கொஞ்சமாக பெயின்ட் பளபளப்பு போய், மங்கிவிடும் அபாய் உண்டு.

டிடெர்ஜென்ட் வேண்டாம்.... காருக்கு வாஷிங் பவுடர் மற்றும் டிடெர்ஜென்ட் பவுடரை உபயோகித்து கழுவ வேண்டாம். இதுவும் காரின் மேற்புறத்தை பாதிக்கும் காரணிதான். மேலும், மெழுகு பாலிஷ் போடப்பட்டிருந்தால், அதுவும் போய்விடும்.


சன்ரூஃபை மூடுங்கள் காரை கழுவும்போது அனைத்து கண்ணாடிகள் மற்றும் சன் ரூஃபை மூடிவிடுங்கள். காருக்குள் அழுக்குத் தண்ணீர் சென்றால் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பக்கெட் தண்ணீரா... பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொண்டு அதில் துணியை நனைத்து எடுத்து தொடர்ந்து துடைக்க வேண்டாம். துணியில் ஏறும் அழுக்கு தண்ணீரில் கலந்து மீண்டும் காரை துடைக்கும்போது சுத்தமாக இருக்காது என்பதுடன், பாதிப்புகளை ஏற்படுத்தும். ஹோஸ் பைப்பில் தண்ணீரை பிடித்து கழுவுவது சிறந்தது.

மேலிருந்து கீழ் பொதுவாக காரை மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பகுதியாக கழுவுவது சிறந்தது.

பருத்தி துணி காரை கழுவியவுடன் துடைக்கும்போது மெல்லிய அல்லது பருத்தி துணிகளை பயன்படுத்தி துடைப்பது நல்லது. மேலும், தண்ணீரை சுத்தமாக துடைப்பதும் அவசியம்.

பாலிஷ் அவசியம்... காருக்கு பாலிஷ் போட்டுவிடுவது கூடுதல் பாதுகாப்பை தரும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாலிஷ் போடுவது சிறந்தது. மேலும், பளபளப்புக்காக அதிகப்படியான பாலிஷ் போடுவது சில வேளைகளில் பாதிப்பை கொடுத்துவிடும்.




No comments:

Post a Comment