Wednesday, 4 December 2013

திருமணக் காலத்தை குருபலன் கொண்டுமட்டும் இல்லாமல்,ஏழுக்குடையவன் தாசையோ,சுக்கிரன் தசை, சந்திரன் தசை , பலன் சொல்லுதல் நல்லது.

குருபகவான் பெயர்ச்சி ஆனதும் திருமணப்பருவத்தில் இருக்கும் தம் குழந்தையின் ஜாதகத்தை எடுத்து வந்து குருபலன் வந்துவிட்டதா, வரன் பார்க்கத்துவங்கலாமா என்ற கேள்வியுடனே ஜோதிடர்களை அனுகுபவர்கள் அதிகம்.
திருமணக் காலத்தை குருபலன் கொண்டுமட்டும் இல்லாமல், ஏழுக்குடையவன் தாசையோ, புத்தியோ எப்போது, நடக்கப்போகிறது எனக்கணித்தும்.
சுக்கிரன் தசை அல்லது புத்தி நடக்கும் காலம் கணித்தும், 
சந்திரன் தசை அல்லது புத்தி நடக்கும் காலத்தை மனதில் கொண்டும். அந்த ஜாதகருக்கு எது சமீபத்தில் அதாவது திருமணப்பருவத்தில் வருகிறது என மனதில் கொண்டும், களத்திர பாவத்தில் திருமணத்தடைகள் செய்யக்கூடிய கிரகச்சேர்க்கைகள் உள்ளனவா என மன்தில் கொண்டும் பலன் சொல்லுதல் நல்லது.
அடுத்து. 
திருமணபாவப் பலன்களைக் கூறும் முன் நவாம்சத்திற்கு முக்கியத்துவம் தரும் போது தான் துல்லியமான காலகட்டத்தை,
கணித்து வரன் பார்க்கத்துவங்கும் காலத்தை முன்கூட்டியே அறிந்து கூறலாம்.
லக்கினாதிபதி நவாம்சத்தில் எங்கிருக்கிறாரோ அங்கு குரு, சந்திரன் ராகு சேர்க்கை ஏற்படும் போது திருமணம் தடையி்றி நடக்கும்.

சுக்கிரன், ஏழுக்குடையவர் நின்ற ராசியில் குரு சஞ்சாரம் செய்யும் போது திருமணம் நடக்கும்.

அம்ச லக்கினத்திற்கு ஏழம்பாவதிபதி நின்ற ராசியில் குரு சஞ்சரிக்கும் போது திருமணம் ஆனதை அனுபவரீதியாக கண்டிருக்கிறேன்.
குருபலன் வரும் முன் ஜாதகத்தைப் பரிசிலனை செய்துவிட்டு தோசங்கள் இருப்பின் உரிய பரிகாரங்களை, தெய்வவழிபாடுகளை செய்துவிட்டு, குலதெய்வத்தையும் வினாயகப்பெருமானையும் வழிபட்டுவிட்டு வரன் பார்க்கதுவங்குதல் நலம், அப்போது தான் குருபலனில், அல்லது திருமணம் கூடிவரக்கூடிய சுபகாலத்தில் திருமணம் செய்து வாழ்வாங்குவாழலாம் சுபம்.

குறிப்பு மற்றவர்களும் தங்கள் கணிதமுறைகளைக் கூறினால் நல்லது.

No comments:

Post a Comment