கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி' என்கிறார்கள். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி' என்பது தமிழில் "பந்தி' ஆனது. "பங்க்தி' என்றால் "சேர்ந்து உண்ணுதல்'. மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர்' என்பர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். எனவே,நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது
No comments:
Post a Comment