Wednesday, 26 March 2014

கா‌ல் ரேகையை வை‌த்து ஜாதக‌ம் க‌ணி‌க்க முடியுமா?

 கை ரேகையைப் பார்த்து பலன்கள் சொல்வது போல கால் பெருவிரல் ரேகை கொண்டு ஜாதகத்தை கணிக்க முடியும் என்று ஒரு சாமியார் சொல்லி செய்தி வந்துள்ளது. இது எந்த அளவிற்கு ஜோதிட சாஸ்திரப்படி உண்மை என்று விளக்கிச் சொல்லுங்கள்? 

 சாமுத்திரிகா லட்சணம் என்று ஒன்று இருக்கிறது. பலன் கூறும் விதத்தில் சாமுத்திரிகா லட்சணமும் ஒன்று. என்னுடைய தாத்தா, மூக்கை வைத்தே பல பலன்களைச் சொல்வார். சூரியனுடைய ஆதிக்கம் உடையவர்கள், குறிப்பாக கார்த்திகை நட்சத்திரம், உத்திராடம், உத்திரம் இதெல்லாம் சூரியனுடைய நட்சத்திரங்கள். சூரியனுடைய ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மூக்கு நுனி கூராக இருக்கும். சனி பகவான் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு பென்சில் மாதிரி கூராக மூக்கு இருக்கும். பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்றவர்களுக்கு. குரு ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மூக்கு மடிந்திருக்கும். புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு இருக்குமே அதுபோல இருக்கும். 

இதுபோல சாமுத்திரிகா லட்சணத்தில் கண் பற்றி, அதாவது உள் விழி, திரண்டிருக்கும் விழி, அதன்பிறகு முட்டியில் இருக்கும் கோடுகளை வைத்தெல்லாம் என்னுடைய தாத்தா நிறைய சொல்லியிருக்கிறார். முட்டியில் சிலருக்கு மூன்று கோடுகள் இருக்கும், சிலருக்கு முழு கோடு இருக்கும், சிலருக்கு அரை கோடு இருக்கும். இதை வைத்து சிலவற்றை சொல்ல முடியும். அதுபோல பெரு விரலிலும் ரேகைகள் உண்டு. காலிற்கு பிரதானம் பெரு விரல்தான். பெரு விரல் இல்லையென்றால் ஊன்றி நடப்பது என்பது கடினம். வழுக்கு பாதையில் கூட பெரு விரலை ஊன்றி வைத்து நடந்து வா என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், அதில் முழுமையான ஜாதகத்தை எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. 

சாமுத்திரிகா லட்சணப்படி அங்க அவையங்களை வைத்து ஓரளவிற்கு நிகழ்காலம், எதிர்காலத்தை பற்றிச் சொல்லலாம். துல்லியமாகவோ, மொத்தமாகவோ சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது துல்லியமாகவும் இருக்காது. ஓரளவிற்கு சிலவற்றைச் சொல்லலாம். அதிலும் லட்சக்கணக்கான ரேகைகளைப் பற்றி அவர்கள் படித்திருக்க வேண்டும். அப்படி படித்திருந்தால்தான் ஓரளவிற்கு சொல்ல முடியும். இல்லையென்றால் மிக மிகக் கடினம். அதனால், 10 முதல் 20 விழுக்காடு பலன்கள் வரை கால் பெரு விரல் ரேகையை வைத்து சொல்லலாம். மொத்தமாகச் சொல்ல முடியாது. அவ்வளவுதான் முடியும்.

No comments:

Post a Comment