Wednesday, 26 March 2014

பகுத்தறிவை கட்டுப்படுத்துவது எது?

பொதுவாக ஒவ்வொரு ராசியும், ஒவ்வொரு நட்சத்திரமும்தான் ஒரு மனிதனுடைய சிந்தனை, செயல்பாடு இதையெல்லாம் விதியின் கருவியாக இருந்து கட்டுப்படுத்துகிறது என்று ஜோதிடம் சொல்கிறது. இப்படி இருக்கும் போது பகுத்தறிவாதியை எது உருவாக்குகிறது? எது கட்டுப்படுத்துகிறது? 



எல்லா நட்சத்திரம், எல்லா ராசிக்கும் பகுத்தறிவு சிந்தனை உண்டு. அந்த இன்டியூஷன் பவர் எல்லா மனிதனுக்கு உண்டு. சாதாரணமாக எடுத்துக் கொண்டால் லக்னாதிபதி, ராசியாதிபதிதான் ஒருவருடைய குணத்தை நிர்ணயிக்கக்கூடியது. 

அதேபோல லக்னத்தில் உட்கார்ந்த கிரகம், பொதுவாக லக்னத்தில் ராகு, கேது, சனி உட்கார்ந்திருந்தால், இவர்கள் அடுத்தவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எதிர்கேள்வி கேட்பார்கள். ஏன், எப்படி என்று அறிவியல் பூர்வமாக அலசக்கூடிய தன்மை இதெல்லாம் இருக்கும். 

நம்முடைய ஆய்வில் பார்க்கும் போது, லக்னாதிபதி, ராசியாதிபதி 6, 8, 12ல் மறையும் போது இந்த மாதிரியான மாறுபட்ட, பகுத்தறிவுச் சிந்தனைவாதிகளாக அவர்கள் விளங்குகிறார்கள். 

மூடத்தனமான சடங்குகளுக்கு இவர்கள் துணை போக மாட்டார்கள். நம்முடைய சிந்தனையில் பார்க்கும்போது தனுசு ராசிக்கார்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனை மிக அதிகமாக இருக்கிறது. தனுசு என்றால் வில், அம்பு. 

இவர்களுக்கு அதிகமான பகுத்தறிவுச் சிந்தனை இருக்கிறது. இந்த மேஷம், ரிஷப ராசிக்கார்களுக்கு பாரம்பரிய அறிவும் இருக்கும், பகுத்தறிவும் இருக்கும். மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் கடவுள் மறுப்பாளராகவும் இருக்கமாட்டார்கள். 

அதே நேரத்தில் 100 குடம் பால் கொட்டி அபிஷேகம் செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். நியாயமான கடவுள் சிந்தனையா, ஓ.கே. அதற்காக பல மணி நேரம் உட்கார்ந்து செய்வது போன்ற பஜனைக்கெல்லாம் இவர்கள் ஒத்துவர மாட்டார்கள். 

அதேபோல, இந்த கடக லக்னம், கடக ராசி இவர்களுக்கும் பகுத்தறிவு சிந்தனை உண்டாகும். இதில் கடுமையான எதிர்ப்பு, கடுமையான பகுத்தறிவுச் சிந்தனை இதெல்லாம் தனுசு ராசிக்காரர்களுக்கு மட்டுமே உண்டு.

No comments:

Post a Comment