Thursday, 12 June 2014

போகரின் ஜீவசமாதி:

போகரின் ஜீவசமாதி:
போகரின் ஜீவசமாதி:
=====================

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சித்தர் போகரின் ஜீவசமாதி.
திருநந்தி தேவரே பல்வகை பிறப்புற்று பின் போகராக தோன்றினார் என்பர்.இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.தனது சீடர் புலிப்பாணி சித்தருடன் பழனி மலையில் மேல் தான் அமைத்த திருக்கோயிலின் கண் நவபாஷான கட்டினால் தண்டாயுதபாணி சுவாமியின் அருள் திருமேனியை நிறுவினார்.ஆண்டவன் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதபடுகிறது.
இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம். இங்கு இன்றும் போகர் வழிபட்ட அருள்மிகு புவனேஸ்வரி அம்மை, மரகதலிங்கம் , வலம்புரி சங்கு ஆகியவற்றை காணலாம். இச்சன்னதியில் இருந்து தண்டாயுதபாணி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க பாதை உள்ளது. கடைசியாக இதன் வழியாக சென்ற போகர் திரும்பாமல் இதனுள் அமர்ந்துவிட்டார் என்பர் .
அவருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து அங்கு செய்து வந்தார் .அவரது ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆஸ்ரம் என்று இன்றும் அந்த இடம் அவரது கருவழி பரம்பரையினர் வழிபட்டு வரப்படுகிறது .மேலும் புலிப்பாணி பரம்பரையினர் தான் இன்றும் பழனி மலையின் மேல் அமைந்துள்ள போகர் சமாதியில் பூஜைகள் செய்து வருகின்றனர் .

No comments:

Post a Comment