Saturday, 2 August 2014

பித்தளை பாத்திரத்தில் தண்ணீர்

துத்தநாகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக உற்ற தனிமம் ஆகும். வளரும் நாடுகளில் உள்ள ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் துத்தநாகக் குறைபாட்டு நோயினால் பாதிப்படைந்துள்ளனர். இக்குறைபாட்டால் ஏற்படும் நோயினால் வயிற்றுப் போக்கு அதிகரித்து உலகம் முழுவதும் சுமார் 800,000 குழந்தைகள் இறந்துள்ளனர்.ஆனால் 300 ஆண்டுகளுக்கு முன்பே துத்தநாகம்,செம்பு கலந்து உருவாக்கப்பட்ட பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ,குடித்து இந்த சத்தை பெற வழிவகை செய்துகொண்டவர்கள் தமிழர்கள்.ஆனால் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு,இப்போது நாம் தான் பைபர்,பிளாஸ்டிக்,சில்வர் பாத்திரங்களில் ,கேன்களில் தண்ணீர் பிடித்து ,வைத்துக்கொண்டு குடிக்கிறோம் விளம்பர மோகத்தாலும் ஃபேஷன் மோகத்தாலும் நம்மையும், நம் குழந்தைகளையும் நோயாளிகள் ஆக்கிக்கொள்கிறோம்!!

No comments:

Post a Comment