Saturday 2 August 2014

ஆடி 18 யுத்தம் முடிந்த நாள்

அம்மன் என்பது பெண் சக்தியை குறிக்கும்...ஆடி மாதத்தில் அம்மன் மட்டுமல்ல பெண்களும் மிகுந்த மனவலிமையும்,சக்தியும் பெற்று திகழ்வார்கள்...மனவலிமை அதிகரிக்கும் மாதம் என்பதால் இம்மாதத்தில் விரதங்களும் அதிகம்.குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்த மாதம்..ஆடியில் விதை ஊன்ற அவை நன்கு செழித்து வளரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை ஆடிபட்டம் தேடி விதை என்பார்கள்.நீர்வளம் பெருகும் மாதம்..அதே சமயம் மனதில் போர்க்குணமும்,கோபமும் அதிகரிக்கும் மாதமுமாக இருப்பதால் இதை மகாபாரத யுத்தம் நடந்த மாதம் என்பர்..ஆடி 18 யுத்தம் முடிந்த நாள் என்பர்.அதனால் எந்த சுபகாரியமும் செய்வதில்லை..காரணம் மனம் பதற்றமாக இருக்கும் மாதம் இது அதை நிலைபடுத்ததான் இத்தனை வழிபாடு விரதம் பூஜைகள் எல்லாம்...மனம் பதட்டமாக இருக்கும்போது சுபகாரியம் ஆகுமா..பதறிய காரியம் சிதறி போகும் அல்லவா..முன்னோர்கள் நிறைய யோசித்துதான் சுபகாரியத்துக்கு இம்மாதத்தை விலக்கி வைத்தனர்.

No comments:

Post a Comment