Thursday, 7 August 2014

கோ பூஜை ''

கோ பூஜை '' 

கிருகப்பிரவேசம் செய்யும்போதும், கும்பாபிஷேகம் மகோத்சவ காலங்களிலும் முதலில் பசுவையும், கன்றையும் அழைத்து வந்து கோபூஜை செய்வதன் நோக்கம் என்ன? 
பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை "கோமாதா' என அழைக்கிறோம். இதன் காலடி பட்ட இடத்தில் மங்களம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்றுடன் கூடிய பசுவை வணங்கினால் லட்சுமியின் அருட்கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment