Thursday, 7 August 2014

ஆலயங்களில் விக்கிரக வழிபாடு ஏன் முக்கியம் ஆகிறது?

ஆலயங்களில் விக்கிரக வழிபாடு ஏன் முக்கியம் ஆகிறது?
ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது,இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம். ஆன படியினால்தான் ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு உள்ள தெய்வ விக்கிரகங்களை வழிபாடு செய்கிறோம். ஆகவே எமது ஆலய வழிபாட்டில் விக்கிரக வழிபாடு மிக மிக முக்யத்துவம் ஆகிறது 

No comments:

Post a Comment