Saturday, 2 August 2014

கிரகமாலிகா யோகம்.

கிரகமாலிகா யோகம்.
மூன்றாம் வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவிடாமல் அமர்ந்தால் அதற்கு “விக்கிரம மாலிகா யோகம்” என்று பெயர். இதன் பலன் என்னவென்றால், தைரியமிக்கவன், பலசாலி, காரிய வெற்றியை உடையவன். சகோதரப் பலமுடையவன் இசைஞானமுடையவன். தேகபலமுடையவன். போகபலம் உடையவனாகவும், அதிகாரமிக்கவனாகவும்
கிரகமாலிகா யோகம்.
இலக்கினத்திலிருந்து கிர்கங்கள் இடைவிடாமல், ஏழு வீடுகளில் இருந்தால், அதற்கு, இலக்கின மாலிகா யோகம் என்று பெயர். இலக்கினத்திலிருந்து சுபக்கிரகம் இருந்து கிரகமாலிகா யோகம் துவங்கினால், பெரும் இராஜயோகத்தைத் தரும். பலதொழில் செய்பவன். நல்லமுன்னேற்றமான வாழ்வைத் தரும். அனைவரையும் வெற்றி கொள்வான். எதிலும் முதன்மையானவனாய், தலைமைப் பதவி வகிப்பவனாய் ஜாதகன் இருப்பான்.
கிரகமாலிகா யோகம். 
இலக்கினத்துக்கு இரண்டாம் வீட்டிலிருந்து இராகு, கேது தவிர்த்து, மற்றக் கிரகங்கள் வரிசையாய் இடைவெளி இல்லாமல் நின்றால், அதற்கு, “தன மாலிகா யோகம்” என்று பெயர். இதன் பலன் என்னவென்றால், குடும்பம் சிறப்புடன் இருக்கும். செல்வம், பணம் முதலியன தன்னிறைவுடன் இருக்கும். இனிமையான பேச்சைக் கொண்டவனாக இருப்பான்
ரகமாலிகா யோகம். 
இலக்கினத்துக்கு ஐந்தாம் வீட்டிலிருந்து இடைவிடாமல் கிரகங்கள் நின்றால், “புத்திர மாலிகா” யோகம் என்று பெயர். இதன் பலன் என்னவென்றால், தவமிருந்தாலும் இதுபோன்ற பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாது. ஞானம் மிகுந்தவன். தெய்வ பலம் மிக்கவன். பேராலயங்களையும் புனரமைக்கும் புண்ணிய பணியைச் செய்பவன். மந்திரவுபதேசம் பெறுபவன். மக்கள் பயன்படும்படியான கால்வாய், குளங்களை வெட்டுபவன். உலகம் புகழத்தக்க வாழ்வு வாழ்பவன்.

No comments:

Post a Comment