Tuesday, 23 September 2014

கற்புக்கரசி

கற்பு ரீதியாக கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகள் பற்றி ஜோதிட ரீதியாக காரணம் சொல்ல முடியுமா?
ஒரு பெண் கடைசிவரை கற்புக்கரசியாக இருப்பாளா என்பதை அப்பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்தை கொண்டு அறியலாம். இந்த இடத்துக்கோ அல்லது இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகத்துக்கோ சுப கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்து பாவ கிரகங்களின் தொடர்பு இருக்குமானால் அப்பெண் கற்பு நெறி தவருவாள். அதனால் தான் நன்கு விபரமறிந்த ஜோதிடர்கள் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது இந்த நான்காம் வீட்டை கூர்ந்து கவனிப்பார். ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்து அதை சனிபகவான் பார்த்தால் கணவனுக்கு தெரியாமல் அவனுடைய மனைவி வெகு சாமார்த்தியமாக தன் கற்பை மற்றவனுக்கு தாரை வார்ப்பாள்.
இது இப்படி இருக்க என்னதான் கற்புக்கரசியாக இருக்கும் கிரக அமைப்புகள் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தாலும் அப்பெண்ணின் கணவனுடைய மோசமான கிரக அமைப்பை கொண்ட ஜாதகமும் அவள் கற்பு நெறி தவறி நடக்க காரணமாக அமைகிறது. ஒரு ஆணின் ஜாதகத்தில் அவனுக்கு அமையும் மனைவியின் கற்பு நிலையை பற்றி சொல்லலாம். லக்னத்துக்கு பத்தாம் வீட்டுக்கும் பத்தாம் வீட்டு அதிபதிக்கும் சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்து, பாவ கிரகங்களின் தொடர்பு இருக்குமாயின் இவனுடைய சரி இல்லாத ஜாதகத்தின் கிரக அமைப்பால் அவனுடைய மனைவி கற்பு நிலையில் வழி தவறி நடப்பாள். மேலே சொன்ன ஆண் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் அல்லது பத்தாம் இடத்துக்கு அதிபதிக்கோ சுப கிரகங்களின் தொடர்பு இருந்தால் அவனுடைய மனைவி கணவனே கண் கண்ட தெய்வம் சொல்லுக்கு தகுந்தாற்போல் கணவனை தவிரை வேறு ஒரு ஆண்மகனை மனத்தால் கூட நினைத்து பார்க்க மாட்டாள்

No comments:

Post a Comment