Tuesday, 23 September 2014

கண்டாந்த நட்சத்திரங்களும்குழந்தைப் பிறப்பும்

கண்டாந்த நட்சத்திரங்களும், குழந்தைப் பிறப்பும்..... .
நாம் இன்று பஞ்சாங்கத்தில் கண்டாந்த நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டுருக்கும் சில நட்சத்திரங்களில் குழந்தை பிறந்தால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காணலாம். முதலில் கண்டாந்த நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள் மூன்றும், (அசுவினி, மகம், மூலம்) புதனின் நட்சத்திரங்கள் மூன்றுமாக (ஆயில்யம், கேட்டை, ரேவதி) மொத்தம் ஆறு நட்சத்திரங்களைக் கூறுகிறார்கள். நாம் நினைவில் கொள்வதற்காக, கிழக்கு ராசிகளின் முதல் நட்சத்திரங்களும், வடக்கு ராசிகளின் கடைசி நட்சத்திரங்கள் மூன்றுமாக நினைவில் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால், கிழக்கின் துவக்க நட்சத்திரமும், வடக்கின் முடிவு நட்சத்திரம் என்றும் நினைவில் கொள்ளலாம். இவைகள் கண்டாந்த நட்சத்திரங்கள் ஆகும்.
கண்டாந்த நட்சத்திரங்களில் குறிப்பாக கேதுவின் நட்சத்திரங்களான அசுவினி, மகம், மூலம் இம்மூன்றின் முதல் பாகையில், ஒரு குழந்தை பிறந்தால், அக்குழந்தை மரித்து விடும். புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதி இம்மூன்று நட்சத்திரங்களின் கடைசி பாகையில் குழந்தை பிறந்தால், அக்குழந்தையும் மரித்து விடும். ஒருவேளை உயிர்தப்பி விட்டால், உலகை ஆள்கிறானோ இல்லையோ, கண்டிப்பாக ஊரை ஆள்வான்.
கேட்டை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், தன் மூத்த சகோதரனை அழிக்கும் என்கிறார்கள். இதில் பெண் பிறந்தால், தன் கணவனின் மூத்த சகோதரனை அழிக்கும் என்கிறார்கள். இந்த அழிப்பு என்கிற வார்த்தை இறப்பைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாமல், மூத்த சகோதரனின் வளர்ச்சியைத் தடுக்கும் அமைப்பாக்க் கொள்ளலாம்.
மூல நட்சத்திரத்தின் முதல் பாதம் தந்தைக்கும், இரண்டாம் பாதம் தாய்க்கும், மூன்றாம் பாதம் தன்ந்தமிருக்கும் செல்வத்திற்கும், நான்காம் பாதம் குடும்பத்திற்கும் தீமைதரும். ஆனால், சிலர் நான்காம் பாதம் நன்மையே தரும் என்றும் சொல்வார்கள்.
புதன் நட்சத்திரமான ஆயில்யத்தின் கடைசி நாழிகையும், அதாவது 0.24 கலை தான் ஒரு நாழிகையாகும். , மூல நட்சத்திரத்தின் முதல் நாழிகையும் (அதாவது 0.24 கலை) கொண்டதுதான் “அபுக்த மூலமாகும்”. இது மிகுந்த் ஆபத்தை விளைவிக்க்க் கூடிய அமைப்பாகும்.
அசுவினி முதல் பாதமும், ரேவதி நான்காம் பாதமும், ஆபத்து தருபவையாகும். 

No comments:

Post a Comment