Tuesday, 23 September 2014

பசுவைப் பூஜித்தால்,உணவுஇட்டால்,வலம் வந்தால் பலன்

கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.
இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.
பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.
பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.
பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.

No comments:

Post a Comment