Sunday, 26 October 2014

முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள் எவை?

முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள் எவை?



நாம் எந்தவித செயலைச் செய்யத் துவங்கினாலும்முதலில்நல்லநாளில்நல்லநேரத்தில் துவங்க வேண்டும் என்றுநினைக்கிறோம்அதனால்முதலில் நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளநல்லநேரத்தைப் பார்க்க துவங்கிறோம்அதனினும் துல்லியமாகபஞ்சாங்கங்களில் அறிபவர்கள் இருக்கிறார்கள்மேலும்,நல்லநாள்,நேரத்தை ஜோதிடர்களின் உதவியின் மூலம் அறிபவர்களும்இருக்கிறார்கள்சில ஜோதிடர்களுக்கும் தெரியாதஇந்த முகூர்த்தநுட்பத்தை நம் சித்தர்கள் கூறியதைக் காண்போமாஇதற்குள்இருக்கும் சூட்சுமங்களை நம்மில் யாராவது விலக்கினால் நல்லது.


1. தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனியின் கடைசிபதினான்கு நாட்களும்,
2.    தமிழ்மாதங்களின் கடைசி மூன்று நாட்களும்,
3.    ஒவ்வொரு நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும்,
4.    வாரக் கரிநாளையும்சனிசெவ்வாய் கிழமைகளையும்,
5.    கிரகணநாளையும்மரணயோக நாளையும்,
6. பஞ்சப்பட்சியில் உங்களின் பட்சி எதுவோஅது சாவுபட்சியாகஇருக்கக் கூடாது.  
7. கார்த்திகைதிருவாதிரைபரணிகேட்டைபூரம்பூராடம்,பூரட்டாதிசித்திரைவிசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்நாளையும்,
8.   அமாவாசைசதுர்த்திசஷ்டிஅஷ்டமிநவமிசதுர்த்தசி முதலியதிதி வரும் நாட்களிலும்,



முகூர்த்தம் செய்யக்கூடாது என நம் தமிழ்சித்தர் கூறியுள்ளார்இனிஇதையே கடைப்பிடிப்போம் நன்றி.

No comments:

Post a Comment