Saturday, 4 October 2014

வீடு வாகன யோகம் யாருக்கு ?

நாலாம் வீட்டு அதிபதி நாலில் ஆட்சி பெற்றால் நல்ல வீடு வாகனம் அமைய பெறுகிறது.

நாலாம் அதிபதி லக்னாதிபதி மற்றும் குரு சேர்க்கை பெற்றால் எப்போதும் வீடு வாகனம் வசதி பெறுவார்.

வாகன காரகன் சுக்கிரன் குரு வுடன் சேர்ந்து பாக்கியாதிபதியுடன் சேர்க்கை பெற்றால் வாகனம் வசதி அதிகமாக ஏற்படுகிறது.

நாலாம் அதிபதி ஏழாம் அதிபதிவுடன் சேர்ந்தால் நல்ல வீடு வாகனம் அமையும்.

நாலாம் அதிபதி இரண்டாம் அதிபதிவுடன் சேர்ந்தால் அபரிமிதமான செல்வ சேர்க்கை  மற்றும் வீடு அமையும்.

நாலாம் அதிபதி 1,4,7,10 போன்ற கேந்திரங்களில் இருந்தாலோ அல்லது 1,5,9 போன்ற திரிகோணங்களிலோ இருந்தால் வீடு வாகன வசதி உண்டு.

பூமி காரகன் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் வீடு வசதி உண்டு.

No comments:

Post a Comment