Saturday, 4 October 2014

ராகு கேது நிற்கும் பலன்

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய இடங்களில் கரும்பாம்பு எனப்படும் ராகு நின்றிட அதே சமயத்தில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற நான்கு மூலைகளிலும் கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு சிறந்த நன்மைகளும் பொன் பொருள் சேர்ந்து யோகம் அமையும்.

* செம்பாம்பு எனப்படும் கேது 1,5,9 ஆகிய கோண ஸ்தானங்களிலும் லாப ஸ்தானத்திலும் நிற்க அந்த ஜாதகன் சொந்த இடத்திலும் பிற தேசங்களிலும் வாசம் செய்து சம்பாதிப்பான். பொன் ஆபரணம் மற்றும் பூமியும் சேர்ந்து இந்திரனுக்கு ஒப்பாக வாழ்வான். இல்லறத்தில் மகிழ்ச்சி அடைவான். ஜோதிடத்திலும் வல்லமை பெற்று விளங்குவான்.

* லக்னாதிபதியும் சந்திரனும் மூன்றாம் அதிபதியும் சனியும் ஒரே இடத்தில் கூட ராகுவுடன் பாவக்கிரகம் சேர இவர்களில் தசா புக்தி காலத்தில் ஜாதகனுக்கு உயிர் ஆபத்து உண்டாகும். தற்கொலை போன்ற எண்ணமும் வரும்.

* ராகுவுடன் வேறு கிரகம் சேர்ந்து அவர்களுக்கு இரு புறமும் மற்ற கிரகங்கள் நிற்க அந்த ஜாதகன் மிகப் பெரிய வீரனாகத் திகழ்வான். யானை, குதிரைகள் பெற்று வீரத்துடன் சண்டையிட்டு வெற்றி அடைவான்.

* ராகு, கேதுக்கள் 6,8,12ல் நிற்க அந்த ஜாதகனுக்கு நோய் உண்டாகும். மனைவியால் பிரச்சினைகள் ஏற்படும். இவர்கள் தாசா புக்தியில் பலவித துன்பங்களைக் கொடுப்பார்கள்.

* பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் ராகு நிற்க அந்த ஜாதகனுக்கு புத்திர தோஷம் ஏற்படும். இந்த தோஷம் நீங்க பரிகாரம் என்னவென்றால் ஜாதகனின் மனைவி அரச மரத்தை சுற்றி வந்து கன்னியர்களுக்கு ஸ்நானம் செய்வித்து அவர்களை வணங்க புத்திர உற்பத்தி உண்டு. மேலும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ராகு பிரதிஷ்டையும் செய்யலாம்.

* ராகு கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் தோன்ற அந்த வீட்டிற்குடையோன் சுபருடன் கூடினாலோ அல்லது சுபர் பார்வை பெற்றாலோ அந்த ஜாதகனுக்கு சிறப்பான யோக பலன்கள் உண்டாகும். ராகுவுடன் லக்னாதிபதியும் சேர மேலும் யோக விருத்தி ஏற்படும்.

* 5ம் இடத்திற்குரியோன் பாவனாக ராகு, கேதுக்களுடன் கூடி 3ல் நிற்க அந்த ஜாதகனின் மனைவியால் தொந்தரவு ஏற்படும். கணவனுடன் எப்போதும் சண்டை போடுவாள். கொடிய குணம் கொண்டவளாயிருப்பாள்.

* லக்னத்திற்கு 3க்குடையோன் பாவனாகி ராகு, கேதுக்களுடன் கூட மனைவி கணவனை மதியாமல் அவன் சொல்வதை கேட்கமாட்டாள். மனைவி கணவனை விட வயது அதிகம் இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊருக்கு அருகில் கடல் உண்டு.

* ராகு 5ல் நின்று அவனை சூரியன் பார்த்தால் அந்த ஜாதகன் வெளிநாட்டில் சென்று வேலை செய்வான். பொன், பொருள், நிலம் இவை சேரும். எனினும் இவன் தந்தைக்கு உபகாரமாக இருக்கமாட்டான்.

No comments:

Post a Comment