Saturday, 4 October 2014

திருமணம் உறவிலா ? அன்னியத்திலா ? விளக்கம்

ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ஒன்று முதல் ஏழு வீடுகளுக்குள் அமையபெற்று , களத்திர காரனகிய சுக்கிரனும் லக்னத்தை நெருங்கி இருந்தால் சிறு வயதில் அதாவது குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் ஆகும். இல்லாவிடில் காலம் கடந்து திருமணம் ஆகும்.

ஏழாம் வீட்டில் அசுபர் அமைய பெற்று அசுபர் பார்வை செய்தால் நல்ல முறையல் திருமணம் ஆகாது. அது போல உறவில் திருமணம் ஆக தடை கொடுக்கும்.

ஏழில் புதன் இருந்தால் மாமன் வழியில் மணம் உண்டாகும். ஏழாம் அதிபதியும் புதனும் சேர்ந்து குடும்பாதிபதியுடன் இணைந்து காணப்பட்டால் மாமன் மகளை மணம் செய்து கொள்ளும் மகிழ்ச்சியான அமைப்பு கொடுக்கும்.
ஏழாம் அதிபதி செயவ்வாய் யுடன் சேர்க்கை பெற்று அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் சகோதரி பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு கொடுக்கும்.

ஏழாம் அதிபதி நான்காம் வீட்டு அதிபதி உடன் இணைந்து காணபட்டாலும் அல்லது பார்வை பெற்றாலும் தாய் வழி உறவில் திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு உண்டாகும்.

ஏழாம் வீட்டிற்கு சந்திரன் தொடர்பு இருந்தால் தாய் வழி உறவில் திருமணம் கொடுக்கும்.

ஏழாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி யுடன் இணைந்து காணபட்டாலும் ஒன்பதாம் அதிபதியால் பார்க்க பட்டாலும் அல்லது சூரியன் தொடர்பு இருந்தாலும் தந்தை வழி யில் தான் திருமணம் நடைபெறும்.

குறிப்பாக அத்தை மகளை கைபிடிக்கும் அமைப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment