Saturday, 4 October 2014

ஏழில் கேது திருமண தடையா ?

கேது வை ஏழாம் வீட்டில் பார்த்ததுமே திருமணம் நடக்காது என்று கூறுவதை கண்டு இருக்கிறேன். ஆனால் உண்மையில் பல ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் ஏழாம் வீட்டில் கேது இருந்தும் திருமணம் நடந்து நன்றாக வாழ்வதை காண முடிகிறது.

பொதுவாக கேதுவை துறவி கிரகம் என்று கூறுவதுண்டு. ஆகையால் ஏழாம் வீட்டில் கேது இருந்தால் மண வாழ்வு அமையாது என்று நினைகிறார்கள்.

உண்மையில் ஏழாம் வீட்டில் கேது இருப்பது மிக கடுமையான தோஷம் இல்லை.

ஏழாம் வீட்டில் கேது இருந்து அந்த கேதுவை குரு பகவான் பார்த்து விட்டால் அவன் மண முடிந்து நல்ல பிள்ளைகளையும் பெற்று எடுப்பான்.

மேலும் சுக்கிரன் பலமாக இருந்தால் ஏழாம் வீட்டில் கேது இருந்தாலும் திருமணத்தை முடித்து கொடுப்பான்.

ஏழாம் வீட்டில் கேது இருந்து அவனுடன் சூரியனும் சேர்ந்து இருந்தால் மண வாழ்க்கை உண்டு. இருபினும் கொஞ்சம் மனவருத்தம் கணவன் மனைவி இடையே தோன்றும்.

ஏழாம் வீட்டில் செவ்வாய் கேது இருந்தாலும் மண கசப்பு மற்றும் தகராறு கொடுக்குமே தவிர மண வாழ்க்கை இல்லாமல் போகாது.

எது எப்படி இருபினும் குரு பார்வை கிடைத்து விட்டால் மண வாழ்க்கை நன்றாக அமையும்.

கேது ஏழாம் வீட்டில் இருந்து கொண்டு மண முடிக்க கால தாமதம் கொடுப்பான் இதை மறுக்க முடியாது. இருபினும் 31 வயதை தாண்டி விட்டால் பெரிய கெடுதி இல்லை.

No comments:

Post a Comment