Saturday, 4 October 2014

ஏக நட்சத்திரமாக இருந்தால் கல்யாணம் செய்யலாமா ?

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கு உண்டு .

" காலப்ரகாசிகை " என்ற நூலில் உள்ளபடி :

ரோகினி ,திருவாதிரை , மகம் , ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்தரட்டாதி , ரேவதி  ஆகிய நட்சத்திரம் கணவனுக்கும் மனைவிக்கும் ஒன்றாக வந்தால் திருமணம் செய்யலாம். நல்ல பலன் உண்டாகும். திசா சந்திப்பு தோஷம் உண்டாக முடியாது.

அசுவினி , கிருத்திகை, மிருகசீரிஷம் , புனர்பூசம், பூசம், பூரம், உத்தரம் , சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இவைகள் கணவனுக்கும் மனைவிக்கும் ஒன்றாக வந்தால் திருமணம் செய்யலாம். 

மத்திம பலன் தான் . பாதகம் இல்லை.
மற்றவை சரி இல்லை.

மேலும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் போது ஆணுக்கு முதல் பாதமும் பெண்ணுக்கு 2,3,4 இம் பாதமும் இருந்தால் நல்லது.

No comments:

Post a Comment