ஒருவருக்கு அடிக்கடி துன்பங்களும், வேதனைகளும் உடல் நிலையும் பாதிக்கப்படும் போது அல்லது கெட்ட காலம் இருக்கும்போது "எனக்குப் பிடித்த சனி எப்போதுதான் போகுமோ' என்பார்கள்.
ஒன்பது கிரகங்களில் சனி கிரகம் (saturn) மிகவும் சக்தி வாய்ந்தது. இது முழங்கால் மூட்டுகள் உள்ள பகுதியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சனிக்கிழமை என்ற வார்த்தை சனி கிரகத்தைத்தான் குறிக்கின்றது. சனிக்கிழமையன்று சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால்தான் அந்நாளுக்கு Saturn+day=Saturday என்று அழைக்கப்படுகிறது.
மூட்டுவாதம், ஆஸ்துமா, மூலம் போன்ற நோய்கள் சனி கிரகத்தால்தான் ஏற்படுகின்றது. இந்து சமுதாய மக்களில் சிலர் கஷ்டமான காலகட்டத்தில் சனி தோஷத்தை நீக்கிக் கொள்ள நவக்கிரக கோயிலில் உள்ள சனி விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள வன்னி மரத்தையும் தொட்டுக் கும்பிட்டு அதைச் சுற்றி வருவார்கள். இதனால் சனி தோஷம் நீங்கிவிடுவதாக நம்பப்படுகிறது.
உண்மையில் வன்னிமரம் சனி கிரகத்துடன் தொடர்பு கொண்ட மரமாகும். இந்த மரம் சனி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை சுவாசித்து தன் உடலில் நிரப்பிக் கொள்கிறது. அதுதான் மருத்துவ குணங்களாக மாறுகின்றன. இந்த மரம் சனிகிரகத்தினால் உண்டாகும் நோய்களைக் குணமாக்குவதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது. சனி தோஷம் நீங்க வன்னி மரத்தைத் தினசரி அரை மணி நேரம் கட்டிப் பிடித்தால் போதும். சனி தோஷம் நீங்கும். சனி கிரகத்தின் தீய விளைவுகளும் நீங்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது. இதனால்தான் யுனானி மருத்துவர்கள் வன்னி மரத்தை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவக் குணங்கள் :
காய்: வன்னிக் காய் பெண்களின் அதிகமான மாதவிலக்கு, இரத்தப்போக்கைத் தடுக்கச் சிறந்த மருந்தாகும். இதனைப் பவுடராக்கி 5 கிராம் முதல் 7 கிராம் வரை மருந்தாகத் தரலாம்.
இந்தப் பவுடரைத் தேவைப்படும்போது சாப்பிட்டால் சீதபேதி, மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், இரத்த வாந்தி, சளியில் ரத்தம் கலந்து வரும் நோய்கள் கட்டுப்படும்.
வன்னிக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். அந்நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் ஈறுகள், பற்கள், வாய், நாக்கின் ரணம், வலி, வீக்கம் போன்றவை குணம் பெறும்.
இலை:வன்னி மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும்.
மரம்: இதன் மரத்தை எரித்துவரும் சாம்பலைக் கொண்டு பல்துலக்கினால் பற்கள் வலுப்பெறும்.
தயாரிக்கப்பட்ட மருந்துகள் :
வன்னி மரத்தைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். குறிப்பாக ஹப்பே பேசிஷ், சஃபூப் கலான், சஃபூப்சீலானுல் ரஹம், சஃபூப் கஜ்வாலா, சஃபூப் பாஸ், ஜரூர் முஜஃபஃப், தவாயே காகரா, தவாயே காஸ், மாஜுன் ஸôலப், மாஜுன் ஜாலிநியுஸ், மாஜுன் சோப்சீனி பனுஸ்கா கலான் போன்ற பலவகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
பொதுவாக மகரம், கும்பம் ராசி கொண்டவர்களுக்கும், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை மற்றும் சனிக்கிழமை பிறந்தவர்களுக்கும் உண்டாகும் நோய்களுக்கு சனிகிரகம்தான் காரணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் வன்னிமரத்தை வீட்டிலோ, தோட்டத்திலோ வளர்க்கலாம். அதனைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை மூலிகை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.
No comments:
Post a Comment