திருவள்ளுவர் சொன்னது போல காலம் கருதி செயல்கள் செய்தால் ஞாலமும் உங்கள்கையில் வரும்.
“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் இரவும் சேர்ந்த காலம் எனபொருள். அச்சொல்லில் இருந்து வந்தது தான் ஹோரா என்னும் சொல். ஹோராஎன்றால் முழு நாளில் ஒருபகுதி என்று பொருள். ஹோரா என்ற இச்சொல்பிற்காலத்தில் ஹவர் என ஆங்கிலத்தில் மாறியது. ஓரை என இதை தமிழ் படுத்தினாலும் ஹோரா என்ற மூல சொல்லில் அழைப்போம்.
(இல்லை என்றால் - “காலத்தில்” ஒருவர் ஓரை என்பது தமிழ் சொல் தான் எனபிற்காலத்தில் இடுக்கை இடுவார். :) )
ஹோரை என்பது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நேரம் என கணிக்கப்படுகிறது.வாரத்தில் ஏழு கிழமைகள் ஏழு கிரகங்களின் தன்மையால் ஆளப்படுகிறது.நவக்கிரஹங்களில் உருவ நிலையில் இருப்பது ஏழு கிரகங்கள். ராகு கேது என்பது நிழல் கிரகம் அல்லது அருவ கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. அதனால் முழுமையான கால கணக்குகளுக்கு ஏழுகிரகங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஏழுகிரஹங்கள் வார நாட்களை ஆட்சி செய்வது போல ஒவ்வொரு நாளில் இருக்கும் உட்பகுதியையும் ஆட்சி செய்கிறது.
சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை (சுமார் 60 நாழிகை) ஒரு நாள்என கணிக்கப்படுவது நமது நாள் கணக்கு. சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு கிரகம் வீதம் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும். இதற்கு ஹோரா எனபெயர்.
உதாரணமாக சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று சூரிய உதயம் காலை 6 மணிஎனக்கொண்டால் 6 முதல் 7 வரை சூரிய ஹோரை ஆகும்.
ஒவ்வொரு நாளின் அதிபதியும் அந்த வார நாளில் முதல் ஹோரையை ஆட்சி செய்துதுவக்குவார்கள். ஹோரை அமைப்பை மனதில் வைத்துகொள்ளுவது எளிது.
ஒவ்வொரு நாளுக்கும் அதிபதியை பின்னோக்கு - ஒன்று விட்டு பயன்படுத்தினால்போதும். உதாரணமாக திங்கள் கிழமை முதல் ஹோரை சந்திரன். அடுத்த ஹோரை திங்கள் கிழமையிலிருந்து பின்னோக்கு சென்றால் ஞாயிறு அதை விட்டு அடுத்த நாள் சனி.
எனவே சனி ஹோரை. சனி கிழமை பின்னோக்கி வெள்ளி - அதை விட்டு வியாழன். திங்கள் கிழமை மூன்றாம் ஹோரை குரு.
ஞாயிறு அன்று ஹோரையை பார்த்தோமானல் அதன் அதிபதிகள் கீழ்கண்ட நிலையில்இருப்பார்கள்.
அதிபதி : சூரியன் - சுக்கிரன் - புதன் - சந்திரன் - சனி - குரு - செவ்வாய்
கிழமை : ஞாயிறு - வெள்ளி - புதன் - திங்கள் - சனி - வியாழன் - செவ்வாய்
இப்படியாக 7 மணி நேரம் வீதம் 7 கிரகங்கள் மூன்றே கால் முறை ஒரு நாள் முழுவதும் ஆட்சி செய்யும்.
மனக்கணக்கிலேயே இதை கணிக்க முடியும். இதையும் மீறி எனக்கு மூளை குறைவு -ஞாபக சக்தி குறைவு என சொல்லுபவர்களுக்கு :)) சுப்பையா அவர்களின் பதிவில் இருக்கும் அட்டவணையை பார்க்கவும். சுட்டி
வெளி நாட்டில் வசிப்பவர்கள் சூரிய உதயத்தை தான் கணக்கில் கொள்ள வேண்டும். Day Light Saving கணக்கில் கொள்ள கூடாது.
பஞ்சபட்சி சாஸ்திரம் என சாஸ்திரத்தின் ஒரு பகுதிதான் ஹோரா எனும் காலமுறை.ஹோரையை பயன்படுத்தும் தன்மை வேண்டும் என்றால் முழுமையாக பஞ்சபட்சிசாஸ்திரம் தெரிந்திருந்தால் முடியும். இல்லை என்றால் அது ஒரு கால கணக்குஅவ்வளவே.
தற்சமயம் நாம் காலத்தை எண்களால் கணிக்கிறோம். ஒரு மணி , ரெண்டு மணி என...24 மணி நேரம். நீயூமராலஜியில் 5ஆம் எண் நல்லது, 8ஆம் எண் கெட்டது என்பார்கள். இக்கருத்தை நாம் பார்க்கும் கடிகார மணியில் இணைத்துக்கொண்டு 8மணி என்பது கெட்ட நேரம் என சொன்னால் அது எவ்வாறு முட்டாள்தனமோ அது போன்றது சனி ஹோரை கேட்டது குரு ஹோரை நல்லது என சொல்லுவதும்.
இன்று காலை 10 மணிக்கு உலக மக்களுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான செயல்நடந்திருக்குமா? அது போன்றது தான் ஹோரையை வைத்துகொண்டு சுப நேரங்களைபொத்தம் பொதுவாக தேர்ந்தெடுப்பதும்.
உங்கள் ஜாதகத்தில் சனி என்ற கிரகம் சிறப்பாக இருந்தால் சனி ஹோரை நல்லகாலம்தான். குரு மோசமாக இருந்தால் குரு ஹோரையில் நீங்கள் அனுபவிப்பதுவெளியில் சொல்ல முடியாது. ஆகவே ஹோரை காலத்தை உங்கள் பிறப்புஜாதகத்துடன் தொடர்புப்படுத்தியே பயன்படுத்த வேண்டும் அப்பொழுது தான் சரியானபலன்கிட்டும். அப்படி இல்லாமல் மேம்போக்காக பயன்படுத்தினால் எதிர்காலத்தில்நீங்கள் பகுத்தறிவாளராக நேரிடும். :)
ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் முதல் ஹோரை அந்த நாளின் அதிபதியால் ஆட்சிசெய்யபடுகிறது அல்லவா அந்த நேரம் எல்லா நாளும் நல்ல நேரம் தான். [ சனிக்கிழமைமுதல் ஹோரை சனி என்றாலும் நல்ல காலம் தான்].
ஜோதிடத்தில் எண்ணற்ற கால கணிதம் உண்டு. அதில் ஒருவகைதான் ஹோரா எனும் பகுப்பு. ஆதலால் இதை பயன்படுத்துவது என்றால் இதை மட்டுமே பயன்படுத்தவேண்டும். உதாரணமாக ராகு காலம் , எமகண்டம் காலத்தையும் ஹோராவையும் இணைத்து பயன்படுத்துகிறேன் என்றால் உங்களை காலதேவந்தான் காப்பாற்ற வேண்டும். காரணம் சில நல்ல ஹோரா நேரத்தில் பாதி அளவு ராகு காலத்தில் வரும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

No comments:
Post a Comment