Friday, 19 December 2014

கவிதைகள் ஜோதிடம்

இரண்டில்,ஏழில்
இணையும் பாவர்கள்
உயிரைக் கவரும்
எமதூதர்கள்.


இரண்டும், ஏழும்
மாரகமென சொல்லு. இதில்
இரண்டே சிறப்புடன்
கொல்லுமெனச்
சொல்லு.



வெள்ளியும் மதியும
எங்கேனும் கூட,
எல்லா கலைகளிலும்
மின்னியே தீருவான்

உயிரை
முடவன் காண,
மூத்தவளுடன்
முறைதவறி வாழ்வான்.


இலக்கினாதி
கடும்பாவியோடே
மறைவாகிப்போக,
சீக்காலி.


எட்டோன்
ஒன்பதோன் கூட,
தரித்திரத்தின்
சரித்திரமே இவன்தான்


பாவரோடு
அந்தணன் கேந்திரமேற,
அங்கம் பழுதாகித்
தொங்கிப் போவான்


No comments:

Post a Comment