Friday, 19 December 2014

மேல் படிப்பு படிப்பவர்கள் யார்?

மேல் படிப்பு படிப்பவர்கள் யார்?
அவரவர்களுக்குரிய ஜாதகங்களில் அமையும் கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்பக் கல்வி அமையும். தங்களின் குழந்தையை அதற்கு ஏற்றார் போல், கல்வியை கற்றுத் தந்து பயன்பெற வேண்டும்.
வித்தியாக் காரகனான புதனும், நினைவு ஆற்றலுக்கு காரகனான சந்திரனையும், ஐந்தாம் வீடும், அதன் அதிபதியும், ஐந்தாம் வீட்டில் நிற்கும் கிரகங்களையும் ஆராய வேண்டும்.
இரண்டாம் வீடும், இரண்டாம் வீட்டின் அதிபதியும், இரண்டில் இருக்கும் கிரகங்களும், பலம்பெற்று சுபர் பார்வைப் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் ஜாதகர்க்கு ஆரம்பக் கல்வி சிறப்புடன் அமையும்.
நான்காம் வீடும் அதற்குரிய கிரகமும் சுபர்பார்வை, இணைவும் பெற்றிருந்தால், ஜாதகர்க்கு உயர்கல்வி சிறப்புடன் அமையும்.
இலக்கினத்துக்கு இரண்டாமிடம், ஏழாமிடத்துக்குரியவர்களின் தொடர்போ, இணைவோ இருக்க வேண்டும். மேலும், இரண்டு, பதினொன்றுக்குரியவர்களின் பார்வையோ, இணைவோ இருக்கவேண்டும். இந்த இருவித கிரக அமைப்புகளுடன் உள்ள ஜாதகர்கள், உயர்கல்வியில் கல்வி உதவித் தொகைப் பெற்று படிக்க முடியும்.
ஒன்பதாம் வீடும், ஒன்பதாம் அதிபதியும், ஒன்பதில் உள்ளக் கிரகங்களும் சுபர் பார்வையோ, இணைவோ பெற்றிருந்தால், பட்டயக் கல்வி கற்பார்.
முயற்சிஸ்தானமான மூன்றாம் வீடும் பலம்பெற, ஜாதகர் சுறுசுறுப்புடன், பலர் ஆச்சரியப்படும் படி சிறப்புடன் செயல்படுவார்.சூரியன், புதன் இணைந்து 1,4,8 ல் பலமுடன் அமர , உயர்கல்வி அமையும்.ஐந்தாமதிபதி ஆட்சி, உச்சமடைவதும், ஐந்தாம் வீட்டை குரு, சுக்கிரன் பார்ப்பதும் உயர்கல்வியைத் தரும்

No comments:

Post a Comment