Sunday, 7 December 2014

பெண்களின் ருது கால பலன்கள்

பெண்களின் ருது கால பலன்கள்
பெண்கள் ருது ஆகும் காலம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த வேளையை வைத்து ஜாதகம் கணிப்பதும் உண்டு. ஆனால், பலர் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் ருது ஆகும் கிழமையை அனுசரித்து, உரிய பலாபலன்கள் ஜோதிட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஞாயிறு: புத்ர தோஷம், உடல் நலம் குறை ஏற்படும்.
தொடர்ந்து 9 வாரங்கள்- ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது நலம்.
திங்கள்: இந்த நாளில் ருதுவாகும் பெண், குணவதியாகவும் தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் மாதரசியாகவும் திகழ்வாள்.
செவ்வாய்: வாழ்வில் சிரமங்களையும், சவால்களையும் சமாளிக்க வேண்டியது வரும். முருகப்பெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றிவைத்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
புதன்: சௌக்கியமான வாழ்க்கை அமையும்.
வியாழன்: இந்த நாளில் ருதுவாகும் பெண் குணவதியாக இருப்பாள்.
வெள்ளி: புத்ர லாபம் உண்டாகும்.
சனி: ஏழ்மை சூழவும், முன்கோபத்துடனும் வாழும் நிலை ஏற்படலாம். தொடர்ந்து 8 வாரங்கள்… சனிக்கிழமைகளில், ஸ்ரீசனைச்சரருக்கு எள் தீபம் ஏற்றிவைத்து வழிபட சங்கடங்கள் அகலும்.

No comments:

Post a Comment