Thursday, 18 December 2014

ஏழாம், எட்டாமிடம்

பொதுவாக, திருமண வாழ்விற்கு, பிறப்பு ஜாதகத்தில் ஏழாம், எட்டாமிடங்களில் எந்த கிரகங்களும் சுத்தமாக இல்லாமல் இருப்பது நல்லது. அழகானவர்கள் வாழ்க்கைத் துணைவராக யாருக்கெல்லாம் அமைவார்கள் என்று, முன்பே கட்டுரை வடிவில் தந்துவிட்டாலும், இங்கேயும் சிறு குறிப்பாகத் தரவிரும்புகிறேன்.
உங்களின் இலக்கினத்திற்கு நீச, அத்தமன, வக்கிர நிலையில் எந்த கோள்களும் இருக்கக் கூடாது. குறிப்பாக, உங்கள் இலக்கினத்திற்கு ஏழாமிடம் என்பது, உங்களின் வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவரின் இலக்கினம் என்பதை உணருங்கள். அது உங்கள் வாழ்க்கைத் துணையின் முகத்தைக் குறிக்கும் இடமாகும். அதில் குரூரக்கோளான சனியெனும் இருள்கோள் இருக்கக் கூடாது. அவ்வாறே இருந்தாலும், அக்கோள் நீச, அத்தமன, வக்கிர நிலையிலும் காணக் கூடாது. மேலும், இராகு, கேதுவெனும் நிழல்கிரகங்கள், ஏஷாமிடதைக் காணாமல் இருப்பதே நல்லது. காரணம், அவைகள் பின்னோக்கிச் சுழலும் லிரகங்களாகும்.
ஆண்பெண் இருபாலருக்கும், வாழ்க்கைத் துணையைக் கொடுக்கும் இடத்தின் அதிபதி, சூரியனுக்கு மறைவிடத்தில் இருக்கக் கூடாது. ஏழாமதிபதி ஏழாமிடத்திற்கு மறைவிடத்தினில் இருக்கக் கூடாது. ஏழாமதிபதி நீச, அத்தமன, வக்கிரநிலையில் இருக்கக்கூடாது. வாழ்க்கையின் துவக்கத்திற்கு தோற்றப் பொலிவும், கவனத்துடன் பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment