Tuesday, 17 February 2015

மகர லக்கினம் ,விருச்சிக லக்கினம்,கடக லக்கினம் :

மகர லக்கினம் :

மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ல் அமரும் சனி பகவான் மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குகிறார், எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு இணங்க ஜாதகர் நினைக்கும் நல்ல காரியங்கள் யாவும் தங்கு தடையின்றி நடைபெறும், இதுவரை இல்லாத செல்வாக்கு மக்கள் ஆதரவு ஜாதகருக்கு திடீரென தேடிவரும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும் லட்சியங்கள் கைகூடும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து மிகுந்த முன்னேற்றத்தை இனிவரும் காலங்களில் பெறுவார் குறிப்பாக உணவு சார்ந்த தொழில்கள் அல்லது விவாசாய உற்பத்தி பொருட்கள், நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டமும் லாபமும் உண்டாகும்.

4ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு திடீர் சொத்து சுகத்தை வாரி வழங்குகிறார், தனது பெயரில் உள்ள சொத்து அல்லது வண்டி வாகன விருத்தி பெரும் யோகத்தை தருகிறார், இருப்பினும் இது சார்ந்த தொந்தரவுகளும் ஏற்ப்படும் வண்டி வாகனத்தில் பழுது, சொத்து அல்லது வீடு போன்றவற்றில் பழுது ஏற்ப்பட்டு சரி செய்யும் தன்மையை தருகிறார், விரையத்தின் பேரில் லாபம் உண்டாகும் , ஜாதகர் பயணங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், வண்டி வாகன அமைப்புகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்வதும், எதிரில் வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு இயக்குவதும் அவசியம், கவனக் குறைவுடனும் தூக்க கலக்கத்துடன் வாகங்களை இயக்குவது பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும், இது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும், வண்டி வாகனங்களுக்கு சேதாரத்தை தர கூடும், தனது பெயரில் உள்ள சொத்துகளை கவனமாக பாதுக்கக்க வேண்டி வரும்.

5ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் தங்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் சிறு சிறு தொந்தரவுகளை தந்த போதிலும், நிறைவான வருமான வாய்ப்பை தங்கு தடையின்றி செய்வார், கல்வி காலங்களில் உள்ள அன்பர்கள் மிக கவனமுடன் தேர்வுகளை எதிர்கொள்வது நலம் தரும், சிந்தனை ஆற்றல் சில நேரங்களில் பாதிப்பை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் நன்கு ஆலோசனை செய்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் உள்ள நபர்கள் தேவையற்ற விஷயங்களை விவாதிப்பதை தவிர்ப்பது நலம் தரும், சிறு சிறு பிரச்சனைகளை உடனடியாக பேசி தீர்வு காண்பது  நலம் தரும் அலட்சியமாக இருந்தால், பின்னாளில் பெரிய பாதிப்பை தரும், வருமானம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை சரியாக கையாள்வது சால சிறந்தது, சரியான திட்டமிடுதல் தங்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கும், குடும்ப உறவுகளுடன் ஒற்றுமை காண்பது அவசியம், விட்டுகொடுத்து செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

8ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு எதிர்பாராத சோதனைகளை தரக்கூடும், முன் பின் யோசிக்காமல் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தங்களுக்கு எதிராக திரும்பும், மேலும் சிந்தித்து செயல்படும் தன்மையை வெகுவாக குறைக்கும், தங்களுது உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைப்பது சற்றே கடினம், தங்களது குல தெய்வத்தை முறையாக வழிபடுவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், எடுத்த காரியங்கள் செவ்வனே நடைபெற இறை அருளின் கருணையை நாடுவது நலம், கோவில் வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதும், சிறந்த ஆன்மீக குருவை நாடி சரியான வழிகாட்டுதல்களை பெறுவதும் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை பெற்று தரும், சிந்திக்கும் திறனை கடுமையாக பாதிப்பதால் தாங்கள் அதிகாலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் தொடர்ந்து அனுதினமும் செய்துவருவது சகல நன்மைகளையும் தரும், மனதை ஒரு நிலை படுத்தி சுய கட்டுபாடுடன் நடந்து கொள்வது தங்களின் கடமை.

மகர இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, 

விருச்சிக லக்கினம் : 


லக்கினத்தில் அமர்ந்த சனி பகவான் தங்களுக்கு மனோ ரீதியான போராட்டங்களை தந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானத்தை தரும் வாய்ப்பை தருகிறார், குடும்பத்தில் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், தன்னம்பிக்கை மேலோங்கும், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் வாழ்க்கை பிரகாசிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு திடீரென சென்றுவரும் யோகத்தை தரும், எதிர்பாராத உதவிகள் திடீரென கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தனது சிந்தனையும் மனதையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் ஒருமுகபடுத்துவது சால சிறந்தது, தெளிவான சிந்தனையும் செயல்பாடுகளுமே ஜாதகருக்கு வெற்றியை தரும் என்பதால் தனது சுய முன்னேற்றத்தில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது நல்லது, நல்ல வேலையாட்கள் கிடைக்கும் யோக காலம் இதுவென்பதால், ஜாதகர் தான் செய்துவரும் தொழில்களில் விருத்தியை பெறுவதற்கு உண்டான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு எதிராக செயல்படும் அன்பர்கள் மூலமாகவே நன்மையை பெறுவார், மேலும்  ஜாதகருக்கு சில நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து வருமான வாய்ப்பை தந்த வண்ணமே இருப்பார் என்பதை கவனத்தில் கொள்வது சால சிறந்தது, சனி பகவான் தரும் வருமான வாய்ப்புகள் யாவும் சனி பெருக்கம் போல் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைத்து ஜாதகர் தனது செயல்பாடுகளை அமைத்துகொல்வது சிறந்த நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்ற விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும், ஜாதகரை தேடி பண உதவிகள் வந்த வண்ணமே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவது மிகுந்த நன்மையை தரும், புதிய பொருட்கள் இயந்திர பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு 100% விகித வெற்றியை தரும், உடல் நிலையில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, ஏனெனில் வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும், மருத்துவ சிகிச்சை தவிர்க்க இயலாது, சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது பெரிய தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றும்.

7ம் பார்வையாக களத்திர பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஆதரவை வாரி வழங்குகிறார், குடும்ப வாழ்க்கையில் எவ்வித தொந்தரவும் இன்றி சுமுகமான உறவுகள் நீடிக்கும், பிரிவு வரை சென்ற தம்பதியரை சேர்த்து வைக்கும் வல்லமையை சனிபகவான் தனது பார்வையின் மூலம் தருகிறார், வருமான வாய்ப்புகள் என்பது ஸ்திரமான தன்மையுடன் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, கை நிறைவான வருமானம் மூலம் ஜாதகரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், புதிய வீட்டிற்கு தேவையான உபகரணங்களையும், வழக்கை துணைக்கு தேவையான ஆடை ஆபரணங்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், கல்வியில் ஏற்ப்பட்ட தடைகள் நீங்கி, கல்வியில் வெற்றியும் உயர் கல்விக்கு உண்டான வாய்ப்பும் உண்டாகும், ஜாதகருக்கு குடும்பம், வாழ்க்கை துணை, வருமானம் என்ற அமைப்பில் இருந்து 100% விகித வெற்றி நிச்சயம் உண்டு என்பதால், இனிவரும் காலங்களை விரிச்சிக லக்கினம் கொண்டவர்கள் சிறப்பாக கையாண்டு நன்மை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக ஜீவன ஸ்தான அமைப்பை வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் ஜீவன மேன்மையை எதிர்பாராத வண்ணம் ஸ்திர தன்மையுடன் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, ஜாதகரின் குல தெய்வ அருளால் புதிய தொழில் துவக்கம், புதிய தொழில் வாய்ப்புகள், சிறந்த வேலைவாய்ப்பை பெரும் யோகம் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெகு விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் லாபம், தனது அறிவார்ந்த செயல்திறனால் சமுகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் கௌரவத்தை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தன்னிறைவான பெருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான சரியான நேரம் இதுவே என்று ஜாதகர் செயலாற்றும் தருணம் என்பதால், வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி நிலையான வெற்றி காண்பது இவர்களது கடமை, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள், நிச்சயம் தாங்கள் ஆற்றிய கடமைக்கு 100% விகித பலன்கள் உறுதியாக கிடைக்கும்.

விரிச்சிக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க
கடக லக்கினம் :

5ல் அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு நினைவாற்றலையும், சிந்தனை திறனையும் வெகுவாக குறைப்பார், ஞாபக மறதியால் திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது , வெளிநாடுகளில் இருப்பவர்கள் முதலீடுகளை செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம், மற்றவருக்கு பண உதவிகள் செய்யும் பொழுது  உண்மை காரணத்தை அறிந்து செய்யுங்கள், இல்லை எனில் தேவையில்லாத மன உளச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் காலம் இதுவென்பதால் ஜாதகர் தனது பிரச்சனைகளுக்கு தானே தீர்வுகளை தேடிகொள்வது சால சிறந்தது, முன் பின் யோசனை செய்யாமல் எடுக்கும் எந்த ஒரு காரியமும் எதிர்பாராத தடைகளை சந்திக்கும் என்பதால், நன்கு ஆலோசனை செய்து செயல்படுவது மிகுந்த யோகத்தை  தரும், இனிவரும் காலங்களில் ஜாதகர் மனோ ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளை அதிகம் தருவதால், தன்னம்பிக்கையை வளர்த்துகொள்வது நல்லது, அல்லது நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும், தனது தாய் தந்தையின் மனம் நோகமால்  நடந்துகொள்வது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை அபரிவிதமாக வாரி வழங்குகிறார், இதுவரை மந்த நிலையில் சென்று கொண்டு இருந்த தொழில் இனி காட்டு தீ போல் வெகு வேகமாக முன்னேற்றத்தை தரும், குறிப்பாக தினம் தினம் அழியும் தன்மை கொண்ட உணவு பொருட்களை, வியாபாரமாக செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம், மேலும் விவசாயம், விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் தொழில்களில் உள்ளவர்களுக்கு இது  ஒரு வருமான வாய்ப்பை வழங்கும் பொற்காலம், அரசு துறை வேலையை எத்திர்பார்த்து  இருப்பவர்களுக்கு திடீரென வேலைவாய்ப்பு கிடைக்கும், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திடீரென பதவி உயர்வு உண்டாகும், ராணுவம் மற்றும் காவல் துறையில் பணிபுரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், சுய தொழில் செய்வோருக்கு இனி வரும் இரண்டரை வருடங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும் .

7ம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே சகல அதிர்ஷ்டங்களையும் பெரும் யோகத்தை  தருகிறார், நேற்றுவரை சாமானியராக இருந்தவர்கள் இன்றுமுதல் அதிர்ஷ்ட தேவதையில் அருளை பெற்றவர்கள் ஆகிறார்கள், வருமான வாய்ப்பு ஜாதகரின் வாயிற்க் கதவை வழிய வந்து தட்டும், குறிப்பாக வட்டி தொழில் நகை வீடு அடமான கடன் தொழில் செய்பவர்களுக்கு இது ஏற்றமிகு யோக காலம்,  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும், ஜாதகரின் கட்டளைக்கு அனைவரும் அடிபணிந்து நடக்கும் யோகத்தை தரும், தனது சுய உழைப்பால் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தரும், முற்போக்கு சிந்தனையுடன் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும் , தனது வாத திறமையால் அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை தரும்.

10ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு குடும்பத்தில் சிறு சிறு சிரமங்களை தந்த போதிலும், வருமான வாய்ப்பை குறைக்க மாட்டார், ஜாதகர் தனது குல தெய்வத்தை நாடி வழிபாடு செய்வதால் சகல நலன்களும் பெறுவார், தனக்கு வரும் வருமானத்தை தேவையில்லாத செலவுகளை செய்து வீண் விரயம் செயாமல் இருப்பது  நலம் தரும், குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது சால சிறந்தது, உதாரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரது உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், அதே போன்று தங்களின் உடல் நலனினிலும் கவனமாக இருப்பது நலம், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க கூடும், உணவு பழக்க வழக்கங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், ஜாதகர் தனக்கு வரும் வருமானத்தை சேமிக்கவும், திட்டமிட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இனி வரும் இரண்டரை வருடகாலம் தரும்.


கடக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது 

No comments:

Post a Comment