சாய கிரகமான ராகு கேது கிரகங்களின் சரித்திர கதையை நாம் சிந்தனைக்கு எடுத்துகொள்ளும் பொழுது, பாற்கடலை கடைந்து அதில் வரும் அமிர்தத்தை, தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டு அருத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டனர் , இதன் அடிப்படையில் பாற்கடலை கடைந்து அமிர்தம் கிடைத்தவுடன் விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அமிர்த கலசத்தை பெற்று, தேவர்கள் அசுரர்களுக்கு பரிமாருவதாக நிர்ணயம் செய்யப்பட்டது, அசுரர்கள் தமக்கு வழங்குவது அமிர்தமல்ல என்பதை உணராமல் மோகினியின் அழகில் மயங்கிய நின்றனர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட மோகினி முதலில் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை பரிமாறினாள்.
இந்த சதியை உணர்ந்த கஷ்யப மகரிஷியின் மகனான சுவர்ணபானு, தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி தேவர்களின் வடிவம் எடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்தார், இதை உணர்ந்த சூரியனும் சந்திரனும் மோகினியை தடுக்கும் முன் சுவர்ணபனுக்கு அமிர்தத்தை அருந்த கொடுத்து விட்டாள், சூரியனும் சந்திரனும் நடந்த உண்மையை மோகினியிடம் எடுத்து கூறினர், கடுங்கோபம் கொண்ட மோகினி அமுதம் வழங்கிய அகப்பையால் சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடிக்க, சுவர்ண பானுவின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் பிரிந்தது.
அமிர்தம் அருந்தியதால் சுவர்ணபானுவின் உயிர் பிரியாமல் தலையும் உடலும் தனித்தனியாக கிடந்தது, இதை அறிந்த அசுரர்கள் மோகினியின் கையில் இருந்த அமுத கலசத்தை பிடுங்க முயற்ச்சி செய்ய, சுவர்ணபானு செய்த தவறுக்கு அசுரர்களுக்கு அமிர்தம் இல்லை என்று சொன்ன மோகினி, அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு மட்டும் வேகமாக வழங்கிவிட்டு சென்று விட்டாள், சுவர்ணபானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என்று எண்ணிய அசுரர்கள் சுவர்ணபானுவை தம் அசுர குலத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.
தனக்கு உயிர் இருந்த போதிலும் உடல் வேறாக தலை வேறாக இருப்பதை எண்ணிய சுவர்ணபானு, பிரம்மனிடம் முறையிட பிரம்மாவோ இதற்க்கு தீர்வு பரம்பொருளான மஹாவிஷ்ணு மட்டுமே வழங்கமுடியும் என்று சொல்ல, சுவர்ணபானு மஹாவிஷ்ணுவை வணங்கி பிராயசித்தம் வேண்டும் பொழுது எம்பெருமான் அருள் கூர்ந்து சுவர்ணபானுவின் தலைக்கு பாம்பு உடலையும், உடலுக்கு பாம்பு தலையையும் வழங்கி, சுவர்ணபனுவின் தலைக்கு ராகு எனவும், உடலுக்கு கேது எனவும் பெயர் வழங்கி கிரக அந்தஸ்தை வழங்குகிறார், மேலும் கிரகங்களின் அமைப்பில் இருந்து வித்தியாசத்தை பெற வானவெளியில் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்ய இறைவன் கட்டளை இடுகிறார், இதை ஏற்று ராகு கேது இருவரும் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்கின்றனர்.
தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க தவம் இருந்து பிரம்மாவிடம் வரம் கோருகின்றனர், சாய கிரகங்கள் பெற்ற வரத்தின் படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வல்லமையை பெறுகின்றனர், இந்த நிகழ்வை சூரிய கிரகணம் என்றும், சந்திர கிரகணம் என்றும் வழங்கபடுகிறது, இந்த கிரகண நேரத்தில் அதிசக்தி வாய்ந்ததாக கருதப்படும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மையை சாய கிரகங்களான ராகு கேது பெறுகின்றனர்.
ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் வலிமை பெற்று அமரும் பொழுது அந்த ஜாதகர் தனது வாழ்க்கையில் பெரும் வெற்றிகளுக்கும், அதிர்ஷ்ட வாழ்க்கைக்கும் தங்கு தடை என்பதே கிடையாது எனலாம், இந்த சிறப்புகளை பெற்ற சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் வல்லமை பெற்ற சாயகிரகமான ராகு கேதுவின் வல்லமையை பற்றி சொல்லவும் வேண்டுமோ? ஆக கிரகங்களின் அதிக வலிமை பெற்றதாக ராகு கேதுவை வர்ணனை செய்தது துளியும் தவறில்லை என்றே ஜோதிடதீபம் 100% விகிதம் கருதுகிறது.
எமது குருவின் கருத்துப்படி, சாய கிரகங்கள் ஆன ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி குறிப்பிட்ட பாவகத்தை தனது ஆளுமைக்கு கிழ் 100% விகிதம் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற உண்மை மிக சரியாக பொருந்துகிறது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையையும், தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் வலிமையையும் தானே ஏற்று நடத்துவார்கள் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மையையோ அல்லது தீமையையோ 100% விகிதம் எவ்வித குறையும் இன்றி செய்வார்கள் என்பதும் முற்றிலும் உண்மை.
சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் நன்மை மற்றும் யோகத்தை அனுபவிப்பர், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தீமை மற்றும் அவயோகத்தை அனுபவிப்பர், இதை மாற்ற எவராலும் இயலாது, சாய கிரகங்களால் வரும் இன்னல்களை கலைய எந்த ஒரு பரிகாரமும் பலன் தாரது, ஏனெனில் இதுவே ராகு கேதுவின் தனித்தன்மை,
மேற்கண்ட ராகு கேதுவின் சரித்திர கதையில் இருந்தே இதை நாம் உணராலாம், முப்பத்து முக்கோடி தேவர்களையும் அமிர்தம் வழங்கிய எம்பெருமான் மகாவிஷ்ணுவையும் ஏமாற்றி அசுரனான சுவர்ணபானு தனது தனி திறமையால் அமிர்தத்தை அருந்த முடிகிறது என்றால், நவக்கிரக அந்தஸ்து பெற்ற சாய கிரகமான ராகு கேது ஏன் ? தனிப்பட்ட வல்லமையுடன் திகழ முடியாது, ஆக நவகிரகங்களிலேயே அதி சக்தி கொண்டதாக சாய கிரகமான ராகு கேதுவை வர்ண்ணனை செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்றே ஜோதிடதீபம் கருதுகிறது.
ராகு வலிமை பெரும் ஜாதகம் :
தனிப்பட்ட தன்மைகளை தன்னகத்தே கொண்ட ஜாதகராக கருதலாம், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், அசுர பலம் கொண்ட அமைப்பை பெறுவார்கள், பெரிய அறிவியல் வல்லுனர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், உடல் மனம் இரண்டிலும் நிகரில்லா வலிமையை பெற்றவர்கள், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டவர்கள், தனது கட்டளைக்கு அனைவரையும் கட்டுபட்டு நடக்க வைக்கும் தன்மை பெற்றவர்கள், தான் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட மக்களை தன் கண் அசைவில் கட்டுபடுத்தும் வல்லமையாலர்களாக திகழ்வார்கள்.
பொதுவாக அதிகாரம் செய்வதில் செவ்வாய் சூரியன் சிறந்து விளங்குபவர்களாக ஜோதிடர்களால் வர்ணிக்க படுவார்கள், ஆனால் ராகுவின் முன்னால் இவர்களின் திறன் வெறும் 10% விகிதம் மட்டுமே என்பதை நினைவில் நிறுத்தினால் ராகுவின் ஆளுமை மிக எளிதாக நமக்கு புரியும், உலகின் வல்லரசான நாடுகள் அனைத்தும் ராகுவின் கருணை இன்றி செயல்பட முடியாது என்பதை கருத்தில் கொள்வது நலம், வீர்யமிக்க செயல்பாடுகள், தான் நினைக்கும் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை, தனது தேடுதலுக்கு உண்டான சரியான பதில் அல்லது பயன்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் தருவது ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, ராகு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் புலன் அடக்கம் பற்றிய தெளிவில் இருப்பார்கள், வாழ்க்கையை இயல்பாக வாழும் தன்மையை பெற்று இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது.
கேது வலிமை பெரும் ஜாதகம் :
தனிப்பட்ட அமைப்புடன் குழுவாக செயல்படும் தன்மையை பெற்று இருப்பார்கள், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், ஆத்மா பலம் கொண்டவர்களாக திகழ்வார்கள், ஆன்மீக வெற்றியை பெரும் யோகம் பெற்றவர்கள், புலன்களை அடக்கி ஆளும் வல்லமை ஜாதகருக்கு இயல்பாகவே அமைந்திருக்கும், குறிப்பாக செயல்திறன் மற்றும் அறிவில் தெளிவு பெற்றவர்களாகவும், பலரது கேள்விகளுக்கு சரியான பதில்தரும் ஞானம் பெற்றவர்களாகவும், சமுதாயத்தை அன்பின் வழியிலும் அறவழியிலும் இயக்கும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறனால் சாதிக்க இயலாத விஷயம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும்.
ஜோதிட ரீதியாக குரு,புதனுக்கு நிகரான 3 மடங்கு அறிவு திறனையும், இயக்க சக்தியையும் வாரி வழங்கும் தன்மையை பெற்றவர் கேது பகவான், சிறந்த ஆன்மீகவாதிகள், இறை நிலை சிந்தனையாளர்கள், வருமுன் உணரும் சக்தி படைத்தவர்கள், கல்வி கேள்விகளில் புகழ் பெரும் விற்பனர்கள், ஜோதிட கணித மேதைகள், பல சாம்ராஜ்யங்களை கட்டியாளும் தனி திறமைகளை கொண்டவர்கள், சாஷ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் வகுக்கும் வல்லமை பெற்றவர்கள், பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவர்கள், இறை நிலையுடன் ஜீவகலப்பு பெரும் யோகம் பெற்றவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் கேது பகவான் மிகவும் சிறப்பாக பஞ்சபூத தத்துவ அமைப்பில் அமர்ந்திருப்பார் என்பது கவனிக்க தக்கது.
எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகமான ராகு கேது வலிமை பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையையே பெற்று தரும் என்பதை மறுக்கவும் இயலாது, மாற்றவும் முடியாது.

No comments:
Post a Comment