Tuesday, 17 February 2015

பூர்ண கும்ப வழிபாடு

பூர்ண என்பது நிறைவு,கும்பம் என்பது கலசம்.பூர்ண கும்பம் என்பது நிறைவான கலசம் என்று பொருளாகும்.கலசம் நிறைய தூய்மையான தண்ணீர் நிரப்பி புதிய மாவிலைகளை வைத்து அதன் நடுவே தேங்காய் வைத்து வழிபடுவது பூர்ண கும்பமாகும்.மண், செம்பு, வெள்ளி கலசங்கள் புனிதமாக கருதப்படுகின்றன.

பூர்ண கும்ப வழிபாடின் தத்துவம் என்னவென்றால்,மனிதனது வாழ்க்கை எந்த குற்றம்,குறைகளும் இல்லாமல் முழுமையானதாக இருக்க வேண்டும்.எடுத்த காரியம் பூரணமாக நிறைவுற வேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும்.

வேத காலத்தில் இருந்தே இந்த வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.பூர்ண கும்பத்தின் ஐதீகம் என்னவென்றால் பாற்கடலை கடையும் போது விஷ்ணு அமிர்த கலசத்தை ஏந்தியபடி நின்றதால் அனைத்து தெய்வங்களும் பூர்ண கும்பத்தில் நிறைந்து இருப்பதாக நம்ப படுகிறது.

பூர்ண கும்ப வழிபாடு புதுமனை புகு விழா, திருமணம், பண்டிகைகள் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் நிச்சயம் உண்டு.

No comments:

Post a Comment