Tuesday, 17 February 2015

குழந்தை பிறக்கும் நேரம் என்று எதை எடுத்துகொள்வது ? குழந்தை தலை வெளிவரும் நேரமா ? அல்லது முதல் இதய துடிப்பு நேரமா ?

குழந்தை பிறக்கும் நேரம் என்று எதை எடுத்துகொள்வது ? குழந்தை தலை வெளிவரும் நேரமா ? அல்லது முதல் இதய துடிப்பு நேரமா ?





பொதுவாக குழந்தை பிறந்த நேரத்தை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்கள் இந்த நவீன காலத்தில் ஏற்ப்படுகிறது, தாங்கள் சொன்னது போல் குழந்தை தலை வெளிவரும் நேரம் என்று எடுத்து கொண்டாலும் குழப்பமே மிஞ்சும், முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும் .


ஆக குழந்தை எப்பொழுது சுயமாக பூலோக காற்றை சுவாசிக் ஆரம்பித்து தனது, ஜீவ வாழக்கையை ஆரம்பிக்கிறதோ அந்த வினாடியே குழந்தை உண்மையான பிறந்த நேரம் என்று நிர்ணயம் செய்யலாம், குறிப்பாக குழந்தையின் சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிட முறையில் சிறப்பான வழிகாட்டுதல்கள் உண்டு, எனவே நமது ஜோதிட முறையில் பலன் காணும் அன்பர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்பு மிக மிக குறைவு என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி .

ஒரு குழந்தையின் பிறப்பை துல்லியமாக தெரிந்துகொண்டால், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை நடைபெறும் நன்மை தீமை பலன்களை தெள்ள தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடியும் , ஜாதகர் அடிப்படையில் வளரும் சூழ்நிலை , ஜாதகருக்கு அமையும் உடல் நிலை , கல்வியில் பெரும் வெற்றி, ஜீவன வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றம் , இல்லற வாழ்க்கையில்  அனுபவிக்கும் இன்பம், ஜாதகருக்கு அமையும் குழந்தை பேரு, என்ற நிலைகளில் இருந்து , ஜாதகரின் ஆயுள் அமைப்பினை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

பொதுவாக குழந்தை பிறப்பில் சில நிமிடங்கள் குழப்பம் வர கூடும், அந்த குழப்பத்தை நீக்கவும் , சரியான பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளவும் நமது ஜோதிட முறையில் வழி உண்டு , இதற்க்கு தேவை 1) ஜாதகரின் பிறந்த தேதி , 2) ஜாதகரின் பிறந்த நேரம் 3) ஜாதகரின் பிறந்த இடம் ஆகியன மட்டுமே, மேற்க்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை எடுத்துவிட முடியும் , ஜாதகரின் ஜாதக பலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும் இதன் மூலம் ஜாதகரின் வாழ்க்கையை செழுமையாக வாழும் நிலையினை பெறலாம்.

மேலும் நவீன காலத்தில் நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பினை பலர் நிர்ணயம் செய்கின்றனர், இந்த அமைப்பும் ஜாதகருக்கு சரியான பலனை நிர்ணயம் செய்வதில்லை என்ற உண்மையை உணருவது அவசியம், இயற்கையாக பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும், நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும் பல சூட்சம விஷயங்கள் உண்டு , அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தையின் சரியான ஜாதகத்தை எடுப்பதே ஜோதிடரின் முழு திறமை அடங்கி இருக்கிறது .

எந்த காரணத்தை கொண்டும் இயற்கையாக பிறக்கும் குழந்தையை, நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பை நாம் நிர்ணயம் செய்வது, ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கி விடாது என்ற உண்மையை உணருவது அவசியம், சிறப்பான நேரம் என்று தாங்கள் நிர்ணயம் செய்யும் நேரம் கூட சில வினாடிகளில் ஜாதக பலன்களை மாற்றி அமைத்துவிடும் .

நமது பூர்வ புண்ணிய அமைப்பினை கொண்டும், பாக்கிய நிலையின் அடிப்படையிலும், நாம் செய்த வினை பதிவின் அடிப்படையிலுமே, நமக்கு பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை மற்றும் ஜாதக யோக நிலை இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது என்ற அடிப்படை விஷயத்தை அனைவரும் கருத்தில் கொண்டால், நிச்சயம் மேற்கண்ட குழப்பங்கள் வர சிறிதும் வாய்ப்பில்லை 

No comments:

Post a Comment