Tuesday, 17 February 2015

திருமணம் தாமதம் ஆக ராகு கேது, செவ்வாய் தோஷம் காரணமா?

திருமணம் தாமதம் ஆக ராகு கேது, செவ்வாய் தோஷம் காரணமா?

  



பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதமானால், திருமண தாமதத்திற்கு முதல் காரணமாக ராகு கேது தோஷம் என்பதாக இருக்கிறது, இரண்டாவது காரணம் செவ்வாய் தோஷம் என்பதாகவும், மூன்றாவதாக களத்திர தோஷம் என்பதாகவும், நான்காவதாக குரு பலன் இல்லை என்பதாகவும் ஜோதிடர்களால் அறிவுறுத்த படுகிறது, இதில் முதன்மை வகிப்பது ராகு கேது தோஷமும், செவ்வாய் தோஷமும் என்றால் அது மிகையில்லை, இதன் அடிப்படையில் மக்கள் பலர் ராகு கேது சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு படையெடுப்பதும், இதற்க்கு ஒருபடி மேலே சென்று பரிகாரம் என்ற பெயரில் மக்கள் பெருள் இழப்பை அடைவதும் வாடிக்கை ஆகிவிட்டது எனலாம்.

 சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 1,2,5,7,8,12ம் பாவகங்களில் ராகு கேது அமர்ந்திருந்தாலோ, 2,4,7,8,12ம் பாவகங்களில்செவ்வாய் அமர்ந்திருந்தாலோ தோஷம் என்று நிர்ணயம் செய்து, திருமண தாமதத்திற்கு காரணமாக மேற்க்கண்ட விஷயத்தை பல ஜோதிடர்கள் முன்னிறுத்துகின்றனர், பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆவதிர்க்கு சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலோ, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்தாலோ ஜாதகருக்கு திருமணம் வாழ்க்கை அமைவதற்கு தடை ஏற்படும் அல்லது காலதாமதம் ஏற்ப்படும், ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகிறது என்றவுடனே அதற்க்கு காரணம், ராகு கேது அல்லது செவ்வாய்தான் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான ஒரு விஷயம்.

 ஒருவேளை ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு, இந்த இரண்டு காரணத்தை தவிர சுய ஜாதகம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட இரண்டு காரணத்தை தவிர வேறு காரணங்கள் ஜாதகருக்கு திருமண தாமதத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பில்லை எனலாம், இதற்க்கு காரணமாக ராகு கேது 1,2,5,7,8,12ம் பாவகங்களில் அமர்வதாலோ, செவ்வாய் 2,4,7,8,12ம் பாவகங்களில் அமர்வதாலோ, குருபலன் என்று சொல்லும் ஜாதகரின் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் குருபகவான் 2,5,7,9,11ம் சஞ்சாரம் செய்யாத காரணத்தாலோ திருமணம் தாமதம் அடைய வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment