சுய ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாக காரணம் என்ன ?
மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், களத்திர ஸ்தானமான துலாமும் பாதிக்க படாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும், மேலும் சிறப்பான மணமகனையோ, மணமகளையோ அமைத்து தரும் என்பது நிச்சயம்.
ஒருவேளை குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க பட்ட போதிலும் இந்த இரண்டு பாவகங்களின் பலனை திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு ஏதாவது ஒருவகையில் திருமணம் நடைபெற்று விடும், இதற்க்கு மாறாக திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதிக்க பட்ட குடும்ப மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம், மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை தவிர்த்து, திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வருவது சால சிறந்தது.
அல்லது தனது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்களுக்கு அதிபதியாக வரும் கிரகங்களை ( இங்கு குறிப்பிடும் கிரகங்கள் சம்பந்தபட்ட பாவக ராசி அதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே !) வழிபாடு செய்வதும், பாதிக்க பட்ட பாவகம் சார்ந்த உறவுகளுக்கு நன்மை செய்வதும், அதன் வழியில் நடைபெறும் துன்பங்களில் இருந்தும், திருமண தடை அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக திருமண தாமதத்தை தவிர்த்து விரைவில் திருமணம் நடைபெறும்.
No comments:
Post a Comment