Tuesday 17 February 2015

சுய ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் காண்பது எப்படி ?

சுய ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் காண்பது எப்படி ?






 திருமணம்  பொருத்தம் காண்பதில் பல்வேறு குழப்பங்கள், தற்பொழுது இருப்பது எதார்த்தமான உண்மையே! வரன் வீட்டில் ஜாதகம் பொருத்தம் காணும் ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்கிறார், வதுவின் வீட்டில் ஜாதக பொருத்தம் காணும் ஜோதிடர் பொருத்தம் இல்லை என்கிறார், திருமண பொருத்தம் காண்பதில் ஜோதிடர்களுக்கு இடையே இவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்ப்படும் பொழுது, திருமண பொருத்தம் காண வந்தவர்களின் நிலை என்னவாகும், மேலும் பாரம்பரிய முறைப்படி திருமணம் பொருத்தம் காணும் ஜோதிடர்கள் ஜாதக ரீதியாக கவனிக்கும் விஷயங்களை பற்றியும், இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

1) நட்சத்திர பொருத்தம் :

 பாரம்பரிய ஜோதிடத்தில் ஜாதக பொருத்தம் காணும் பொழுது அடிப்படையாக, அனைத்து ஜோதிடர்களும் கவனத்தில் எடுத்துகொள்ளும் விஷயம் நட்சத்திர பொருத்தமே என்றால் அது மிகையில்லை, இதன் வழியே பொருத்தம் காண வந்த வரன் வது, இருவரின் ஜெனன நட்சத்திரத்தை வைத்து   

( தினம்,கணம்,மாகேந்திரம்,ஸ்திரீ தீர்க்கம்,யோனி,ராசி,ராசி அதிபதி,வசியம்,ரஜ்ஜு,நாடி,வேதை ) 

எனும் 11 பொருத்தங்களை இருவரின் நட்சத்திரங்களுக்கும் கண்டு, குறைந்த பட்சம் 7 நட்சத்திர பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்று பரிந்துரைகின்றனர்.

குறிப்பு : 

 நட்சத்திர பொருத்ததில் ரஜ்ஜு, வசியம், யோனி,மாகேந்திரம்,ஸ்திரீ தீர்க்கம் ஆகியவை மிக முக்கிய பொருத்தமாக கவனிக்க படுகிறது, ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் பொருத்தம் இல்லை என்று திருமணம் தவிர்க்க படுகிறது.

2) ராகு கேது தோஷம் :

ராகு கேது தோஷம் தற்பொழுது வரன் வது இருவரின் பெற்றோர்களும் ஜாதக ரீதியாக கவனிக்கும் அளவிற்கு இருக்கின்றது, லக்கினத்தில் இருந்து 1,2,5,6,7,8,12ம் ராசிகளில் ராகு கேது அமர்ந்தால் அந்த ஜாதகம் ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம் என்று நிர்ணயம் செய்யபடுகிறது, மேலும் வரன் வது இருவரின் ஜாதகத்திலும் ராகு கேது தோஷம் உள்ளதாக இணைப்பது திருமண வாழ்க்கையை சிறப்ப அமைத்து தரும் என்பது பாரம்பரிய ஜோதிடர்களின் கணிப்பு, ராகு கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன், ராகு கேது தோஷம் இருக்கின்ற ஜாதகத்தை இணைப்பது சரியான பொருத்தம் அல்ல என்பதும் இவர்களின் கருத்து, மேலும் அப்படி இணைக்கும் ஜாதகம் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மற்றும் என்பதும் இவர்களின் கருத்து.

3) செவ்வாய் தோஷம் :

லக்கினத்தில் இருந்து செவ்வாய் பகவான் 2,4,7,8,12ம் ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றும், வரன் வது இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் பகவான் லக்கினத்தில் இருந்து மேற்கண்ட ராசிகளில் இருப்பதை போலவே தேர்வு செய்து திருமணம் செய்வது, இருவரின் திருமண  வாழ்க்கையை சிறப்பாக நீடிக்க செய்யும், தவறி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை, செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகத்துடன் இணைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பிரிவும் ஏற்ப்படும் என்று சொல்பவர்களும் உண்டு, இதற்க்கு ஒருபடி மேலே சென்று உயிருக்கு ஆபத்து ஏற்ப்படும் என்று சொல்பவர்களும் உண்டு, ஆக செவ்வாய் தோஷம் பலரது திருமண வாழ்க்கைக்கு தடையாக இருப்பது கண்கூடாக தெரிகிறது.

4) ஏக திசை சந்திப்பு :

 வரன் வது இருவருக்கும் சம காலத்தில் ஒரே திசை நடைபெறுவது, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும், திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும், ஏக திசை சந்திப்பு என்பது தற்பொழுது, பல ஜோதிடர்களால் அறிவுறுத்த படுகிறது, வரன் வதுவுக்கும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமணம் வேண்டாம் என்று தவிர்த்து விடுகின்றனர் ஆக ஏக திசை சந்திப்பு என்பதும், பலரது திருமண தடைக்கு  காரணமாக அமைகிறது.

5) ஏழரை சனி :

வரன் வதுவுக்கு சனிபகவான் சந்திரனுக்கு ஏழரை சனியாக சஞ்சாரம் செய்யும் பொழுது திருமணம் செய்வது, மிகுந்த துன்பத்தை ஏற்ப்படுத்தும் ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்வது மிகுந்த துன்பத்தையே ஏற்ப்படுத்தும் என்று செல்பவர்களும் உண்டு, ஆக திருமண தடைக்கு ஏழரை சனியும் ஒரு காரணமாக அமைகிறார் என்றால் அது மிகையில்லை.

மேலும் லக்கினத்தில் இருந்து 2,7ல் சனி அமர்ந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடை பெறாது அல்லது திருமணம் தாமதம் ஆகும் என்று சொல்பவர்களும்  உண்டு, ஆக ஒருவருக்கு திருமணம் நடைபெற மேற்கண்ட விஷயங்களை எதிர்கொண்டு, மேற்கண்ட பொருத்தங்கள் நல்ல நிலையில் அமைந்து, வரன் வதுவிர்க்கு பிடித்து, பெற்றோர்களுக்கு சம்பந்தம் பிடித்து, திருமண வாழ்க்கை அமைவதற்குள் பிறந்த நாள் கண்டு விடும்.

மேற்கண்ட ஜாதக பொருத்தங்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பார்ப்போம் அன்பர்களே !

1) நட்சத்திர பொருத்தம் :

 நட்சத்திர பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை 100% சரியாக அமைத்து தருவதில்லை என்பது முற்றிலும் உண்மை, நட்சத்திர பொருத்தம் 11 பொருத்தம் அமைந்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கு செல்வதற்கு காரணம் என்ன?  என்பதை அவர்களின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நிச்சயம் புரியும், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் கூட திருமணம் செய்யலாம் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

2) ராகு கேது தோஷம் :

 ராகு கேது எனும் இரண்டு கிரகங்களும் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு எந்த பாவகத்தில் அமர்கின்றனர், அப்படி அமரும் ராகு கேது கிரகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக அவயோக பலன்களை வழங்குகின்றனர் என்பதை முதலில் தெளிவாக கணிதம் செய்து பலன்களை நிர்ணயம் செய்வது அவசியம், மேலும் ராகு கேது கிரகங்கள் திருமண வாழ்க்கையில் எவ்வித தடைகளையும், சிரமங்களையும் தருவதில்லை என்பதே உண்மை, குறிப்பாக 2,7ல் அமர்ந்த ராகுவோ கேதுவோ 2,7ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்கினால் மட்டுமே திருமண வாழ்க்கையில் சிரமங்களை ஏற்ப்படுத்துகிறது.

 மேலும் அப்படிபட்ட ஜாதகங்களை 2,7ம் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகங்களுடன் இணைத்தால் மட்டுமே திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் , 2,7ம் பாவகங்கள் இருவருக்கும் பதிக்கப்படுமாயின் திருமண  வாழ்க்கை எப்படி சிறப்பாக அமையும்? உதாரணமாக 2,7ம் பாவகங்கள் இருவருக்கு ராகு கேது கிரகங்களால் பாதிக்கப்படும் பொழுது, இந்த  இருவரின் ஜாதகத்தை இணைத்தால் ராகு கேது கிரகங்கள் எப்படி நன்மையை செய்யும்? தோஷம் உள்ள ஜாதகத்தை தோஷம் அற்ற ஜாதகத்துடன் இணைத்தால் தானே தோஷம் உள்ளவர் நன்மை பெறுவார்.

3) செவ்வாய் தோஷம் :

 செவ்வாய் பகவான் 2,4,7,8,12 ராசிகளில் இருந்தால் ஜாதகருக்கு தோஷத்தை தருவார் என்பதெல்லாம் முற்றிலும் தவறான கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஒரு வேலை 2,7ம் பாவகங்களுக்கு அதிபதியாக செவ்வாய் இருந்து, அவர் தனது வீட்டிற்கு 2,6,8,12ம் ராசிகளில் மறைந்தாலோ , அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றாலோ, ஜாதகருக்கு 2,7ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தரக்கூடும் .

 4) ஏக திசை சந்திப்பு :

 இதை போன்ற ஒரு நகைசுவை வேறு எதுவும் இல்லை எனலாம், ஏனெனில் ஒருவருக்கு நடக்கும் திசை அவருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பது தெரியாமல் போகும் பொழுதே, ஏக திசை சந்திப்பு என்று ஜோதிடர்களும் குழம்பி, பொருத்தம் காண வந்தவர்களையும் குழப்புகின்றனர்,  உதாரணமாக வரன் வது இருவருக்கும் ஒரே திசை நடப்பில் இருந்தாலும், நடைபெறும் திசை நல்ல பாவகங்களின் தொடர்பை பெற்று பலனை தந்துகொண்டு இருக்கும் என்றால், சம்பந்தபட்ட இருவருக்கும் யோகத்தையே வழங்கும், ஒரு தீமையும் நடைபெறாது. ஆக ஒருவருக்கு நடைபெறும் திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெற வேண்டியது ஜோதிடர்களே !

5) ஏழரை சனி :

 அன்பர்களே ஒருவருக்கு ஒரு தீய பலன்கள் நடைபெற்றால் அதற்க்கு காரணம் சனி பகவான்தான் என்று நிர்ணயம் செய்யும், மனப்பான்மை உள்ளதனால் இந்த குழப்பம் உருவாகிறது, ஏழரை சனிகாலத்தில் திருமணம் செய்த பல தம்பதியர் மிகவும் சிறப்பான மணவாழ்க்கையில் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர், ஆக ஏழரை சனிக்கும் திருமண வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, மேலும் 2,7ல் சனி இருந்தால் திருமணம் இல்லை என்றும், திருமணம் தாமதமாகும் என்றும் நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான ஜோதிட கணித முறையாகும்.

குறிப்பு :

 ஒருவரின் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது 2,7ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, வரன் வது இருவரின் ஜாதகத்தில் 2,7ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட விஷயங்கள் பற்றி   நாம் ஆய்வு செய்ய தேவையில்லை, அவர்களுக்கு துணிந்து திருமணம் செய்து வைக்கலாம், திருமண வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக நடத்தி செல்வார்கள், பிரிவு என்பதே நிச்சயம் இல்லை எனலாம், மேலும் அவர்களின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் தம்பதியருக்கு உடனடியாக புத்திர சந்தானம் உண்டாகும்.

பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது நட்சத்திர பொருத்தம் காண்பதை விட ( ஏனெனில் நட்சத்திர பொருத்தம் திருமண வாழ்க்கையில் 5% பலனை மட்டுமே தரும் ) ஜாதகங்களில் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து திருமண பொருத்தம் காண்பது இல்லற வாழ்க்கைக்கு சிறப்பை சேர்க்கும், தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கும்.

No comments:

Post a Comment