Tuesday, 17 February 2015

மனைவியை - ணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

1 comment:

  1. ஆனால் நடைமுறையில் "அவ்வாறு கிடையாது. கணவன் சாப்பிட்ட அதே இலையில் R பிளேட்டில் மனைவி சாப்பிடுவதன் அர்த்தம், அன்பைப் பங்கிட்டுக் கொள்வதற்காக, நாம் இருவர் அல்ல, ஒருவரே, நாம் இருவரும் சேர்ந்து, இல்லறத்தை அன்போடும், கனிவோடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, இல்லறத்தை, நல்லறமாக ஆக்கவேண்டும் என்பதே இதன் பொருள்.

    ReplyDelete