Sunday, 29 March 2015

எந்த உறவில் திருமணம்,

எந்த உறவில் திருமணம்
லக்கினம் ராசி இரண்டையும் பார்த்து பலன் கூற வேண்டும். ஜாதகர்,ஜாகிக்கு 2,7,11-ம் அததிபதிக ளின் யார் ? பலமிக்கவர் என அறிந்து ஏழாம் அதிபதி
லக்கினத்திலிருந்தால் தூரத்து உறவில் திருமனம்.
இரண்டில் இருந்தால் அன்னியத்தில் திருமணம்.
மூன்றில் இருந்தால் அத்தை(அ ) மாமன் உறவில் திருமணம்.
நான்கில் இருந்தால் தாய் வழி உறவில் திருமணம்.
ஐந்தில் இருந்தால் காதல் திருமணம்.
ஆறில் இருந்தால் தாய் மாமன் உறவில் திருமணம்.
ஏழில் இருந்தால் தூரத்து உறவில் திருமணம்.
எட்டில் இருந்தால் அன்னியா உறவில் திருமணம்.
ஒன்பதில் காதல் -கலப்பு திருமணம்.
பத்தில் இருந்தால் தந்தை உறவில் திருணம்.
பதினேன்றில் இருந்தால் நண்பர்களின் குடும் பத்தில் திருமணம்.
பன்னிரண்டில் இருந்தால் அன்னியஉறவில் திருமணம்.

களத்திரஸ்தானம் மேஷம்,சிம்மம்,தனுசு வானல் கிழக்கு திசையிலிருந்தும்.
ரிஷபம்,கன்னி,மகரம் என்றால் தெற்குத் திசையிலிருந்தும்.
மிதுனம்,துலாம், கும்பமானால் மேற்கு திசையிலிருந்தும்.
கடகம்,விருச்சிகம்,மீனம்ஆனால் வடக்க்க்கு திசையிலிருந்தும். திருமணம வாழ்கை துணைவர் அமைவர்கள்.

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை -

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை -
ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது."சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு.ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது .இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்.அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும்,ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு.அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி,தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி,சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர் கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

உங்களுக்கு வீடு கிடைத்து விடும்

வீடு சம்பந்தமாக
சிலபேருக்கு இடம் இருக்கும், சில பேருக்கு அதுவும் இருக்காது. சிலபேருக்கு இடம் இருந்தும் வீடு கட்ட முடியாது. சிலபேருக்கு வீடு பாதியிலேயே நின்று விடும்.எந்த காரனத்தாலேயோ, நமக்கு இந்த வாய்ப்பு இருக்காது. இப்படி உள்ளவர்கள் கீழ்கண்ட முறைப்படி செய்துவந்தால் எந்த சிரமமும் இல்லாமல் வீடு வந்துவிடும்.
நீங்கள் உங்கள் குலதெய்வம் கோயிலுக்கோ, அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ள எந்த கோவிலுக்காக இருந்தாலும் சரி, அந்த கோயில் விழாக்கள் வரும் அல்லவா. அப்போது அந்த கோயிலுக்கு ஒரு பந்தல் அமைத்து கொடுத்துவிடவும். விழா முடியும்வரை அது அப்படியே இருக்கும்.
இந்த புண்ணியத்தால் உங்களுக்கு வீடு கிடைத்து விடும். இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக
அட்டை என்றும் அது 4,8,16,32GB
என்ற அளவுகளில்
கிடைக்கிறது......!
இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன்
ஒரே அளவுள்ள மெமரிகார்ட்
(4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில்
விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?
(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )
என்று ஒரு போதும்
இருந்துவிடாதீர்கள்......!
ஏனென்றால்
நாம் டிஜிட்டல் உலகத்தில்
இருந்து கொண்டிக்கிறோம்
அதைப்பற்றிய அரிவை நாம்
பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க
வேண்டிய விஷயம்
என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய
தயாரிப்பு நிறுவனத்தின்
பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற
எதாவது ஒரு எண்
குறிப்பிட்டு அதில்
ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள்
தெரிந்து வைத்திருப்பதில்
லை.......!
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள
எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுக
ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்
data transfer speedஐ குறிக்கும்
code ஆகும் 4என்ற எண்
எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால்
அது நொடிக்கு 4MB வேகத்தில்
fileஐ transfer செய்யும்
தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!
இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!

இந்தியா சுதந்திரம்

இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுத்த போது இரண்டாம் உலக போர்
முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.அப்போது இங்கிலாந்து
படையில்
பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி
படையிடம்
மோதி அழிந்து போனது.

மேலும்
இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால்
அழிக்கப்பட்டது.இந்தியாவை கையாள
தேவையான ராணுவ பலம்
இங்கிலாந்திடம்
இல்லை.இந்தியாவை கட்டு படுத்த
மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும்.அதனால்
அவர்கள்
இந்தியாவை விட்டு வெளியேறினர் .
நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது,,
நேதாஜியை சமாளிக்க முடியாமல்
நாட்டை விட்டு போகிறோம்
என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம்
என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக
எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர்
அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால்
சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது பத்து
ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு
சுதந்திரம் கிடைத்து இருக்கும். இந்த
மறைக்கப்பட்ட உண்மையை உரக்க
சொல்வோம்

பைரவரை வழிபாடும் முறை !!!

பைரவரை வழிபாடும் முறை !!!
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் .பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)
இழந்த பொருட்களை மீண்டும் பெற:
பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
குழந்தைச் செல்வம் பெற:
திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.
சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.
தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:
ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும்?

ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும்? இதை கணிக்கலாம்.
முதலில் உங்களுடைய திசை என்னவென்று பார்க்கவும்.
உதாரணம் குரு திசை என்று வைத்துகொள்வோம்.
குரு திசை 16 வருடம்.
அடுத்து அவர் ஒரு நட்ச்சத்திரத்தின் பாதத்தில் இருப்பார் அது எந்த பாதம் என்று பார்க்கவும் (ஒரு நட்சத்திரத்திட்கு நான்கு பாதங்கள்).
குரு 3ம் பாதத்தில் இருபதாக வைத்துகொள்வோம்.
இப்போது குரு திசை குரு புத்தி குரு அந்தரம் என்று வைத்துகொண்டு கணிதம் செய்வோம்
..........................................................................................
Step 1:
இப்போது குரு திசை 16 வருடத்தினை 4 பாதங்களுக்கு சரியாக பிரிக்கவும் பாதம் ஒன்றுக்கு 4 வருடம் வரும்.
இங்கு தான் கவனிக்கவேண்டும் முதல் இரண்டு பாதத்திற்கு 8 வருடங்கள் பெரியதாக ஒன்றும் வேலை இல்லை அடுத்து வரும் மூன்றாம் பாதம் தான் நாம் கவனிக்கவேண்டும் அதில் தான் ஒரு செயல் நடைபெரும். அதற்கு முன்பு (8 வருடங்கள்) நீங்கள் செய்த செயல் அத்தனையும் முயற்சி மட்டுமே.
சரி மூன்றாம் பாதம் என்று கணித்து விட்டோம் இப்போது அதில் நான்கு வருடங்கள் உள்ளது அப்படி எனில் நான்கு வருடத்தில் எப்போது ஒரு செயல் நடைபெறும்.
..........................................................................................
Step 2:
இங்கு கவனிக்கவேண்டியது ஒரு பாதித்திட்கு 3.20 degree. மூன்றாம் பாதத்தில் எந்த டிகிரி யில் குரு இருக்கிறது என்று பார்க்கவும்.
1 டிகிரியில் இருப்பதாக வைத்துகொள்வோம்.
3.20 இதை வினாடிகள் செய்தால் 3*60=180+20=200
இப்போது 4வருடங்கள் / 200 = 4*365/200= 1460நாட்கள் / 200 = 7.3 நாட்கள் 1விகலைக்கு 7.3 நாட்கள் இதை ஒரு கணித எளிமைக்கு 7 நாட்கள் என்று வைத்துகொள்வோம்.
இப்போது நம் குரு நிற்கும் பாதஅளவு 1 degree இதை விகளை ஆக்க 60 அப்படியெனில் 60*7 =420 நாட்கள் வரும். இதை வருடம் ஆக்கா 1வருடம் 55 நாட்கள் ஆக வரும்.
ஆக மொத்தம் 9வருடங்கள் 55 நாட்கள் எனற கால அளவில் நம் திசை நாதன் சரியாக ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பர்.
..........................................................................................
சரி அப்படிஎனில் இப்படி யாருக்கேனும் இருந்து கல்யாணம் செய்யவேண்டும் என்றால் அதுவும் 30 வயதில் குரு திசை ஆரம்பம் என்றால் இன்னும் 9 வருடம் அதாவது 39 வயதுவரை காத்துகொண்டு இருக்கவேண்டுமா?
..........................................................................................
Step 3:
அதுதான் இல்லை இங்கு தான் நம் கடவுள் நமக்கு புத்தி அந்தரம் என்ற அமைப்பை கொடுத்து உள்ளார்.
மேலே கணித்த படி புத்தி அந்தரம் கணிக்கவேண்டும்.
உதாரணம்:
குரு திசையில் குரு புத்தி 768 நாட்கள் இதை 4 பாதங்களுக்கு சரியாக பிரிக்கவும் பாதம் ஒன்றுக்கு 192 நாட்கள் வரும். முதல் இரண்டு 192+192=384 நாட்களை விட்டுவிடவும். மூன்றாம் 192 நாட்களை நம் குரு நிற்கும் டிகிரி யின் அளவுகளுக்கு பிரித்து கொடுக்கவும். 192/200=0.96 நாட்கள்
அப்படிஎனில் 0.96*60=57.6 நாட்கள் =58 என வைத்துகொள்வோம்.
அதாவது குரு புத்தியில் திருமணம் நடக்கும் என்று ஜோதிடர் கணிதிருந்தால் அவருக்கு 384+58=442 நாளில் இவருக்கு திருமணம் நடைபெறும் என்று சொல்லலாம். இதை வருடமாக்க 1வருடம் 77நாட்கள் ஆகும்.
அதாவது குரு திசை குரு புத்தியில் (குரு ஆரம்பித்ததில் இருந்து) 1வருடம் 77நாட்கள் என்னும் போது இவருக்கு திருமணம் ஆகும்.
.............................................................................................................
இதை போன்று குரு அந்தரத்தில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று கணித்தால் அந்தரத்தை இதை போன்று கணிதம் செய்யவேண்டும். இப்படி செய்யும் போது சரியான நாள் கிழமை நேரம் வரை துல்லியமாக கணிக்கலாம்.
இதற்கு நமக்கு தேவை பிறந்த சரியான நேரம். ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தவறாக பதிவு செய்யதால் 20 முதல் 25 நாட்கள் வித்தியாசம் வரும். அதாவது அந்த செயல் நடக்கும் காலம் சிறிது மாறுபடும்.
..........................................................................................
இப்படி தான் ஒரு செயலை நடக்கும் கால அளவை கணிக்கவேண்டும்.
இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் குரு திசை வருடத்தை ஒரு முழு நட்சத்திரத்தின் 13.20 degree ஆல் வகுத்து. குரு எந்த டிகிரி யில் உள்ளாரோ அந்த அளவுகள் மேல் உள்ளவாறு சரிபார்த்து கால நிர்ணயம் செய்யலாம் இதை போல் தான் புத்தி அந்தரம் சூட்சமம் பிரிக்கவேண்டும்.
இது கடினம் இல்லை இரண்டு முறை முயச்சி செய்து பார்த்தால் உங்களுக்கு எளிதாகி விடும்.
உதாரணம்: குரு திசை 16 வருடம்
குரு நிற்கும் பாத அளவு 7.40degree
கால நிர்ணயம் : 16*365/13.20=ans*7.40=நடக்கும் காலம்.
இது திசைக்கு
இதைபோல் புத்தி அந்தரம் சூட்சமம் கணிதம் செய்து கொள்ளுங்கள்
..........................................................................................
.
புதன் புத்தியில் திருமணம் நடக்கும் என்றால் புதன் புத்தியை இதை போல் பிரிக்கவும் அதாவது புதன் நிக்கும் பாதம் அல்லது டிகிரியை கணிதம் செய்யவும்.

துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?

துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும்.
பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.
எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது
சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.
ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.
சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
எலுமிச்சையின் மகிமைராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள்.
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு.
பலாவில் வியர்வை குற்றம் உண்டு.
வாழையில் புள்ளி குற்றம் உண்டு.
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.
மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு

கிரக பாதிப்புகள்............ கீழ்க்கண்ட பரிஹாரங்கள்

நல்ல நாள் தேர்ந்தெடுப்பது எப்படி;
வணக்கம் நண்பர்களே ஒருவருக்கு சுபகாரியம் செய்ய வேண்டுமானால் நல்லநேரம் வேண்டும் அல்லவா அதற்கு என்ன செய்யவேண்டும் அந்த நேரம் தேர்ந்தெடுக்கும் முறை எப்படி தெரிந்து கொள்ளலாமா.......
சுபகாரியங்கள் செய்ய நல்லநாள் தேர்ந்தெடுக்கும் பொழுது கசரம் பார்க்கவேண்டும் அது எப்படி அதாவது சுபனால் அன்று சூரியபகவான் இருக்கும் நட்சத்திரம் முதல் சந்திரபகவான் இருக்கும் நட்சத்திரம் வரையில் எண்ணி ஒன்பதுக்கு மேல் போனால் ஒன்பதால் வகுக்கவேண்டும் அப்படி வகுத்த மீதி எண் 1,2,6,7,8,ஆகியவை வந்தால் சுபம் ஆகும் கசரம் இல்லை சுபகாரியங்கள் செய்யலாம்...
அப்படி வகுத்த மீதி எண் 3,4,5,9, ஆகியவை வந்தால் கசரம் யோகம் உள்ளது சுபகாரியங்கள் தவிர்க்கப்படவேண்டும் சுபகாரியங்கள் செய்யக் கூடாது.
நல்லநாள் தேர்ந்தெடுக்க அவசியம் பார்க்க வேண்டியது பஞ்சகம் .
அதையும் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
1)ஞாயிற்றுக்கிழமை முதல் சுபனால் கிழமைவரையில் எண்ணி வரும் எண்.
2)பிரதமை திதி முதல் சுபனால் திதிவரையில் எண்ணி வரும் எண்.
3)அஸ்வினி நட்சத்திரம் முதல் சுபனால் நட்சத்திரம் வரையில் எண்ணி வரும் எண்.
4)மேஷம் இராசி முதல் சுபனால் செய்வதற்கு தேர்ந்தெடுக்கும் இலக்கினம் வரை எண்ணி வரும் எண்.
5)இலக்கின துருவ எண்.மேஷ லக்கினத்துக்கு 5. ரிஷபலக்கினத்திற்கு 7. மகரலக்கினத்திற்கு 2. கும்பலக்கினத்திற்கு 4. மீன லக்கினத்திற்கு 6.
ஐந்தையும் கூட்டி ஒன்பதால் வகுத்தால் வரும் மீதி 1,2,4,6,8, ஆக வந்தால் பஞ்சகம் இல்லை. 3,5,7,9. ஆக வந்தால் சுபகாரியங்கள் செய்யலாம். பஞ்சகம் அமையாவிட்டாலும் சில பொருள்களை தானம் செய்வதன்மூலம் பரிகாரம் செய்து சுபகாரியங்கள் செய்யலாம்.
கரிநாள் ,தனியநாள். தமிழகத்தில் இந்த நாட்களை சுபகாரியங்கள் செய்ய தவிக்கப்படுகிறது மற்ற மாநிலங்களில் கரிநாள் தனிய நாள் சுபகாரியங்கள் செய்ய அதிக முக்கியத்துவம் தருவதில்லை சுபகாரியங்கள் செய்கிறார்கள்...ஆடிமாதம்,புரட்டாசிமாதம், மார்கழிமாதம் ஆகிய மாதங்களில் அமாவாசைக்குப் பிறகு சுபகாரியங்கள் செய்கிறார்கள் சுபதிதி .சுபநட்சத்திரம்,சுபயோகம்,சேர்ந்தால் கரிநாள் ,தனிய நாட்களிலும் சுபகாரியங்கள் செய்யலாம் .
சுபகாரியங்கள் செய்ய நேரம் தேர்ந்தெடுக்கும்போது முக்குண வேலையைப் பார்த்து அனுசரித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் குருபகவான், சுக்கிரபகவான், புதபகவான், இலக்கினத்தை பார்த்தாலும் அல்லது இருந்தாலும், இலக்கினத்திற்கு பதினொன்னம் ஸ்தானத்தில் சூரியபகவான் இரும்தாலும் சகல தோஷங்களும் நீங்கும். சுபகாரியங்கள் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் குருபகவான் ,சுக்கிரபகவான்,அஸ்தமனம் சமயங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

நல்ல நாள் தேர்ந்தெடுப்பது எப்படி

நல்ல நாள் தேர்ந்தெடுப்பது எப்படி;
வணக்கம் நண்பர்களே ஒருவருக்கு சுபகாரியம் செய்ய வேண்டுமானால் நல்லநேரம் வேண்டும் அல்லவா அதற்கு என்ன செய்யவேண்டும் அந்த நேரம் தேர்ந்தெடுக்கும் முறை எப்படி தெரிந்து கொள்ளலாமா.......
சுபகாரியங்கள் செய்ய நல்லநாள் தேர்ந்தெடுக்கும் பொழுது கசரம் பார்க்கவேண்டும் அது எப்படி அதாவது சுபனால் அன்று சூரியபகவான் இருக்கும் நட்சத்திரம் முதல் சந்திரபகவான் இருக்கும் நட்சத்திரம் வரையில் எண்ணி ஒன்பதுக்கு மேல் போனால் ஒன்பதால் வகுக்கவேண்டும் அப்படி வகுத்த மீதி எண் 1,2,6,7,8,ஆகியவை வந்தால் சுபம் ஆகும் கசரம் இல்லை சுபகாரியங்கள் செய்யலாம்...
அப்படி வகுத்த மீதி எண் 3,4,5,9, ஆகியவை வந்தால் கசரம் யோகம் உள்ளது சுபகாரியங்கள் தவிர்க்கப்படவேண்டும் சுபகாரியங்கள் செய்யக் கூடாது.
நல்லநாள் தேர்ந்தெடுக்க அவசியம் பார்க்க வேண்டியது பஞ்சகம் .
அதையும் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
1)ஞாயிற்றுக்கிழமை முதல் சுபனால் கிழமைவரையில் எண்ணி வரும் எண்.
2)பிரதமை திதி முதல் சுபனால் திதிவரையில் எண்ணி வரும் எண்.
3)அஸ்வினி நட்சத்திரம் முதல் சுபனால் நட்சத்திரம் வரையில் எண்ணி வரும் எண்.
4)மேஷம் இராசி முதல் சுபனால் செய்வதற்கு தேர்ந்தெடுக்கும் இலக்கினம் வரை எண்ணி வரும் எண்.
5)இலக்கின துருவ எண்.மேஷ லக்கினத்துக்கு 5. ரிஷபலக்கினத்திற்கு 7. மகரலக்கினத்திற்கு 2. கும்பலக்கினத்திற்கு 4. மீன லக்கினத்திற்கு 6.
ஐந்தையும் கூட்டி ஒன்பதால் வகுத்தால் வரும் மீதி 1,2,4,6,8, ஆக வந்தால் பஞ்சகம் இல்லை. 3,5,7,9. ஆக வந்தால் சுபகாரியங்கள் செய்யலாம். பஞ்சகம் அமையாவிட்டாலும் சில பொருள்களை தானம் செய்வதன்மூலம் பரிகாரம் செய்து சுபகாரியங்கள் செய்யலாம்.
கரிநாள் ,தனியநாள். தமிழகத்தில் இந்த நாட்களை சுபகாரியங்கள் செய்ய தவிக்கப்படுகிறது மற்ற மாநிலங்களில் கரிநாள் தனிய நாள் சுபகாரியங்கள் செய்ய அதிக முக்கியத்துவம் தருவதில்லை சுபகாரியங்கள் செய்கிறார்கள்...ஆடிமாதம்,புரட்டாசிமாதம், மார்கழிமாதம் ஆகிய மாதங்களில் அமாவாசைக்குப் பிறகு சுபகாரியங்கள் செய்கிறார்கள் சுபதிதி .சுபநட்சத்திரம்,சுபயோகம்,சேர்ந்தால் கரிநாள் ,தனிய நாட்களிலும் சுபகாரியங்கள் செய்யலாம் .
சுபகாரியங்கள் செய்ய நேரம் தேர்ந்தெடுக்கும்போது முக்குண வேலையைப் பார்த்து அனுசரித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் குருபகவான், சுக்கிரபகவான், புதபகவான், இலக்கினத்தை பார்த்தாலும் அல்லது இருந்தாலும், இலக்கினத்திற்கு பதினொன்னம் ஸ்தானத்தில் சூரியபகவான் இரும்தாலும் சகல தோஷங்களும் நீங்கும். சுபகாரியங்கள் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் குருபகவான் ,சுக்கிரபகவான்,அஸ்தமனம் சமயங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

எந்தந்த யாகத்தினால் என்னன்ன பலங்கள்

எந்தந்த யாகத்தினால் என்னன்ன பலங்கள் நமக்கு கிடைக்கப் பெரும்:
கார்ய சித்திக்கு – கணபதி யாகம்.
க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.
ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.
ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.
ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.
சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.
கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம்,மற்றும் ஹயக்ரீவர் யாகம்.
செய்வினை,மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.
சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.
பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம்
நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.
திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.
ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.
புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.
சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம்,
அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம்.
ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.
தகுந்த ஆசார்யர்களை கொண்டு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பது பல சமயம் நிருபிக்கப்பட்ட உண்மை..

மூட்டு வலி

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு தான்.
பூமியின் மண்ணினுடைய பாலில் இருந்து எடுக்கப்பட்டு கட்டுவது இந்த கரையான் புற்று. இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில தாய் கரையான் அந்த இடத்தில இருந்து புற்று மீண்டும் உடனே கட்ட தொடங்கி விடும்.
இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து விடும்.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு இரண்டு பல்லு பூண்டு.
அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைகிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும்.
நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார்.
நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும்.
மூன்று நாள் போதும்.
மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம்.
வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும்.
தாங்கமுடியாத வலி உள்ளவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும்.
குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில பத்து போடவும்

Tuesday, 17 March 2015

சந்திரன் சஞ்சரிக்கும் போது இடத்துக்கு தக்க தினசரி நிகழ்வுகளில் பலன்கள்

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு குறிப்பிட்ட இடங்களில் கோசார சந்திரன் சஞ்சரிக்கும் போது இடத்துக்கு தக்க தினசரி நிகழ்வுகளில் பலன்கள் மாறுபடுகின்றன. ஜனன ராசிக்கும் கோசார சந்திரனுக்கும் உள்ள தூரத்தை வைத்து சந்திர பலம் கணிக்கப்படுகிறது. (தினசரி ராசி பலனுக்கு அடிப்படை).
ஜன்ம ராசியிலிருந்து நடப்பு சந்திரன் நின்ற ராசி வரை எண்ண…….
1 எனில் – ஆரோக்கியம், மனத் தெளிவு, சுகம், பெண்வழி அனுகூலம்
2 – காரியத் தடை, பண விரயம், மானக் கேடு
3 – லாபம், தைரியம், ஜெயம்
4 – ரோக பீதி, குழப்பம், செயல் நட்டம், தன விரயம், நீர் கண்டம்
5 – சஞ்சலம், காரிய தோல்வி
6 – சுகம், பணவரவு, வெற்றி
7 – பண வரவு, ஆரோக்யம், போஜன சயன சுகம்
8 – சோர்வு, மனக் குழப்பம், கலகம்
9 – அச்சம், காரிய தடங்கல்
10 – தொழில் சிறப்பு, நற்பலன்கள்
11 – லாபம், சுகம், உற்றார் நேசம்
12 – காரிய தன விரயம்

Monday, 16 March 2015

god இஸ் கிரேட்

God does not give what you want but God always give what you need. - Nico Maulana

மகாபாரதத்தில் தமிழர்கள்

மகாபாரதத்தில் தமிழர்கள்
மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்
பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.
இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.
தமிழ் மன்னர்கள்:
தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.
இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.
தருமன்:
பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா
மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.
அர்ஜுனன்:
குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.
அருஞ்சுனையன் -----> அர்ஜுனா
பீமன்:
மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.
பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா
அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)
சகாதேவன்:
நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
சகடதேவன் ------> சகாதேவா
வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நகுலன்:
பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
நற்குலன் -----> நகுலா
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.
போர் நடந்த இடம்:
இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.
போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.
ஆதாரங்கள்:
மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.
மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.
அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
- புறநானூறு - 2
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
- பெரும்பாணாற்றுப்படை - 415-417

மன அழுத்தம்

மன அழுத்தம்
மன அழுத்தத்திற்கு என்ன தீர்வு, இதை எவ்வாறு கட்டுப்படுத்துதல் என்பது பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னர் மன அழுத்தம் நீண்டகால ரீதியில் எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியும் சற்று மேலோட்டாகப் பார்ப்போம்.
மன அழுத்தத்தினை நீண்டகாலமாக குணப்படுத்தாது, வைத்திய உதவியை நாடாமல் கவனிப்பாரற்று அசட்டை செய்யும்பொழுது இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது உடல் நிலையைப் பாதிப்பதுடன் நின்றுவிடாது எமது வாழ்க்கைக் காலத்தையும் பெருமனே குறைக்கின்றது. இது கேட்பதற்கு புதிதாகவும் வியப்பாகவும் இருந்தாலும் இது எவ்வாறு நடக்கின்றது என்று பார்ப்போம். மன அழுத்தம் யாரில் ஏற்படுகின்றது என்று பார்த்தால் அண்மையில் பாரிய இழப்புகளை சந்தித்தவர்கள் மற்றும் நீண்டகால நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இவற்றில் மாரடைப்பு வந்தவர்கள், பாரிசவாதம் வந்தவர்கள், நீரிழிவு நோய் வந்தவர்கள் இது தவிர புத்தி சுவாதீனம் இல்லாமல் உள்ளவர்களை பராமரிப்பவர்கள் போன்றவர்களை முக்கிய உதாரணமாகக் கூறலாம். சென்ற இதழில் குறிப்பிட்டது போன்று மன அழுத்தம் எம்மை பல்வேறு விதங்களில் பாதிக்கின்றது. மன அழுத்தத்தின் முக்கிய இயல்புகளில் ஒன்று எமது மனத்தின் ஒருமுகச் சிந்தனையை சிதறடிக்தலாகும். இதன் காரணமாகத்தான், மன அழுத்தம் உள்ளபோது எம்மால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடிவதில்லை, செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் நாட்டம் அற்றுப் போகின்றது. சரி, இது எவ்வாறு எமது உடல் நிலையைப் பாதிக்கமுடியும்? இங்குதான் மன அழுத்தத்தின் அடிப்படையே ஆரம்பமாகின்றது. எமது உடல் எந்த ஒரு சிறிய வியாதியிலிருந்தும் குணப்படவேண்டுமென்றால் எமது மன நிலை நன்றாக இருத்தல் மிக அவசியம். நாம் அதிகளவு மன அழுத்தத்தில் வருந்தும் பொழுது கோர்ட்டிசோல் எனப்படும் உடற்சுரப்பு அல்லது ஹோர்மோன் பெருமளவில் எமது உடலில் சுரக்கின்றன. இவை எமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குணமடையும் தன்மை என்பவற்றை பெருமளவு குறைக்கின்றன. கோர்டிசோல் உடற்சுரப்புப் பற்றி பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல, இது எமது உடலில் குளுக்கோசின் அளவை கூட்டுதல், உடல் நிறையை அதிகரித்தல், நீரிழிவு நோயினை மோசமாக்குதல், எலும்பின் அடர்த்தியினை குறைத்தல் போன்ற பல்வேறு தீய விளைவுகளை தூண்டுகின்றது.
அடுத்ததாக, மன அழுத்தத்தின் மிகமுக்கிய பாதிப்புகளில் ஒன்று எமக்கு எதைச் செய்வது என்றாலும் அதில் நாட்டம் அற்றுப் போகின்றது. உதாரணமாக, நீரிழிவு நோய் வந்தவர்களைப் பார்த்தால், இவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக அவசியமாகச் செய்யவேண்டிய தொழிற்பாடுகள் பல. என்ன சாப்பிடுகின்றோம், எவ்வளவு சாப்பிடுகின்றோம், நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தல், வேளாவேளைக்கு மருந்துகளையோ, இன்சுலினையோ தவறாது பாவித்தல், இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை தவறாது பாவித்தல் போன்றன. இவர்களுக்கு எதிலும் நாட்டம் இல்லாமற்போய் நம்பிக்கையின்மை ஏற்படும்போது இவர்களின் நீரிழிவு நோய்க்குரிய கட்டுப்பாடு பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதே கூற்று நீடித்த நோய்களினால் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் பொருந்தும்.
மேலே குறிபிட்ட காரணிகளுடன், நித்திரை இல்லாமற்போதல் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற பல்வேறுவிடயங்கள் எமது பொது உடல்நிலையைப் பாதிக்கக்கூடிய தன்மை ஏற்படுகின்றது.
மன அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உளநோய் மருத்துவர்கள் உளநோய் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பது வழக்கம். இந்த மருந்துகளின் தொழிற்பாட்டின் அத்திவாரம் என்ன என்று பார்த்தால், இவை மன அழுத்தத்தை பூரணமாக குணமாக்கிவிடப்போவதில்லை. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு தீர்ப்பதன் மூலமோ அல்லது தவிர்ப்பதன் மூலம் மட்டுமே இந்த மருந்துகளின் பூரண தொழிற்பாட்டை அனுபவிக்கமுடியும். இதன் காரணத்தினால் மன அழுத்தத்திற்கான முன்னணித்தீர்வு கவுன்சலிங் அல்லது திறப்பி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மதிவளத்துணை சிகிச்சைகளில் தங்கியிருக்கின்றன. சுருங்கக்கூறினால் உளநோய் மருத்துவர் மன அழுத்தம் உள்ளவருடன் தனியாக அமர்ந்து அவருடைய குறைநிறைகளை கேட்டறிந்து எந்த எந்தக் காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என்று அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசித்தலாகும். கேட்பதற்கு இலகுவாகவும் இது உண்மையிலேயே மன அழுத்தத்தை குறைக்க உதவுமா என்றும் எம்மில் பலர் வியக்கக்கூடும். ஆனால் இவ்வகையான மதிவளத்துணை சிகிச்சைகள் மிகவும் பயனளிப்பதுடன் மன அழுத்தம் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை செல்வனே உயர்த்துகின்றது என்றால் அது மிகையாகாது.
இந்த மதிவளத்துணை சிகிச்சைகளில் பல்வேறு உப பிரிவுகள் அல்லது வகையான சிகிச்சைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் வௌ;வேறுவிதமாக பலனளிக்க வல்லன.
பொதுவாக இச்சிகிச்சைகளின் மூலம் ஒருவர் தனது எதிர்மறையான சிந்தனைகளைஅடையாளம் காணுதல், அவை ஏற்படும்போது அதனை எவ்வாறு வெற்றிகொள்ளுதல் மற்றும் தமது புலனுணர்வு நடத்தைகளை எவ்வாறு தெளிவுபடுத்தி நேர் திசையில் நெறிப்படுத்தல் போன்ற பல்வேறு அடிப்படைகளை கற்றுக்கொள்ள முடிகிறது. இந்த மதிவளத்துணை சிகிச்சைகள் நீண்டகாலமாக மிகக் கடுமையான மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உதவியளிக்கப் போவதில்லை. இப்படியானவர்களுக்கு மன அழுத்தம் எதிர்ப்பு மருந்துகளும் சேர்த்துக் கொள்வதன் மூலமே பூரண பயனை அடைய முடியும்.
மேலே குறிப்பிட்டதுபோல மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நம்பிக்கையின்மை சோர்வான எண்ணங்கள் ஏற்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் எந்தக் காரணமுமே இல்லாமல் மன அழுத்தம் சோகம் போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றது. மதிவளத்துணை சிகிச்சையானது இந்த எண்ணங்கள் எப்பொழுது எதனால் ஏற்படுகின்றது என்பதையும் அவற்றை எவ்வாறு அடையாளம் கண்டு தீர்த்தல் அல்லது தவிர்த்தல் போன்றவற்றுக்கு உதவிபுரிகின்றன.
இவ்வாறாக தனிப்பட்ட சிகிச்சை தவிர குழுக்களாக சிகிச்சை பெறுவதும் மிகவும் பயனளிப்பதாக நம்பபப்படுகின்றது. இதனை குழு மதிவளத்துணைச் சிகிச்சை என்று அழைக்கலாம். இதன் அடித்தளம் மிகவும் இலகுவானது. பொதுவாக தனிமையாக இருக்கும்பொழுது எமது மன அழுத்தம் அதிகரிக்கின்றது. பலருடன் சேர்ந்து கூடிக்கதைக்கும் பொழுது மனப்பாரம் குறைகின்றது. இதன் அடிப்படையில் மன அழுத்தம் உள்ளவர்கள தமது குறைநிறைகளை ஒன்றாகக் கலந்தாலோசிக்கும் பொழுதும், அதைப் பகிர்ந்து கொள்ளும் பொழுதும் இவர்களுக்கு மனபலம் நம்பிக்கை என்பன வளர்ச்சியடைகின்றது. இந்தக் குழுக்களில் இருந்து பல்வேறுவிதமான உளரீதியான ஆதரவுகளை பெற்றுக் கொள்ளவும் முடிகின்றது. எமது அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தை சற்று உற்றுப் பார்ப்போம். எம்மில் பலருக்கு முக்கிய பிரச்சனை என்ன? எமது உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் கிடைப்பதில்லை. ஒருவருடைய பிரச்சினையின் ஆழத்தையும் காரணத்தையும் மற்றவரால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அதற்கு பெரும்பாலானவர்கள் தயாராகவும் இல்லை. 'இருக்கிற பிரச்சனைக்கை டிப்பிரசன்தான் முக்கியம்' என்றுதான் பலர் கூறக்கேட்டிருப்போம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மன அழுத்தம் எமது கையை மீறிப் போகும்போது உங்கள் குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெறுதல் பயனளிக்கும். எம்மைப் போன்ற மேற்கத்தைய பிறமொழிபேசும் நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்படும் முக்கிய சவால்களில் ஒன்று மொழிப் பிரச்சனை. ஒருவர் மனம் திறந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு விளக்கம் மற்றும் மொழி என்பன மிக முக்கியமான அடித்தளமாக செயற்படுகின்றது. உதாரணமாக ஒரு உணர்வினை வெளிப்படுத்தும் பாடலையோ கவிதையையோ இன்னொரு மொழிக்கு பெயர்க்கும்பொழுது அது தன்னுடைய மூலதளத்தைவிட்டு விலகியே அர்த்தம் கொடுக்கும். அதுபோல எமது உணர்வுகளை உடைந்த ஆங்கிலத்தில் உளநோய் வைத்தியருக்கு தெரிவிப்பது அசாத்தியமானது. இதன் காரணமாக எந்த மனோதத்துவ நிபுணரையோ நாடும்போது அவர் சொந்த மொழி பேசுபவராக தெரிந்தெடுத்தல் மிக அவசியம்.
எமது மன அழுத்தத்திற்கு தீர்வுகாண முழுப்பாரத்தையும் வைத்தியரின் தோள்களில் சுமத்திவிடாது எமது அன்றாட வாழ்க்கையிலும் பலமாற்றங்களை செய்தல் மிக அவசியம். அன்றாட உடற்பயிற்சி, போதிய அளவு உறக்கம், தனிமையை முடிந்த அளவு தவிர்த்தல், உணர்வுகளை பலருடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பன மன அழுத்தத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தவல்லன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் மதிவளத்துணை சிகிச்சைகளை நாடும்பொழுது அழுத்தத்தினை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடிகின்றது. நீண்டகாலமாக மன அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள் தமது உடல் நிலையை நல்ல நிலையில் பாதுகாப்பதற்கு உளநோய் வைத்திய நிபுணரின் ஆலோசனையை நாடுதல் பெரும் பயனளிக்கும்

கடிகாரம்

கடிகாரம்
நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான “wrist” என்பது தமிழில் “மணிக்கட்டு” என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.
நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.
காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.
கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும்.
தொடக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன.
அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

தனிமை

தனிமை
துயர் தருகிறது எனில்
உன் மனம்
உன்னைக் கண்டிக்கிறது
என்று பொருள் !

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும்..இவற்றை பலர் கவனிப்பதே இல்லை..கிணறு தோண்டுதல் ,போர் போடுதல் போன்ரவற்ரை செய்யும்போது கீழ்நோக்கு நாளை தேர்ந்தெடுத்து ராகு காலம்,எமகண்டநேரம் இல்லாமல் துவக்க வேண்டும்.பூமிக்கு மேலே பலன் கொடுப்பவை மேல்நோக்கு நாளிலும் பூமிக்கு கீழே பலன் கொடுக்கும் காரியங்கள் கீழ்நோக்கு நாளிலும் செய்யப்பட வேண்டும்..
கடலை பயிரிட துவங்கும் முன் அது கீழ் நோக்கிய நாளா என கவனிக்கனும்...கடலை பூமிக்கு கீழே காய்ப்பது ஆகும்..இதுவே சோளம் ,நெல் எனில் மேல்நோக்கு நாளில் விதை ஊன்ற துவங்க வேண்டும்..இது பல விவசாயிகள் அறிந்து வைத்திருப்பர்.மாடி வீடு கட்ட துவங்கும்போது அது மேல்நோக்கு நாளில் மனை பூஜை செய்து துவங்குவது உத்தமம்...அதே போல உங்க ராசிக்கு எட்டாவது ராசியாக அன்றைய நாள் இருக்க கூடாது அது வாஸ்து நாளாக இருந்தாலும் சரி.

எப்போது கடன் கேட்டால் உடனே கிடைக்கும்..?

எப்போது கடன் கேட்டால் உடனே கிடைக்கும்..?
கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர் பலர்..கடன் கிடைக்காமல் தவிப்பவர் பலர்...கல்வி கடன்,வீடு கட்ட கடன்,கல்யாணம் செய்ய கடன் ,தொழில் துவங்க கடன் என மற்ரவரிடம் அல்லது வங்கியில் கடனோ உதவியோ பெற பலரும் சிரமப்படுகிறார்கள் எப்போது கடன் கேட்டாகிடைக்கும் என பார்த்தால்,உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் எப்போது வருகிறாரோ அப்போது கடன் மற்ரும் உதவி யாரிடத்தில் கேட்டாலும் கிடைக்கும்.1,.3,6,7,8,12 ல் சந்திரன் இருக்கும் போது கடன் கேட்டால் கிடைக்காது...!!

Saturday, 7 March 2015

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!
இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது
காரணங்கள் என்ன?
இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்
குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.
அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..