Sunday, 31 May 2015

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?
திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?
திருமணத்திற்கு வரன் பார்க்கும் படலம் வருடக்கணக்கில் நீடிப்பதற்கு என்ன காரணம்?. நாம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்பது தான். எதிர்பார்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் மாறு படலாம்.
படித்த வரனாக வேண்டும் என்பது பையனுடைய கனவாக இருக்கலாம். ஆனால் நகை அதிகம் போட்டு வரவேண்டும் என்பது அன்னையின் ஆசையாக இருக்கலாம். பெண் வீட்டுக்காரர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று அப்பா நினைக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் தான் திருமணத்திற்கு வரன் தேடுகிறார்கள்.
இதற்கு பொதுவான காரணமாக ஜாதகம் சரியில்லை என்ற சொல்லை முன் வைக்கின்றனர். நாங்கள் பார்த்த இடத்தில் ஜாதகப் பொருத்தம் சரியாக உள்ளது என்று பெண் வீட்டில் கூறினால், இல்லை இல்லை எங்கள் ஜோசியர் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார் என்று ஜோதிடர் மீது பழியைப் போட்டுவிடுகின்றனர். ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்தால் நிச்சயமாக யாருக்கும் திருமணம் தாமதமாகாது. அதையும் தாண்டிய எதிர்பார்ப்புகள் தான் தாமதத்திற்கு காரணம். அந்த எதிர்பார்ப்புகள் எப்படி அமைகின்றன? யாரால் இந்தத் தாமதம்?
இந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் குறைசொல்லவது அல்ல. நம்முடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது தான். நம்மையும் மீறி சில செயல்கள் நடைபெறுகின்றன. நம் நம்பிக்கைக்குரிய நபர்கள் நமக்கு எதிராக செயல்படுவதும், நமக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் உண்மையில் நல்வர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. நம்மால் உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில் ஜோதிடம் கைகொடுக்கிறது. உண்மையைப் புரிய வைக்கிறது. இது அனுபவத்தில் கண்ட உண்மை.
நன்கு படித்த வேலையில் உள்ள ஒரு ஜாதகருக்கு ஐந்து வருடத்திற்கு மேலாக வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் பொருத்தம் பார்த்தாகிவிட்டது. இன்னும் அமையவில்லை. காரணம் என்ன என்று கேட்டால் களத்திர தோச ஜாதகம் அதனால்
அமையவில்லை என்று பதில் வருகிறதாம். இதற்கான காரணம் என்ன? இதனை எப்படி சரிசெய்வது என்று அந்த ஜாதகர் கேட்டிருந்தார். அந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாமதத்திருமண நிலைதான் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தான் ஜாதகரின் கேள்வி.
ஜாதகத்தில் உள்ள நிலைகள்.
கேமத்துருவ யோகம். – சந்திரன் இருக்கும் இராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாத நிலை. இந்த நிலையில் உள்ளவர்கள் எளிதில் எதிலும் ஏமாறும் தன்மை உடையவர்கள்.
ஏழாம் இடத்தை பாதிக்கும் கிரகங்கள். – செவ்வாய், புதன், சந்திரன்.
செவ்வாய் – சகோதர சகோதரிகள்.
புதன் – கல்வி, மாமன்மார்க்ள.
சந்திரன் – சுய புத்தி – தாய்.
மேலே உள்ள நிலைகளை ஒன்று சேர்த்து பார்த்த போது ஒரு விடை கிடைத்தது. தாய் மற்றும் தாய் வழி மாமன்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது கணவன் மற்றும் குடும்பம்., ஜாதகரின் சுய முடிவு. இந்த மூன்று பேரும் தான் திருமணம் தாமதமாவதற்கு காரணம். எப்படி இந்தக் காரணம் காரியமாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
இந்த ஜாதகருக்கு வரும் வரன்களில் சரி பாதி பொருத்தம் உள்ள ஜாதகங்கள் தான் வருகிறது. இதில் தன் படிப்புக்கேற்ற வரன் இதுஇல்லை என்று ஜாதகர் சிலவற்றை மறுத்துள்ளார். பெண் அழகாக இல்லை என்று சில வரன்களை தாய் மறுத்துள்ளார். தனது மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மூத்த சகோதரி வற்புறுத்துகிறார். இப்படி இந்த சூழ்நிலைகள் தான் ஜாதகரின் திருமணத்தை தாமதப்படுத்திக் கொண்டு வருகின்றன.
ஜாதகருக்கு வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதைத் தான் ஜோதிடம் விளக்கியுள்ளது என்று விளக்கிய பின்பு தான் ஜாதகருக்கு தெளிவு பிறந்தது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று கேட்டார்.
ஜாதகருடைய திருமண வாழ்க்கையில் மாமனார் குடும்பத்துடன் இணக்கமான சூழ்நிலையில் இருக்க முடியாது. இதனால் திருமணவாழ்வில் சங்கடங்கள் குழப்பங்கள் ஏற்படும். இதனை மாற்ற முடியாது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது அவருடைய விதி.
ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தால் சகோதிரியின் மகளை திருமணம் செய்துகொள்வது சரியான தீர்வாக இருக்கும். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை முடிந்தளவு குறைப்பதற்கு இது சரியான முடிவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஜோதிட ரீதியாக தாமதத் திருமணத்திற்கான விளக்கமும் விடையும் கொடுத்துவிட்டோம். இதற்கான வேறு பல தீர்வுகளும் இருக்கலாம். அல்லது வேத ஜோதிடத்தின் தீர்வுகளில் திருத்தங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களின் கருத்தக்களை எதிர்பார்க்கிறோம். 

அமாவாசையில் பிறந்தால் என்ன பலன்

அமாவாசையில் பிறந்தால் என்ன பலன்
சூரியபகவான்- சந்திரபகவானும் ஒரே பாகையில் இருக்கும் பொழுது அமாவாசை யோகம் எனப்படும் இரண்டு கிரகங்களும் சூரியனுக்கு முன் பின் 8.பாகைக்குள் இருப்பது அமாவாசை யோகம்
அமாவாசை யோகம் பெற்றிருந்தால் செல்வ நிலையில் குறைபாடும் தாய் தந்தையால் நன்மை பெற முடியாத நிலையும் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையும் தன் செய்கையால் தானே தாழ்நிலை பெறும் நிலையும் தரும் என்பது பொது விதியாகும்.
.அமாவாசையோகம் பெற்று அதில் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தாலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன் சம்பந்தம் ஏற்பட்டாலும் இருவரும் இருக்கும் வீட்டின் அதிபதியும் பலம் பெற்றாலும் அமாவாசை யோகம் ராஜயோகமாக மாறி உயர் நிலை பெறுவார்கள்.
அவ்விதமின்றி பாவிகளின் சம்பந்தம் இராகுபகவானின் சம்பந்தம் தொடர்பு ஏற்படுமானால் தானே அறிந்து பல குற்றங்களை செய்பவராகவும் குறுக்கு வழியில் செல்பவராகவும் கள்ளக் கட்த்தல் போதைப் பொருள் மது பானம் விற்பவராகவும் இருப்பார்கள் குடும்பத்திலும் அவப்பெயர் உண்டாக்குவார்கள்
எந்த நோக்க மின்றியே வாழ்க்கை நட்த்தும் நிலையும் ஏற்படும்
{ என்னுடையா அனுபவத்தில் பெண்களின் ஜாதகத்திற்க்கு அமாவாசையோகம் நல்ல பலன் உண்டகும் தீமைகள்
செய்வதில்லை

ஜாதகத்தில் வேலை செய்யும்! கிரகங்களின் மதிப்பெண்கள்

ஜாதகத்தில் வேலை செய்யும்! கிரகங்களின் மதிப்பெண்கள்: 

உச்சம் - 100% வலிமை 
மூலத்திரிகோணம் - 90% வலிமை 
சொந்த வீடு - 80% வலிமை 
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை

Friday, 29 May 2015

ஜோதிட

ஜோதிட
• லக்னத்தில் சூரியன் இருந்தால் முன்ஜென்ப பாவம் ஒட்டிக்கொண்டிருக்குமாம், உடனே சூரிய பரிகாரம் செய்துகொள்ளவும்.
• 5ல் சனி இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை
• ராகு / புதன் சேர்ந்து இருந்தால் பணக்காராம்.
• பைரவர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும்.

• லக்னத்தில் இருந்து 3ல் கேது இருந்தால் சகோதர ஒற்றுமை இருக்காது
• லக்னத்தில் இருந்து 5ல் ராகு அல்லது கேது இருந்தால் கடன் தொல்லை இருக்கும்
• 6ல் சனி இருந்தால் படிப்பு இல்லை
• திருமணத்தன்று குரு பலன் வேண்டும், இல்லையேல் டிஷ்யும் டிஷ்யும்தான்.
• சந்திரன் .. வியாழன் சேர்ந்து இருந்தால் கல்யாணம் சிறக்காது.
• லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் குடும்ப வாழ்க்கை இனிக்காது
• செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் கல்யாணத்தடை
• லக்னத்தில் குரு இருந்தால் கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் இழந்து விடுவார்கள்.
• செவ்வாய் சூரியன் சேர்ந்து இருப்பவர்களுக்கு போலீஸ் தொல்லை இருக்கும்.
• சந்திரனும் ராகும் சேர்ந்து இருந்தால் திருமணமான பெண் திரும்பி வந்துவிடும் அல்லது போலீஸ் கேஸ் ஆகிவிடும் ( சந்திரன் ராகு பரிகாரம் அவசியம் செய்யவேண்டும்)
• செவ்வாய் பரிகாரத்தலம் திருச்செந்தூர் (6ல் குரு இருந்தால்)
• 7ல் சனி இருந்தால் அவருக்கு 2வது தாரம் அமையும் ( தவிர்க்க திருநள்ளாரில் பரிகாரம் செய்யவும்)
• லக்னத்தில் இருந்து 5ல் ராகு இருப்பின் படிப்பில் பிரேக் ஏற்படும்
• 7ல் குரு இருந்தால் செய்யும் தொழில் நின்றுவிடும்
• 5ல் சூரியன் தொட்டதெல்லாம் நஷ்டம் ஆகும்
• 4ல் குரு இருந்தால் 30 வயதிற்குமேல் வேறு தொழில் செய்ய வேண்டிவரும், சகோதரர் தனியாக இருப்பார்.
• புதன் மற்றும் சனி சேர்ந்து இருந்தால் படிப்பு வராதுல்ல..
• சுக்கிரனுடன் சனி சேர்ந்து இருந்தால், குடும்பம் கெட்டுவிடும்.
• செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருப்பின் உறார்ட் அட்டாக் வரும்.
• 12ல் குருவுடன் சனி சேர்ந்து இருந்தால் திருமணத்திற்குபின் இடமாற்றம் பின் தொழில் மாற்றம் ஏற்படும்
• 5ல் சூரியனுடன் ராகு இருந்தால் வேறு ஊரில் தொழில் செய்யவும்.
• 11ல் குரு நன்றாகப் படித்து பெரிய தொழில் செய்வார்கள்
• 10ல் குரு இருப்பின் ஜீவனம் செய்வது கஷ்டம் (பரிகாரம் திருச்செந்தூர் )
• அஷ்டம் சனி 2 ½ வருடத்தில் திருமணம் நடைபெற்றால் தம்பதியர் பிரிந்து விடுவார்கள்.
• லக்னத்தில் இருந்து 2ல் மாந்தி அமைந்தால் குடும்பம் அமையாது.
• 2,7,8,12 ல் குரு இருந்தால் நிரந்தரமான தொழில் அமையாது
• 8ல் கேது இருந்தால் திருமணத்தடை ஏற்படும்
• 5ல் சுக்கிரன் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு தொழில் அமையும்.
• சந்திரனுடன் ராகு சேர்ந்து இருந்தால் திருமண வாழ்வு சிறக்காது.
• சுக்கிரன் வீட்டில் சந்திரன் இருந்தால் அவரை சுலபமாக ஏமாற்றி விடுவார்கள். ( காலசர்ப்ப தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் )

சுபர் பாபர் அறியும் எளிய முறை

சுபர் பாபர் அறியும் எளிய முறை ஒற்றைபடை ராசிக்கு சுபர்கள் சூர்யன் சந்திரன் செவ்வாய் குரு ஆகியோர் பாபர் புதன் சுக்கிரன் சனி ஆகியோர் இரட்டைபடை ராசிக்கு சுபர்கள் புதன் சுக்கிரன் சனி ஆகியோர் பாபர்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் குரு ஆகியோர்

தானங்களும் அவற்றின் பலன்களும்.

1.ஆடைகள் தானம்:
ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடு வதுதடுக்கப்ப டும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடை தான ம் செய்வதால் பெண்களிடம் நல்லு றவும், சுகபோக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.
2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத் திரத்தில் தாரா பலன் உள்ள நட்ச த்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
3.நெய் தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியி ன் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.
4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வை த்திறன் எப்போதும் பாதுகாக்கப் படும்.
5.அரிசி தானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந் தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்க ளுக்கு அரிசி தானம் செய்ய வேண் டும்.யாருக்கு வீடு வாசல் இல்லை யோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவ ர்கள் வயது முதிர்ந்தவர்களு க்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்பருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிட லாம்

பித்ரு தோஷத்தின் அறிகுறிகள்!!

பித்ருக்களுககான கடமைகளை அவர் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் செய்யாமலிருப்பது பித்ரு தோஷம். பொதுவாக ஜாதகத்தில் 5-மிடத்தையும், 5-ம் அதிபதியின் நிலையை வைத்தும் இது அறியப்படும்! எடுத்த காரியங்களில் தோல்வி, வீட்டில் பருவமைடைந்தும் குழந்தைகளுக்கு திருமணம் - புத்திரபாக்கியம் இல்லாதிருத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டேயிருத்தல், அடிக்கடி MOOD OUT ஆதல், சந்தோஷமான சூழலில் இருந்தாலும் அதில் மனம் லயிக்காமல் தனியாக அமர்ந்து அழவேண்டும் என்ற மனநிலை உருவாதல், பண்டிகை நாட்களில் வீட்டில் கலகம் ஏற்படுதல் இவைகளில் ஒன்று/பல பித்ரு தோஷத்தின் அறிகுறிகள்!!

தோஷ நட்சத்திரங்கள்

தோஷ நட்சத்திரங்கள்
காலவிதான கோட்பாட்டின்படி மூலம் 1ம் பாதம்மட்டுமே மாமனார்க்குஆகாது,,ஆயில்யம்1ம் பாதம் மட்டுமே மாமியாருக்கு கெடுதல்,,
கேட்டை 1ம் பாதம் மட்டுமே மூத்த மைத்துனர்க்கு கெடுதல்,,விசாகம்4ம் பாதம் மட்டுமே இளையமைத்துனர்க்கு கெடுதல் என்று கூறப்பட்டுள்ளது..மேலும் சனிக்கிழமையும்,,துதியை திதியும்,,ஆயில்யமும் சேர்ந்துவந்தால் மட்டுமே தோஷமாக கருதவேண்டும்
அதே போன்று செவ்வாய்,, சப்தமி,, விசாகம் சேர்ந்துவந்தால் மட்டும் தோஷம் என்பதை கருத்தில் கொண்டு இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்
பெண்களின் ஜாதகத்தை கையாள்வது சிறப்பு தரும்..குத்துமதிப்பாகக் குறை கூறாமல்,, தீர்க்கமாக பரிசீலித்து திருமணபொருத்தம் பார்க்கவும்

சந்திராஷ்டமம் என்பது என்ன‌

சந்திராஷ்டமம் என்பது என்ன‌
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
சந்திராஷ்டமம் என்பது ராசிக்கு இல் சந்திரன் நிற்பதாகும்.
கால புருஷ தத்துவத்திற்கு சந்திரன் 8இல் நீசமடைகின்றார். 8ஆம் இடம் மறைவு ஸ்தானம் ஆகும். இதுவே உண்மையான சந்திராஷ்டமம் ஆகும்.

யார் இந்த சந்திரன்
ஜோதிடத்தில் சந்திரன் மனோகாரகன் என்று குறிக்கப்படுகின்றார். சந்திரன் நீசமடைந்து மறைவிடத்திலிருப்பதால் அன்று நீங்கள் தியானம் செய்தால் மனம் ஒடுங்கிய‌ நிலையை அடைந்து ஆன்மீகத்தில் உயரலாம். மனதை ஒருமுகப்படுத்தலாம்.
எனவேதான் இறைவனை நினைப்பதை தவிர வேறு எந்த ஒருகாரியமும் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்கின்றனர்.

குருவை புத்திரகாரகன் என்று சொல்லியது ஏன்?

குருவை புத்திரகாரகன் என்று சொல்லியது ஏன்?
குரு ஒரு மஞ்சள் கிரகம்.,அந்த கிரகத்திலிருந்து மஞ்சள் நிறமான மீதேன் என்றமஞ்சள் நிறமான கிரணம் வெளிபட்டுகொண்டே இருக்கிறது
சூரியனிடமிருந்து வெளிபடும் கிரணமும்,, குருகிரகத்திலிருந்து வெளிபடும் மீதேன் என்ற மஞ்சள் நிறமான கிரணமும் இரண்டறக் கலப்பதின்
மூலம்தான் கருதரிக்கக்கூடிய வல்லமை ஏற்பட்டு குழந்தைப் பேறு உண்டாகிறது இதனால்தான் குரு புத்திர காரகன் ஆகிறார்
அதனால் புத்திர தோஷத்திற்க்கு சூரியனையும்,,குருவையும் வணங்கசொல்வார்கள்

நவக்ரஹ வாகனங்கள்

நவக்ரஹ வாகனங்கள் (Nine Planets)
சூரியன்- ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் Sun=Horse Chaiot
சந்திரன்- மான்கள் பூட்டிய ரதம், Antelope chariot= Moon
செவ்வாய்—ஆட்டுக் கிடா/ Mars=Ram
புதன்- குதிரை Bhudan/ Mercury= Horse
வியாழன்/பிருஹஸ்பதி—யானை Jupiter= Elephant
சுக்ரன்/வெள்ளி—குதிரை/ முதலை Venus= Horse/ Crocodile
சனி—காகம் Saturn / Saniswarea= Crow
ராகு— சிங்கம் அல்லது பூனை அல்லது புலி Rahu= Lion/ Cat/Tiger
கேது— மீன் Ketu=Fish

தேனீக்கள் கூடு கட்டிய வீட்டில் குடியிருக்கலாமா?

தேனிக்கள் வீட்டில் கூடு கட்டினால் அங்குள்ள ஆண்களுக்கு தோஷம் எனவே

 அதை எடுத்து எங்காவது மரங்களில் மாற்றிவிட வேண்டும் விரைவாக 

அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று கருடபகவானுக்கு தேன் 

அபிஷேகம் செய்து விளக்கேற்றி பரிகாரம் தேடுங்கள்! ஸ்வாதி நக்ஷத்ர

 பறவை இனம் தேனீ கருடபகவான் ஸ்வாதி பிறவி ஆவார்.

நக்ஷத்ரத்திற்குரிய பறவைக்குரிய புத்தி அடையாளங்கள் ஜாதகரின் புத்தியில் இருக்கும்!

அவரவர் ஜென்ம லக்கனத்திற்கு
5ம் இடம் அறிவைக்குறிக்கும்
பாவம் ஆகும். ஜாதகப்படி 5 ம் இடத்து அதிபதி எந்த நக்ஷத்ரத்தில் இருக்கிறாரோ அந்த நக்ஷத்ரத்திற்குரிய பறவைக்குரிய புத்தி அடையாளங்கள் ஜாதகரின் புத்தியில் இருக்கும்!
எளியேன் ரிஷப லக்ன பிறவி ஜாதகப்படி 5 ம் அதிபதி புதன் ஸ்வாதி நக்ஷத்ர சாரம் பெற்று இருக்கிறார்.
இதற்கான பறவை
பறக்கும் பூச்சி இனமான தேனீ ஆகும்!
தேனீக்களின் சிறப்ப அம்சமே தேனை சேகரிப்பதுதான். ஏனெனில் மற்ற பூச்சிகள் சிறு பறவைகள் எல்லாமே தேனை உண்பதற்காகவே
தேடிச்செல்லும்!
தேனீகள் அப்படி அல்ல அவை மனிதர்களால் அடைய இயலாத கிடைத்தற்கரிய மூலிகைப்பூக்களில் இருந்து தேனை சேகரித்து அதை கூட்டில் சேர்க்கும்!
அந்த தேன்தான் நமது சித்த மருத்துவத்தில் ஒப்பற்ற பங்கு பெறுகிறது! தேனீக்களில் பல வகை உண்டு வேலைக்காரத் தேனீ
பாதுகாப்புத்தேனீ
இராணித்தேனீ
ஆண் தேனீ
ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை. இதில் வேலைக்காரத் தேனீக்கள் மட்டுமே
பல இடங்களுக்கும் சென்று தேனை சேகரிப்பவை இவற்றின் முழுமுதல் வேலையே இதுதான்!
எளியேனுடைய புத்தி
தேனீயைப்போல
செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? என்பதற்கு
இக்குழுவில் இதுவரை எளியேன் பதிந்துள்ள பதிவுகளே சாட்சி!
உங்கள் பறவை என்ன
சொல்கிறது அன்பர்களே?
மனித மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு மிருகம் என்று காலம் காலமாக அழைப்பதால்
நக்ஷத்திர மிருகங்களின் குணங்கள் மனோக்காரகன் சந்திரனை அடிப்படையாக்கி அவரவர்
பிறந்த நக்ஷத்திரத்திற்கே
அதன் பலன் கொடுக்கப்படுகிறது!
எனவே தான்
நக்ஷத்ர புத்திக்கு அதன் பறவைகளின் புத்தி
இங்கே எடுக்கப்பட்டுள்ளது!

பெயர் முதல் எழுத்து மந்திரம்….

முதல் எழுத்து மந்திரம்….
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் என்ன உள்ளது என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் பெயரானது வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது.
அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம்.
பெயரின் முதல் எழுத்து A to Z:
A: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
B: உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
C: உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.
D: உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.
E: உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.
F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.
G: நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
H: H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.
I: நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.
J: J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.
K: ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.
L: வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்.

M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.
N: N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.
O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.
P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.
Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்
R: உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.
S: S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.
T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.
V: V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.
W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.
X: சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.
Y: சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.
Z: இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.
.
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.
விதிமுறை 1
முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனை
வாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.
விதிமுறை 2
மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதியுள்ளேன்.
6-8-10-11-16-17-20-21-22-26-27-28-29-30-32-33-35-36-37-39-41-42-45-50-52-54-56-59-60-64-66-68-71-72-73-74-75-77-79-80-84-85-88-89-90-91-92-94-95-97-99-100 இவை அனைத்தும் அறைகளின் உள் அளவுகளாக அமைக்க வேண்டும்.இருந்தாலும் நம்மிடம் உள்ள இடத்திற்கு சரியாக இந்த அளவு வராத நிலையில் மூன்று அங்குலம் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம்.
விதி முறை 3
அறைகளின் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் அமைக்க வேண்டும். அதில் யோகம் தரும் சில நீள அகல முறைகள் , 6 அடி அகலம் 8 அடி நீளமும் , 8அடி அகலம் 10 அடி நீளமும், 10 அடி அகலம் 16 அடி நீளமும் , 16 அடி அகலம் 21 அடி நீளமும் , 21 அடி அகலம் 30 அடி நீளமும் , 30 அடி அகலம் 37 அடி நீளமும் , 37 அடி அகலம் 50 அடி நீளமும் , 39 அடி அகலம் 59அடி நீளமும் , 42 அடி அகலம் 59 அடி நீளமும் , 50 அடி அகலம் 73 அடி நீளமும் , 60 அடி அகலம் 80 அடி நீளமும் , இதில் காட்டியது போல் சரியான அளவில் அறைகள் அமைத்தால் மிகவும் யோகம் தரும். இந்த அளவுகள் தவீர விதிமுறை 1 ல் கூறிய மற்ற மனையடி அளவுகள் கொண்டும் அறைகள் அமைக்கலாம். அது சுமாரான பலங்களைத் தரும்.
விதிமுறை 4
6 அடிக்கு குறைவாக கழிவறை குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற அறைகள் அமைக்கக் கூடாது. கட்டிடத்திற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடைவெளி விடும் போது குறைந்த பட்சம் 3 அடியும் அதற்குமேல் போகும்போது விதிமுறை 1 ல் கூறியுள்ள படி யோகம் தரும் அடிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் .
விதிமுறை 5
போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.நாம் கட்டிடம் கட்டும் இடத்தில் எட்டு திசையில் எந்த பாகத்தில் நீரோட்டம் இருந்தாலும் வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது நீரோட்டம் பள்ளத்தை நோக்கி பாய ஆரம்பித்துவிடும். அதனால் கண்டிப்பாக வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் போர் அல்லது கிணறு அமைக்கவும்.எல்லாவிதமான கட்டிடத்திற்கும் இது பொதுவானது.ஆனால் விவசாய நிலத்திற்கு இது பொருந்தாது.விவசாய நிலத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் வாஸ்து அறிந்தவரின் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.
விதிமுறை 6
கழிவு அறை படுக்கை அறையில் வாயு பாகத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் கழிவுத் தொட்டி மொத்த கட்டிடத்தின் வாயு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற திசைகள் ஆகாது. கழிவுத் தொட்டிக்கு மேலையும் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.
விதிமுறை 7
எந்த திசை தலவாசல் வீடாக இருந்தாலும் சமையலறை மொத்த வீட்டின் அக்னிப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . மற்ற திசைகள் ஆகாது.சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமையல் செய்யுமாறு சமையல் மேடை அமைத்துக் கொள்ளவும்.மற்ற திசைகள் பார்த்து நின்று சமையல் செய்யக் கூடாது.
விதிமுறை 8
மாடிப்படிகள் மேற்குப் பாகம் அல்லது தெற்குப்பாகம் அல்லது கன்னி பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற திசைகளில் அமைக்கக் கூடாது . படியில் ஏறும் பொழுது மேற்கு பார்த்து அல்லது தெற்கு பார்த்து ஏறும் வண்ணம் முதல் படியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 9
எந்த திசை தலவாசல் கொண்ட வீடாக இருந்தாலும் ஈசான்ய அறை பெரிய சன்னல்கள் பயன்படுத்தி கட்ட வேண்டும்.அந்த அறையில் கனம் கொண்ட பொருட்கள் வைத்து அடைத்து வைக்கக் கூடாது. படுக்கை அறையாகவும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் படிக்கும் அறையாக பயன்படுத்தலாம்.நல்ல கல்வி வளம் பெருகும்.அந்த அறை கோவிலைப்போல் எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த அறையில் கிழக்குப் பார்த்து சாமிப் படங்கள் வைத்து பூஜை அறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விதிமுறை 10
படுக்கை அறை மேற்குப் பாகம் அல்லது தெற்குப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . சிறிய வீடு என்றால் கன்னி பாகம் அல்லது வாயுப்பாகத்தில் அமைத்துக்கொள்ளலாம்.தெற்கு அல்லது மேற்கு மட்டுமே தலை வைத்து படுக்கும் வண்ணம் படுக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 11
பலமாடிகள் கட்ட வேண்டும் என்றால் கீழ் தளத்தின் உயரத்தைவிட மேல் தள உயரம் குறைந்தப்பட்சம் ஒரு அடியாவது குறைவாக உள்ளவாறு அமைக்க வேண்டும்.
விதிமுறை 12
தண்ணீர்த் தொட்டி தரையில் அல்லது தரைக்குக் கீழ் அமைக்க வேண்டும் என்றால் வடக்கு பாகம் ஈசான்ய பாகம் கிழக்கு பாகம் ஆகியவற்றில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற பாகங்களில் அமைக்கக் கூடாது. வீட்டின் மேல் அமைக்க வேண்டும் என்றால் மேற்குப்பாகம் அல்லது தெற்குப்பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற பாகங்களில் அமைக்க கூடாது . கண்டிப்பாக கன்னி பாகத்தில் அமைக்கக் கூடாது.
விமுறை 13
எந்த திசையில் தல வாசல் அமைந்தாலும் தல வாசல் அமைக்கும் அறையில் சரியாக நடுப்பாகத்தில் வாசல் நிலை அமையுமாறு அமைக்க வேண்டும். நிலைக்கு இரு புறமும் சன்னல்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.வீட்டின் உள்ளே உள்ள அறைகளில் வசதிக்கு தகுந்தவாறு வாசல் அமைத்துக் கொள்ளலாம். கதவு நிலை இல்லாமல் எந்த அறையும் அமைக்கக் கூடாது.
விதிமுறை 14
வீட்டின் நிலை ,சன்னல், கதவுகள் ஒரே ஜாதி மரத்தில் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்.இரு ஜாதி மரங்களில் அமைத்துக் கொள்வதும் மிகவும் யோகம் தரும்.கண்டிப்பாக இரு ஜாதி மரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது மிகப்பெரிய கெடுதல் செய்யும் . கவனம் தேவை.
விதிமுறை 15
வீட்டிற்கு எந்த பாகத்திலும் பொதுச்சுவர் வரக்கூடாது . காம்பவுண்ட் சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்குப் பாகத்தில் மட்டும் பொதுச் சுவர் வரலாம். கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் பொதுச்சுவர் அமையக்கூடாது. தொழிற்கூடம் , வியாபார இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
விதிமுறை 16
வியாபார ஸ்தலம் தொழிற்கூடத்திற்கு தலவாசல் மேற்கு அல்லது தெற்கு பார்த்து அமைத்தல் மிகவும் யோகம் தரும். மற்ற திசைகள் சுமாரான யோகம் தரும்.வீடு என்றால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து தலவாசல் அமைத்தால் மிகவும் யோகம் தரும். கிழக்குப் பார்த்து தலவாசல் அமைத்தால் சுமாரான யோகம் தரும் . மேற்குப் பார்த்து வீடுகளுக்கு தலவாசல் அமைக்கக் கூடாது.
விதிமுறை 17
கிழக்கு பார்த்த கோவிலும் , மேற்கு பார்த்த அன்னதானக் கூடமும் , வடக்கு பார்த்த பொது சத்திரங்களும் , மேற்கு தெற்கு பார்த்த வியாபார தொழிற்கூடங்களும் , வடக்கு தெற்கு பார்த்த வீடுகளும் அமைத்துக்கொள்வது மிகவும் யோகம் தரும்.
விதிமுறை 18
வீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம். சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்.எந்த் கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்.
புதிய வீடு கட்டுபவர்கள் மேலே உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளவும்.பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில்
உள்ள படி மாற்றம் செய்து கொள்ளவும்

Tuesday, 26 May 2015

இறைவன் மீது இறக்கி வைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...

ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..
ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...
பகவான் ரமணன் கூறுகிறார்...
உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..
சுமந்து கொண்டு சென்றாலும் சரி சுமக்காமல் இருந்தாலும் சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?
மூட்டை இறக்கி வைத்து விட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
.
அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை.. கூடுவதில்லை..
அவருக்குதான் சுமை குறைகிறது..
இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும் சுமையை இறைவன் மீது இறக்கி வைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...
வீணாக சுமையை சுமக்கவேணடாமே..

Monday, 25 May 2015

வித்தியாரம்பம்

வேதங்கள் :
வேதங்கள் நான்கு வகைப்படும் .அவையாவன :
ருக் ,யசஜஸ் ,சாம ,அதர்வண எனும் நான்கு வேதங்களும் சிஸ வியாகரணம் ,சந்தஸ் ,நிக்ருதம் ,ஜயொதிசம் கல்பம் எனும் வேதங்களின் ஆறு அங்ககளும் மீமசை நியாயம் ,புராணம் ,இதிகாசம் அக இந்த பதினான்கும் வித்தைகள் எனப்படும் .
ஆயுர்வேதம் ,தனுர்வேதம் ,கந்தரவவேதம் ,அர்த்தசாஸ்திரம் இவைகள் உப வித்தைகள் எனப்படும் .
திருவோணம் ,புனர்புசம் ,பூசம் ,மிருகசீரிஷம் ,அவிட்டம்,சுவாதி ,சதயம்,அனுஷம் ,திருவாதிரை,அஸ்தம் சித்திரை நட்சத்திரங்கள் வித்தைக்கு உகந்தவை ஆகும் .
அஸ்வினி ,ரோகினி,உத்திரம்,உத்திராடம் ,உத்திரடதி இவை மத்தியமான் நச்சத்திரங்கள் ஆகும் .சிலர் அஸ்வினி நட்சத்திரம் உத்தமம் என்று சொல்கிறார்கள் .
இந்த நட்சத்ரங்கள் தவிர மற்றவை விலகதகவை
அவிட்டம் ,ரேவதி, மிருகசீரிஷம் ,ரோகினி,பூசம்,அனுஷம் ,புனர்புசம் ,அஸ்தம் ,இவைகள் சப்த சாஸ்திரம் எனப்படும் .
புனர்புசம்,திருவோணம்,சவத்தை,பூசம்,அஸ்தம்,அஸ்வினி,சதயம்,உத்திரம்,உத்திராடம்,இந்த நட்சத்திரங்கள் அர்த்த சாஸ்திரம் ஆரம்பம் செய்ய உத்தமம் .
ஜயொதிசம் முதலான அங்க சாஸ்திர வித்தைகள் ஆரம்பிக்க சுவாதி ,அஸ்தம்,புனர்பூசம்,ரேவதி,பூசம்,அஸ்வினி,முலம்,சத்யம்,ஆகிய நட்சத்திரங்கள் உயர்வானவை .
வேத வித்தைகளை ஆரம்பம் செய்யவும் எல்லா சாஸ்திரங்களையும் அவிட்டம் திருவோணம் இவை உத்தமம் .
ஆயுர்வேதம் ,தனுர்வேதம் கற்க அவிட்டம் உத்தமம் .
தசமி ,திருதியை ,ஏகாதசி,பிரதமை,பஞ்சமி,சஷ்டி,இவைகள் விதியரம்பதிருக்கு உகந்த திதிகள் .
அஷ்டமி பர்வக்கலாம்ன பௌர்ணமி அம்மாவாசை சதுர்த்தி நவமி சதுர்த்தசி ஆகியவற்றை விலக்க வேண்டும் .
வித்தியாரம்ப விசயத்தில் சூரியனின் அம்சமும் வாரமும் ஆனா செய்வாய் கிழமையை விலக்க வேண்டும் .

நாமகரணம்

ஜன்ம நட்சத்திரத்தில் 12 வது அல்லது 10வது அல்லது 16 வது நாளில் மங்களகரமான பெயர் சூட்டும் நிகழ்ச்சியை செய்ய வேண்டும் .அந்த நாட்களில் செய்ய முடியாமல் போனால் நல்ல சுபநட்சத்திரம் திதி முகுர்த்தத்தில் சுப அம்சத்தில் செய்ய வேண்டும் என்பது நடைமுறை .
ஜன்ம நட்சத்திரத்தில் 12 வது அல்லது 10வது அல்லது 16 வது நாளில் மங்களகரமான பெயர் சூட்டும் நிகழ்ச்சியை செய்ய வேண்டும் .அந்த நாட்களில் செய்ய முடியாமல் போனால் நல்ல சுபநட்சத்திரம் திதி முகுர்டஹ்தில் சுப அம்சத்தில் செய்ய வேண்டும் என்பது நடைமுறை .
தெய்வ திருநாமங்கள் குல பெரியோர்கள் பெயர்கள் ஆகியவற்றை வைக்கலாம் .அரசர்,யாகங்களின் பெயர்கள் ,கோயில்கள் யானை குதிரை மரங்கள் ஓடை கிணறு மற்றும் பெண்கள் புருசர்கள் காவியங்ககள் கவிகள பசு அரசர்கள் ஆகியவர்களின் பெயர்களை வைக்கலாம் .

பால் புகட்டுதல்

குழந்தை பிறந்த 31 வது நாளில் குழந்தைக்கு சங்கினால் பால் புகட்ட வேண்டும் .அந்த நாளில் செய்ய இயலாமல் போனால் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்துக்கு ௰வது நட்சதிரம் வரும் நாளில் பால் புகட்டலாம் .
அஸ்வினி ,ரோகினி,மிருகசெரிசம்,புனர்புசம் ,பூசம்,உத்திரம்,அஸ்தம் ,சித்ஹிரை சுவாதி ,அனுஷம் அவிட்டம் உத்தரடம் திருவோணம் சதயம் உத்திரட்டாதி ,ரேவதி இவைகள் பால் புகட்ட உத்தமம் .
சதுர்த்தி ,நவமி ,சஷ்டி அஷ்டமி சதுர்த்தி அம்மாவாசையில் பால் புகட்டுதல் உத்தமம் .
மேஷம் விருச்சகம் மென்னம் ஆகிய ராசிகளும் சூரியன் நிற்கும் ராசிகளும் வில்லக வேண்டும் .
சந்திரன் புதன் குரு சுக்கிரன் இவர்களின் வர நாட்களும் வர்க்கமும் அவர்களின் பார்வை பெற்ற ராசி லக்னமும் உயர்ந்தவை .லக்னத்திற்கு 10 ம் இடத்தில ஒருவரும் இருக்க கூடாது .முற்பகலிலோ நண்பகலிலோ முதல் பால் புகட்ட வேண்டும் .இரவை விலக்க வேண்டும்

உங்கள் நட்சத்ரதிற்கு எந்த திசையில் வீடு கட்டலாம்?

உங்கள் நட்சத்ரதிற்கு எந்த திசையில் வீடு கட்டலாம்?
கிழக்கில் வீடு கட்ட:
ரோகினி,மிருகசீரிஷம்,புனர்புசம்,பூசம்,ஆகியவை உத்தமம்.
தெற்கில் வீடு கட்ட:
மகம்,சுவாதி,அஸ்தம்,உத்திரம்,ஆகியவை உத்தமம்.
மேற்கில் வீடு கட்ட:
உத்திராடம்,திருவோணம்,மூலம், ஆகியவை உத்தமம்.
வடக்கில் வீடு கட்ட:
அவிட்டம்,உத்திரட்டாதி,சித்திரை,சதயம் ஆகியவை உத்தமம்.
எல்லா திசைகளிலும் வீடு கட்ட
ரேவதியில் எல்ல திசைகளிலும் வீடு கட்டலாம்

உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம்

விசாகம் ,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ,மேஷம்,ஆகிய ஆறு ராசிகள் ஜன்ம லக்னமாக இருப்பின் கிழக்கில் வீடு கட்டலாம் .
ரிசபம்,மிதுனம்,கடகம்,சிமம்,கன்னி,துலாம்,இவை லக்னமாக இருப்பின் மேற்கு திசையில் வீடு கட்டலாம்.
சிம்மம்,கன்னி,துலாம் ,விருச்கம்,தனுஷ்,மகரம் லக்னமாக இருப்பின் வடக்கு திசையில் வீடு கட்டலாம்.
வீடு கட்ட உகந்த நட்சத்திரங்கள்:
ரோகினி,திருவோனோம்,ரேவதி,மிருகசீரிஷம்,அனுஷம்,பூசம்,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி ,ஆகிய நட்சதிரங்கள்ளில் வீடு கடலாம்.
சித்திரை,மூலம்,புனர்புசம்,சுவாதி,அவிட்டம்,சத்தியம்,அஸ்தம்.ஆகியவை மத்திமம்.
மற்றவை விலகதகவை.

எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்

தங்கம் வாங்குவதற்கு உகந்த காலம்
குரு வர்கோதமம் பெற்றுரிக்க புதனும் சுக்கிரனும் கேந்திரத்தில் இருக்கும் படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கி சேர்த்தால் ஒன்று பன்மடங்காகும்
இதுபோலவே சந்திரன் தன உச்ச அம்சமான லக்னத்தில் இருக்க அதற்கு 7 ம்இடத்தில குருவும் இருக்க செல்வங்களை சேமித்தல் தங்கம் ,வெள்ளி,ரத்தினங்கள்,ஆபரணங்கள் முதலானவை ஒன்றுக்கு பலமடங்ககும்
தங்கம் தானியங்கள்,ரத்தினம் இவைகளை சேமிக்கும் விசயத்திலும் சம்பாதிக்கும் விசயத்திலும் லக்னத்தில் குரு இருந்தால் மென்மேலும் விருத்தியாகும் .
லக்னத்தில் குருவும் இரண்டாமிடத்தில் சுக்கிரனும் பத்தாமிடத்தில் சந்திரனும் பதினொன்றாம் இடத்தில புதனும் இருந்து அப்டிபட்ட நேரத்தில் செல்வதினை செமப்து நல்லது.
வியாழகிழமை தினம் லக்னத்தில் குருவும் பதிநொனில் சூரியனும் ஆறில் சனியும் இருந்தால் அதுசமயம் பணியாட்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள வேண்டும் .
லக்னத்தில் சுக்கிரனும் பத்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் இருக்க பித்தளை வெண்கலம் ஆகியவற்றை வாங்கி சேமித்தல் ஒன்று கோடி மடங்காகும்
வெள்ளி,தங்கம்,நவரதின்னங்கள் சேமிக்க :
தங்கம் ,வெள்ளி,செம்பு,இரும்பு,முத்து,பவளம்,வைரம் முதலானவற்றை செல்வம் சேமிபுகென குறைபட நட்சத்திரத்தில் வாங்குவது மென்மேலும் செழிக்கும்
வெள்ளியை வெள்ளி சாமன்களை சேமிக்க
சனிக்கிழமையில் ரோஹிணியில் சந்திரனும் குரு கும்பத்தை பார்க்கும் சம்யம வெள்ளி பொருட்கள் வாங்க பெருகும் .
சுக்கிரன் உச்சமான லக்னத்திலும் குரு 7 லிலும் 5 இடத்தில் சூரியனும் இருக்கும் சமயத்தில் வெள்ளியை சேமித்தல் பலமடங்காக பெருகும் .
வாசனை திரவியங்கள் சேமிக்க :
லக்னத்தில் குருவும் 12 ல் சந்திரனும் இருக்கும் பொழுது கற்புரம் அகில்,சந்தனம் ,கல்பம்,முதிலிய வாசனை சாமான்களும் ,மாலைகளையும் வாங்கி சேர்க்க மென்மேலும் வளர்ச்சி அடையும்.
நூலகம் அமைக்க :
புத்தகங்களை சேமிப்பது ஆவணங்கள் பெறுவதற்கு புதன் உச்சத்தில் இருப்பது அல்லது வியாழன் அன்று உச்ச லக்னத்தில் இருப்பது நல்லது .

Sunday, 24 May 2015

Manjaadi Kuru and Guruvayoor

Manjaadi Kuru and Guruvayoor

Lucky Red Seeds are found in Krishna temples in Kerala. The origin of this practice lies in the folklore of the Guruvayur temple. The temple of Guruvayur houses the deity of Vishnu, and this particular idol is believed to have been worshipped by Lord Krishna in Dwaraka.

The story goes thus… a long time ago, there lived a woman in a northern province of Kerala. She was an ardent devotee of Krishna and aspired to someday visit the temple in Guruvayur. She wanted to carry offerings to the temple as most people did but she was too poor to be able to afford anything. But she knew of an old tree that shed beautiful glossy red seeds. Fascinated by their beauty she began to collect them, hoping to one day carry them with her to the temple as a gift to the Lord. One by one she would pick them from the ground, treating each one like a precious gem. Polishing them and keeping them safe from the rain and the dust. In her eyes each of them glowed with warmth and radiance. She eagerly awaited the day when the Lord would see them. Others laughed at her and called her mad to pick the worthless seeds but she continued to do what she believed in.

Over a year the collection was built up and she had a large pouch full of Manjadikuru. Her eyes filled with glee as she held them close to her while she slept at night. Making up her mind to take them to the temple, she set out on a journey. Leaving the safety of her home and her loved ones, she set out on foot towards the temple. Her home was in a hilly province and she had to traverse rivers and deep forests as she moved towards her destination. She met people on the way. Some of them discouraged her. Some of them applauded her. But she didn’t care. Her mind was set on the temple and its deity and with single-minded focus she trudged on. Many people told her “this is not the way” but she followed her instinct and a force within her guided her ahead.

Every morning she would wake up with stiff joints, through the day her body would ache and at night she would collapse on the wayside in a tired stupor. In her mind she was aware that she may never be able to do this again in her life but in her eyes was a dream and on her lips was a smile. Forty four daunting days later, she arrives in the temple city of Guruvayur. Unfamiliar and tired she stumbles through the streets, forcing her body to make the last mile too.

Finally she arrives at the temple portals. She hears people talk amongst themselves about the special day at the temple. Apparently the day was the first of that month and the local ruler or Naduvaazhi would visit the temple on the first of every month. To display his devotion, he would submit an elephant every month as an offering to Krishna. Hearing these tales, the woman carefully makes her way to the inner precincts with her pouch.

The officers of the Naaduvazhi are clearing people from the path to make way for the ruler. In their power drunk arrogance and pettiness, they are unable to distinguish between wayfarers and devotees. Mercilessly they insult devotees and trample on children to get them out of their way. The woman tries to balance her pouch of Manjadikuru so that she doesn’t lose them but the officers insult and mock her and physically shove her out of the area. The trumpeting of the Naaduvazhi’s elephant is heard. With a last push from the insolent officers, the woman falls down and the pouch falls open and all the red seeds get scattered all over. A tear from the woman's eye fall on the temple floor.

Immediately the Naaduvazhi’s elephant goes beserk and starts to run amok in the temple. People run for their lives as the mad elephant starts to destroy things within the temple. Unable to control the elephant, the Naaduvazhi prays to Krishna for a solution. A voice is heard from within the temple - “where is my Manjadikuru?” "where is my devotee, who you have insulted and hurt?” "where is my gift that she lovingly put together?”

Realizing their folly, the people apologize to the woman and start to gather the red seeds that are scattered all over. Filling her pouch for her, she is escorted to the sanctum sanctorum with her lucky red seeds. After her submission of the offering, the elephant returns to normal. In memory of that devotee’s offering, even to this day, a big uruli full of Manjadikuru are kept within the temple.

நேர்மையை விதையுங்கள் | பதவியும் புகழும் தேடிவரும்.

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் புகழும் தேடிவரும்.

Saturday, 23 May 2015

லஷ்மி கடாட்சம்

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.


நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.


அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. 

 தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. 

பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது.

பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்

கண்திருஷ்டி கழிக்கும் வழிகள்

கண்திருஷ்டி கழிக்கும் வழிகள்
1. தேங்காய் ஓட்டில் உப்பு, கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வைத்து,குடும்பத்தினர் அனைவரையும் ஒருசேர அமர வைத்து,மூன்றுமுறை நன்றாகச் சுற்றி எறியும் அடுப்பில் போட்டுவிடுவார்கள். அப்போது எல்லா வீட்டிலும் விறகு அடுப்பு இருக்கும். இக்காலத்தில் எல்லாருக்கும் இது சத்தியப்படுவது சந்தேகம்தான்.
2. சின்னக் குழந்தைகள் அடிக்கடி அழது கொண்டிருந்தால்,வெந்நீரில் நன்றாகக் குளிக்க வைத்துவிட்டு கொஞ்சம் கல் உப்பை எடுத்து மூன்றுமுறை சுற்றி, குழாயைத் திறந்து தண்ணீரில் உப்பைக் கரைத்துவிடவும்.
3. பெரியவர்களுக்கும் உடம்பு சொல்ல முடியாதபடி அசதி இருப்பின்,அவர்களும் உப்பு கரைத்த நீரில் கால்,கை முகம் கழுவி விட்டு,பின் நல்ல நீரில் கழுவினால் கண்ணேறு தோஷம் நீங்கிவிடும்.
4. எல்லாருக்கும் தெரிந்தது கற்பூரம்,கற்பூரத்தை குடும்பத்தினர் அனைவருக்கும் சுற்றிவிட்டு வாசலில் கொளுத்திவிட திருஷ்டி மறையும்.
5. புது வீடு கட்டும்போது,சோளக்கொல்லை பொம்மை அல்லது பூசணிக்காய் படம் வரைந்து மாட்டுவதும் ஒரு பாதுகாப்பு திருஷ்டிப் பரிகாரம்.
6. வீட்டில் அவ்வபோது சாம்பிராணி புகை போடுவதும் சிறந்த திருஷ்டி பரிகாரம்,கிருமி நாசினி பாதுகாப்பும் ஆகும்.

7. வீட்டு நுழைவாயில் கதவு, நிலைப்படி, வாசலுக்கு இருபுறமும் மஞ்சள், குங்குமம் வைப்பது தீய சக்திகளைத் தடுக்கும். தீய கிருமிகளிடமிருந்து பாதுகாப்பும் தரும்.
8. வீட்டினுள் அவ்வபோது பசுவின் கோமியம் தெளிக்காலம்;பீடைஒழியும்.
9. சிறு குழந்தைகளுக்கு கன்னத்தில் கருப்பு மையினால் பொட்டு வைக்க, திருஷ்டி நீங்கும்.
10. பசுஞ்சாணம் ஒரு கிருமி நாசினி மற்றும் தோஷநீக்கி ஆகும். முன்பு வீடு மற்றும் சாப்பிட்ட இடத்தை பசுஞ்சாணம் கொண்டு மெழுகும் வழக்கம் இருந்தது. தற்காலத்தில் முடிந்த மட்டும் பசுஞ்சாணம் பயன்படுத்த முயற்சிக்கலம்,மேலும் பசுவை வணங்குதலும் சிறப்பு.
11. நாம் சார்ந்துள்ள,பழகும் மனிதர்களின் கிரக அமைப்புகளை நம்மால் மாற்ற இயலாது. ஆயினும் அப்படிப்பட்ட மனிதர்கள் மூலம் ஏற்படும் திருஷ்டி ,அசுப ராசி எனப்படும் தீய அதிர்வலைகளிளிருந்து நம்மைப் பாதுகாக்கவும்,மனத்திருப்திக்காகவும் சிற்சில திருஷ்டிப் பரிகாரம் செய்வது நல்லது.
12. சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பினாலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை நசுக்கி பூஜை முடித்து அனுப்பும் உத்தம நாடல்லவா நம் இந்தியா, எனவே இத்தகைய திருஷ்டிப் பரிகாரம் எல்லாம் வாழ்வில் முக்கியம் !

கடவுளை மனிதனாக வணங்குவது ஏன்?

கடவுளை மனிதனாக வணங்குவது ஏன்?
ஸ்வாமி விவேகாணந்தரின் விவேக மொழி!!
-------------------------------
எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள்? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. தன் முன்னால் உள்ள பொருட்களோடு இணைத்தே அதை அவன் நினைக்க வேண்டியிருக்கிறது.
நீல வானத்தையோ, பரந்த வயல்களையோ, கடலையோ அல்லது பெரிதாக உள்ள வேறு எதையோதான் அவன் நினைக்க வேண்டும். வேறு எப்படி அவனால் இறைவனை நினைக்க முடியும்? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எங்கும் நிறைந்தவர் என்று சொல்கிறீர்கள், கடலைப் பற்றி நினைக்கிறீர்கள். கடவுள் கடலா என்ன?
நாம் இப்போது மனித உடலமைப்பில் கட்டுண்டிருக்கிறோம். எனவே நம்மால் கடவுளை மனிதனாகத்தான் பார்க்க முடியும். எருமைகள் இறைவனை வழிபட முடியுமானால் அவை அவரை ஒரு பெரிய எருமையாக நினைக்கும். ஒரு மீன் கடவுளை வழிபட விரும்பினால், அது அவரை ஒரு பெரிய மீனாக எண்ணிக்கொள்ளும். மனிதன் ஆண்டவனை மனிதராகவே நினைக்க வேண்டும். இவை வெறும் கற்பனையல்ல.
நீங்கள், நான், எருமை, மீன் எல்லாம் பல்வேறு பாத்திரங்கள். இவை அனைத்தும் கடலுக்குச் செல்கின்றன. தங்கள் அளவுக்கேற்றவாறு தங்களுள் நீரை நிறைத்துக் கொள்கின்றன. மனிதனில் மனிதனுக்கேற்றபடி, எருமையில் எருமைக்கேற்றபடி, மீனில் மீனுக்கேற்றபடி, ஒவ்வொரு பாத்திரத்திலும் தண்ணீர்தான் உள்ளது.
அதேபோல்தான் எல்லோரிலும் உள்ள கடவுள் விஷயமும். மனிதன் அவரைப் பார்க்கும்போது மனிதனாகப் பார்க்கிறான். மிருகங்கள் அவரை மிருகமாகப் பார்க்கின்றன. எல்லோரும் தங்கள் எண்ணப்படியே பார்க்கின்றனர். அவரை இந்த ஒரு வழியில்தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் அவரை மனிதராகவே வழிபட வேண்டும். ஏனெனில் வேறு வழியில்லை.
எனவே இறைவனை மனிதனாக வழிபடுவது மிகவும் இன்றியமையாதது. எந்த இனத்துக்குத் தான் வழிபடுவதற்கு அத்தகைய இறை மனிதர் இருக்கிறாரோ, அந்த இனம் பேறு பெற்றது.

பிரபஞ்ச வடிவான இறைவன்

சில குருடர்கள் ஒரு பார்வை உள்ளவனிடம் சென்று, "ஐயா! எதோ பெருசா யானைன்னு இருக்காமே, எங்களுக்கு யானை எப்படி இருக்கும் என்பதனை அறிய வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அது எப்படி இருக்கும்??" என்று கேட்டனர். இவர்களுக்குத்தான் கண் தெரியாதே. அதனால் அந்த பார்வை உள்ளவர் இர்வர்கள் மீது அன்பு கொண்டு யானையைப்பற்றி விவரிக்கலானார். "யானை உயரமா இருக்கும். கருப்பா இருக்கும். வெள்ளையா தந்தம் இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே போனார். "உயரமா?? உயரம்னா என்ன?, கருப்பா?? அப்படினா?, வெள்ளையா???? தந்தமா????" ஆனால் இவர்களுக்கு அது ஒன்றும் புரியவில்லை. "புரியலியே சாமி!!" என்றதும், அந்த பார்வயுல்லவன் பார்வை அற்றவர்களை ஒரு யானையின் முன் நிறுத்தி, "உங்கள் முன் ஒரு யானை உள்ளது அதை தொட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்" என்று சொன்னார்.
ஒருவன் துதிக்கையை தொட்டான். "ஆ ஆ ஆ!!!! கண்டுபிடித்துவிட்டேன் யானை ஒரு பெரிய காற்று வரும் குழாயைப்போன்றது" என்றான்.
அதை மறுத்த காலை பிடித்த இரண்டாவது குருடன், "இல்லை இல்லை!!! யானை ஒரு பெரிய தூனைப்போன்றது" என்றான்.
இருவரையும் மறுத்த மூன்றாமவன் காதை தொட்டுப்பார்த்து, "முட்டாள்களே!! யானை ஒரு விசிரியைப்போன்றது" என்றான்.
அனைவரும் ஏசியவாறு, நான்காமவன் வாலை தொட்டுப்பார்த்து, "அறிவிலிகளே! யானை கயிறைப்போன்றது. உங்கள் அனைவரது யானையும் யானை அல்ல என்னுடைய கயிறைப்போன்ற யானையே யானை." என்றதும், வந்ததே கோபம் மற்ற மூவருக்கும். இவனை அவன் சாட, அவனை இவன் சாட, யாரும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகவே இல்லை. இறுதியில் இவர்கள்மீது பரிதாபப்பட்டு, பார்வை உள்ளவன், அவர்களின் சண்டையை விளக்கி, "நீங்கள் நால்வரும் சொல்வது சரிதான், ஆனால் இவை அனைத்துமே யானையின் அங்கங்கள், அந்த அங்கங்களின் ஒருங்கிணைப்பே யானை எனப்படுவது" என்றார். "எங்கள் கொள்கைகளை குறைகூறி எங்களை அவமதிக்கின்றாய," என்று இந்த நால்வரும் சேர்ந்து அவனை உதைக்க சென்றுவிட்டார்கள். அவன் விட்டால் போதும் என்று காட்டிற்கே ஓடி விட்டான்.
என்ன சிரிப்பாக உள்ளதா? இந்த கதயைப் படிக்கும்போது உங்களுக்கு ஏதேனும் தோன்றியது?
அந்த குருடர்கள் யார் தெரியுமா???
நாம் தான். ஆம், நாமே தான்.
இறைவனின் ஒரு சக்தியை உணர்ந்தவன் அவனை சிவன் என்கிறான். மற்றொருவன் விஷ்ணு என்கிறான். இறைவனின் தாய்மையை உணர்ந்தவன் அதை சக்தியின்வடிவமாக அன்னையாக பூசிக்கிறான்.
அந்த பிரபஞ்ச சக்தியின் மற்றொரு பாகத்தை உணர்ந்தவன் அதை "அல்லா ஹு அக்பர்'' என்கிறான்.
இறைமையில் அன்பை உணர்ந்தவன் அவனை "ஏசு" என்கிறான்.
இறைவனின் பிரகாசத்தை உணர்ந்தவன் அந்த பிரகாசத்தை "அடோநோமஸ்" என்கிறான்.
பிரபஞ்சத்தில் உள்ள வெற்றிடத்தை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை "சூனியம்" என்கிறான்.
இறைமையின் சூனியத்தை அறிந்தவன் "இறைவன் இல்லை" என்கிறான்.
பிரபஞ்சத்தின் முழுமையையும், பிரம்மாண்டத்தையும் உணர்ந்தவன் "பூரணம், பிரம்மம், ஆனந்தம்,.........." என்கிறான்.
இன்னும் சிலர் எத்தனையோ கோட்பாடுகளால் அந்த இறைவனை துதிக்கின்றனர், திட்டுகின்றனர், காரிஉமிழ்கின்றனர், கற்பூரம் காட்டுகின்றனர், மண்டியிட்டு தொழுகை செய்கின்றனர், கைகூப்பி பிரார்த்திக்கின்றனர்...................................
ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் ஆதரவும், எதிர்ப்பும் சேர்த்து சண்டை செய்கின்றனர்!!!
அனைவரின் கருத்தும் அவரவர் கண்ணோட்டத்தில் சரிதான். அனைத்தும் அவன்தான், ஆனால் பிரபஞ்ச சக்தியான இறைவன் இவைகளில் ஏதோ ஒன்று மாட்டும் இல்லை. அந்த முழுமை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. பெயர்களுக்கும் இனத்திற்கும், மொழிக்கும், உலகங்களுக்கும், அண்டங்களுக்கும், அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அது அனைத்துமே ஆனது. அனைத்துமே இறைவன் தான். இறைவன் என்று ஒருவன் எங்கோ பரலோகதோயில், தேவலோகதிலோ, எங்குமே இல்லவே இல்லை. தனியே இறைவன் என்ற ஒன்று இல்லவே இல்லை. அனைத்தின் ஒருங்கினப்பே பிரபஞ்ச வடிவான இறைவன் ஆகும்.

Friday, 22 May 2015

ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம்
-உயிருள்ள ஜடப்பொருள்

உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது. இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இரு பரிமாணங்களில் செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்கு மூலமாக அமைந்துள்ளது. வேதாந்தம் இதையே புருஷத்துவம் மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறது. இருவகையன செயல் அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்கு தெரியாது. வேதாந்த உண்மையான இந்த இரு செயல்களை புரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளை புரிந்துகொள்ளமுடியும்.

இயற்கையின் தன்மை சாஸ்வதமானது. இயற்கை என்பது உருவக்கப்பட்டது அல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது, இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும் என்பதயே குறிக்கும். ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும், இது தற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம் புருஷத்துவமே ஆகும்.



அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம் கண்டுபிடித்தது என்பதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு என கூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள், வடிவம் மற்றும் தன்மை இயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதை அறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் என கூறலாம். ஆனால் இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால் இயங்கிவருகிறது என கூறுவார்கள். முக்குணத்தை (தோஷங்கள்) வாத, பித்த, கப குணம் சொல்லுவதை கேள்விப்பட்டுள்ளோம். இந்த
இயற்கையன மூன்று குணங்கள் மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாக ஆயுர்வேத சாஸ்திரம் கூருகிறது. மனித உடலில் தோஷத்தில் ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.
இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது) என்றும் மனித உடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள் ப்ரகிருதித்துவம் (செயற்கையானது) என்றும் வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்த சாரமான புருஷ, ப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கான சான்றை விளக்கியுள்ளேன்.

நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம். மனித உடல் என்பது இயற்கை யின் படைப்பு, இதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கும் பொழுது புருஷத்துவம் கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறது. நமது இயற்கையான (புருஷார்த்த) குணம் என ஒன்று உண்டு. ஆனால் சமூக நடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள் ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத் தன்மையை சாரும். நான் கூறும் இது போன்ற உதாரணங்களால் புருஷத்துவம் மேலானது ப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது. புருஷத்துவமும், பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையான புருஷத்துவமே மூலம் என கூருகிறார்கள். புருஷத்துவமே அனைத்து
விஷயங்களுக்கும் ஆதாரமானது என்பது அனைத்து மதத்தின் விளக்கம். அதனால் தான் சில மதங்கள் ஒரே கடவுள் எனும் கொள்கையை கொண்டுள்ளது. பாரதத்தில் தோன்றிய மதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையான இறை நிலை என ப்ரகடனப்படுத்தியது. புருஷ நிலையை சிவன் என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும் விளக்கினார்கள். சிவன் ஆண் தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க காரணம் சிவநிலை என்பது அசைவற்றது, சக்திநிலை என்பது அசையக்கூடியது.(இயங்கும் தன்மை) என்ற வேறுபாட்டால் தான்.

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்)
என வகைப்படுத்தினார்கள். இயற்கையில் செயற்கை தன்மையும், செயற்கையில் இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன் கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் அமைந்துள்ளன. பருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம், இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல் என்பது செயற்கையான செயல்பாடு.

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும் ஆடையும், ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பது சிவசக்தி நிலையை குறிக்கும். இதனால்தான் சக்தி வழிபாடு செய்பவர்கள் அதிக ஆடை அணிகலன் அணிவதும், இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன் நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல்
அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.
ப்ரபஞ்சத்தின் படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்து துவங்குகிறது. புருஷ தன்மை என்பது இயக்கமற்றது. புருஷத் தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லை. பிரகிருதிக்கு கால பரிமணமும் உண்டு. பிறந்த குழந்தை புருஷ தன்மையில் தேச, கால வித்யாசம் இன்றி இருக்கிறது. வளர்ந்த மனிதன் புருஷ நிலையில் இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள் கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும் புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம், தியானம் மற்றும் யோகம் எனும் ஆன்மீக வழிகள்
உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் சனாதான தர்மம் என அழைக்கப்படும் பாரத
தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும் ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டு. குறிப்பாக ருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டு. பிற ஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறைய முரண்பாடான தகவல்கள் உலவுகிறது. தெரியவேண்டிய விஷயம் மறைக்கப்பட்டும், தேவையற்ற விஷயங்கள் உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தை உண்டு செய்கிறது. இந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டது.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது.
இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. மேலும் ருத்ராஷத்தை பயிர் செய்து விளைவிக்க முடியாது. ருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில் வளர்க்கும் பொழுது இயல்பான வளர்சியையோ, ருத்ராஷத்தின் வடிவத்தையோ பெறுவதில்லை. நேபாள தேசத்தில் பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட அதை ஒரு இயற்கையான வன பகுதியாக வைத்திருக்கிறார்கள். நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக
தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சாதாரண ஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் என எதிர்வாதம் செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறியின் சில்லு(Chip)
வேலை செய்வதையும், உலகின் பல கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ள செய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டு. உயிரற்ற மணல் இது போன்ற செயலை செய்யும்பொழுது உயிருள்ள தாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக செயல்களை செய்ய முடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அது வேலை செய்யாது. அதற்கு தேவையான இணைப்புகள்,
மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால் அவர்கள் அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள். அது போல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.
ருத்ராக்ஷம் என்பது ருத்ரனின் ஆக்ஷம் என விளக்குபவர் உண்டு. ஆக்ஷம் என்றால் கண்ணீர் என பொருள்பட சிவனின் கண்ணீர் என ருத்ராக்ஷம் எனும் சொல்லை மொழி பெயர்ப்பார்கள்.சிவன் ஏன் அழவேண்டும்? அவருக்கு என்ன கஷ்டம் வந்தது அழுது கண்ணீர் வடிக்கும் அளவிற்கு, என குழப்பம் கொள்ளும் அளவிற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு அமைந்து விடுகிறது. ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம் என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என பொருள்கொள்ளலாம். ருத்ரநிலையில் தனது புருவ மத்தியில் உள்ள மூன்றாம் கண்ணை திறக்கும் பொழுது வெளிப்பட்டஆற்றல் திண்ம வடிவில் மாற்றம் அடைவதே ருத்ராக்ஷம் என அழைக்கிறோம்.

ஆக்ஷம் என்ற சொல்லுக்கு " கண்ணிலிருந்து வெளிப்படுவது" என்றும்பொருள்கொள்ளமுடியும். ருத்ரனின் நெற்றி கண்ணிலிருந்து உதிரும் பொருள் என சரியாக மொழி பெயர்க்க வேண்டும். இதன் மூலம் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.


ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.


ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வகையில் உடைந்து விடுவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.


தியான நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும முறையில் ஆற்றலை கடத்துதல், அவர்களின் ஆன்மாவுடன் உரையாடுதல் என ருத்ராக்ஷம் ஒர் உயிராகவே செயல்படும். 108 மணிகள் கொண்ட ருத்ராக்ஷ மாலை அணிந்து வலம் வருபவர் ஒரு கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உலா வருவதற்கு சமமான செயலை செய்கிறார் என்பதை உணரவேண்டும்.


ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.


தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

எனக்கு தெரிந்த ஓர் சினிமா நடிகர்
ருத்ராக்ஷத்தை தவறாக ஃஷேன் ஷோவில் பயன்படித்தினார். அதுவரை சிறப்பாக இருந்த அவரின் வெற்றிகள் தடம்மாற துவங்கின. அதனால் ருத்ராக்ஷம் பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.


மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.


ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.


ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.


ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.


ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.


1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.


3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.

4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.


5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.


தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.

ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.


ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும்
ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.

ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.