Thursday, 14 May 2015

அவரைக்காயின் மகத்துவங்கள்

பொதுவாக காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்து கொள்வது உடல்ரீதியாக மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும்.
குறிப்பாக பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.
அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அவரைக்காயின் மகத்துவங்கள்
அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.
அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
அவரைக்காய் பொரியல்
அவரைக்காயை நன்றாக அலம்பிக்கொண்டு நுனியைப் பிரித்து நாரைப் பிரிக்கவும்.
ஒவ்வொரு அவரைக்காயையும் இவ்விதம் செய்து கூறு பிரித்துப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
இதன்பின் பொடியாக நறுக்கிய அவரைக்காயைத் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட்டால் அவரைக்காய் பொரியல் ரெடி.
பயன்கள்
மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும்.
அறிவுத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் மூட்டு வலிக்கு இது ஒரு சிறந்த மருந்து.
அவரைக்காய் கூட்டு
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
பிறகு உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் போட்டு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
தண்ணீர் நன்கு வற்றும் வரை காயை வேக விடவும்.
இறுதியில் எலுமிச்சை பழ சாரை சேர்த்து கிளறி இறக்கி விட்டால் அவரைக்காய் கூட்டு தயார்.
பயன்கள்
நுரையிரலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
கண் பார்வை நன்றாக தெரிய உதவும்.

No comments:

Post a Comment