Thursday, 14 May 2015

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கோடைக்காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் அதிகமாக தாகம் எடுக்க ஆரம்பித்துவிடும்.
தண்ணீர், குளிர்பானங்கள், தர்பூசணிப்பழம் என்று சாப்பிடும் நாம், கொஞ்சம் மோர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது தர்பூசணி பழம் சாப்பிட்டால் சிலருக்கு உடல்சூட்டை கிளப்பிவிடும்.
ஆனால், மோர் இயற்கையான பானம் என்பதால் அதனை எவ்வித பயமின்றி குடிக்கலாம்.
நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பிக்கும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.
அதிகமான உணவை உட்கொண்ட பின்னர் சிரமமாக இருந்தால், ஒரு டம்ளர் மோர் குடியுங்கள்.
இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் இருக்கும்.
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதில் எலக்ட்ரோலைட்ஸ்(Electrolytes) மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், கோடையில் குடிக்கும்போது உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment