Wednesday 6 May 2015

மங்கைகான மஞ்சள் நீராட்டு...

மங்கைகான மஞ்சள் நீராட்டு....
அதென்ன மங்கைகான மஞ்சள் நீராட்டு?
ஆடவருக்கான மஞ்சள் நீராட்டு வழக்கமும் உள்ளது. இது பற்றிய விளக்கம் மற்றொரு பதிவில்.....
மஞ்சள் நீராட்டு வழக்கம் தமிழர்களிடம் மட்டுமல்லாது உலகின் பல இடங்ளிலும் பல பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலசுழற்சியின் காணமாக மறைந்துவிட்டது.
எதற்காக இவ்வழக்கம் என்ற தேடலின் போது பலவிதமான கருத்துகள் கிடைத்தது. அவற்றில் சில,
1. பெண் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக உறவினர்கள் அறிந்து கொள்ள.
2. பால்ய விவாகம் நடத்தப்பட்ட பெண்கள் முதிர்ந்த பின் கணவன் வீட்டாரால் அழைத்து செல்லும் போது செய்யும் சடங்கு.
3. ஆணாதிக்க சமூகம் பெண்ணை அந்தரங்க வாழ்கைக்கு பயன்படுத்த தயாரானதை விழாவாக கொண்டாட.
இப்படி மேலும் சில கருத்துகள் கிடைத்தது. இருப்பினும் நம் புரிதல் பின்வருமாறு.
இன்றைய சடங்கு செயல் முறைகளும் குழப்பமளிக்கும் விதமாக ஊருக்கொரு முறையிலும் சாதிக்கொருமுறையிலும் நடைபெறுகிறதென்றாலும் சில ஒற்றுமை இருக்கவே செய்கிறது.
இச்சடங்கு முறைகளில் மிகவும் தவறான வழிமுறையில் உள்ளது கொங்கு பிரதேசம் என்ற படித்த மேதாவிகள் வாழும் பகுதியான கோவை, திருப்பூர் , கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களே.
சற்றே ஆருதலாக இருப்பது தென்னக மாவட்டங்களும் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற (ஆங்கில) படிப்பில் பின்தங்கிய மாவட்டங்களே.அடுத்த தலைமுறையில் இதுவும் இருக்குமா?????
இச்சடங்கின் முதன்மையான காரணம் பூப்பெய்தியை பெண்ணின் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வளித்து புத்துணர்வும் புதுப்பொழிவும் வழங்கவே என்பதை அச்சடங்கு முறைகள் நமக்கு உணர்த்துகிறது.
சடங்கு முறைகளை காண்போம்...
பூப்பெய்திய நாளன்று ஏகாலி குல (சலவை தொழிலாளி) பெண்களை அழைத்து (அக்குல பெண்களே அதீத அனுபவ நிறைந்தவர்கள்), அவர்கள் வழி நடத்தும் முறையில் தண்ணீரால் ருது மங்கையை குளிர்வித்து
(குளிப்பதல்ல குளிர்விப்பது) வீட்டின் ஒரு பகுதியில் பச்சை ஒலை குடிசை அமைத்து அமர்த்துவர். சில இடங்களில் மாமி, அத்தை போன்ற உறவினர்களும் அப்பகுதி மூத்தோரும் இதை செய்வர்.
பெண்ணின் தாயை செய்ய கூடாதென்பதற்கு காரணம் பதட்டமும் மகிழ்ச்சியும் கலந்த மனநிலையில்இருப்பார்கள் என்பதனாலும் உறவின பெண்கள் பலரிணைந்தால் உருதுணை என்பதனாலும். (இன்றைய உறவின பெண்கள் இணைந்தால் என்ன நடக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?)
முறை செய்ய ஏன் என்னை அழைக்கவில்லை என்று வினவும் உறவினர் இல்லாத பெண்களுக்கும் பிற தேசங்களில் வாழும் பெண்களுக்கும், தாயும் தாய்க்கு சமமானவர்களும் (பதட்டமில்லாத தெளிந்த சிந்தையில் இருந்தால்) இச்சடங்கை செய்யலாம் என்பதும் சில கிராமங்களில் வழக்கத்தில் இருந்துள்ளது.
இச்செயலில் மஞ்சள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும்?
உண்மையில் மஞ்சளை தினமும் பயன்படுத்துவதே வழக்கம். அன்று மட்டுந்தான் பயன்படுத்துவேன் என்று அடம்பிடிப்பவர்கள் மஞ்சளை தாமே வாங்கி அரைத்து பயன்படுத்த வேண்டும். கடைகளில் கிடைக்கும் பூசு மஞ்சளை வாங்கி பயன்படுத்தக் கூடாது. கடைகளில் விற்கப்படும் மஞ்சள் ,மஞ்சள் நிற சாயப்பொடியின் கலவை. அவசரத்திற்க்கு மஞ்சள் கிடைக்காதவர்கள் தண்ணீரால் மட்டுமே குளிர்விக்கலாம் தவறில்லை. கண்டீப்பாக மஞ்சளைஉடலில் பூசத்தான் பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் கலந்து பயன்படுத்த கூடாது. (மஞ்சள் மகிமையை நானுணர்த்த தேவையில்லை). வேப்பிலை ஊற வைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம். வெப்பநிலைக்கு தகுந்தவாறு நீரின் வெப்பநிலை இருக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீராக இருக்கக் கூடாது. வசதி படைத்தோர் சந்தனம் மற்றும் ரோசா இதழ்களையும் பயன்படுத்தலாம். இயற்கையானதாக இருக்க வேண்டும்.
ஒருநாள் விட்டு ஒரு நாள் அதாவது 3,5,7,9,11ம் நாள் நல்ல எள் நெய் , ஆமனக்கு நெய் மற்றும் தேங்காய் நெய் தேய்த்து பின்பு சிகை காய் அல்லது அரப்பு தேய்த்து குளிர்விக்க வேண்டும்.
பச்சை ஓலைகளை கொண்டு குடில் அமைக்க காரணம் குளிர்ச்சிமட்டுமல்ல வாசனையுந்தான். உளவியல் மற்றும் உடலியல் மாற்றங்களுக்கு தென்னை ஒலை சுவாசம் உருதுணையாகும். இருப்பவர் பயன்படுத்தலாம் இல்லாதவர் பூக்களின் சுவாசம் கொண்டு மனநிறைவடையலாம். பூக்களில் மரிக்கொழுந்து மற்றும் சம்பங்கி கதம்பம் மிக சிறந்ததாக கருதப்படுகிறுது. சாமந்தி, செவந்தி மற்றும் முல்லை பூ க்களும் பயன்படுத்தலாம் என்று பரவலாக கருதப்பட்டுள்ளது. இதில் சாமந்தி பூ புரட்டாசி மாதம் மட்டுமே பூக்கும்.
உணவு முறை இடத்திற்கிடம் மாறுபடுகிறது. இருப்பினும் பெரிய வேற்றுமையில்லை. பொதுவாக கீழுள்ள உணவுகள் அனைத்தும் பெண்களுக்கு சிறந்த உணவே.
1. பச்சரிசி, துவரம்பருப்பு மற்றும் சிறிதளவு உளுந்து சேர்த்து எள்நெய்யில் செய்த பருப்பு சாதம்.
2. பனைவெல்லம்,அரிசி மாவு மற்றும் பொட்டுகடலை கலந்த மாவுருண்டை.
3. உளுந்து மாவு வடை எள் நெய்யில் சுட்டது. உளுந்து கஞ்சி வெல்லம் சேர்க்கப்பட்டது.
4. சாமை சாதத்துடன் கொள்ளு ரசம் சேலம் மாவட்டத்திலும், கேழ்வரகு களி தஞ்சை மாவட்டத்திலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் கம்பு, கேழ்வரகு போன்றவை சேலம், மற்றும் தருமபுரி பகுதிகளில் தடைசெய்யப்படுகிறது.
5. நாட்டு சர்க்கரை +பொட்டு கடலை + நிலக்கடலை.
7. வாழைபழத்தில் பச்சை வாழையை தவிர்த்து மற்ற அனைத்தும். பேரீச்சம் மற்றும் மாதுளை, உலர் திராட்சை போன்றவையும் நல்லதே. இயற்கையானதாக இருந்தால்.
8. தேன் காய் (தேங்காய்) துருவல். தேன்காய் பால் பனை வெல்லம் சேர்த்து.
9. நாட்டு கோழி முட்டை பச்சையாக எள் நெய்யுடன் சேர்த்து.(தென்னக மாவட்டங்களில் மட்டும் வழக்கத்தில் உள்ளது.)
10. இயற்கையாக கிடைக்கும் காய் மற்றும் கீரை வகைகளை ருது மங்கை விரும்பினால் கொடுக்கலாம்.
மேற்கூறிய அனைத்தையும் கட்டாயப்படுத்தி கொடுக்கக் கூடாது. அதே நேரம் வீணாக்கவும் கூடாது.
இத்தனை உணவுகளையும் அன்னையே செய்யமுடியுமா? நிச்சயம் முடியாது.
இதனால் தான் தினமும் உறவினர்களில் எவரேனுமொருவர் வந்து உணவு சமைத்து பரிமாறுவர். (பலகார பந்தியிட்டு பசியாற்றுவர் பசியாறுவர்.) இன்றய நிலை????
உடையை பொருத்தவரை பயன்படுத்திய பருத்தி ஆடைகளை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக 11 நாட்கள் முடிந்த பின்பு அதிகாலையில் நலுங்கு வைத்து குளிப்பாட்டி அழங்கரித்து அளவலாவுவர். இவ்வாறு அளவலாவ காரணம் ருது நங்கையின் கூச்சம் குறைந்து சாதாரண நிலையடையவே.
இச்சடங்கின் முதல் நாள் தொட்டு சடங்கு முடியும் நாள்வரை சக வயது தோழிகள் உரையாடலும் உருதுணையும் பேருதவியாகும்.
சடங்கு பாடல்கள் பாடப்பட்டதன் காரணம் எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் வாழ்த்தவும், வழக்கத்தை உணர்த்தவுமே. நாட்டுபுற பாடல்களின் தொகுப்பாக தனி பதிவிடப்படும்.
ருது மங்கைகள் உபயோகிக்க தனியே பொருட்களை கொடுப்பதன் காரணம் தீட்டு என்பது தவறான கருத்து. அடுத்தவரின் உடலியல் உளவியல தாக்கங்கள் ருது நங்கையை பாதிக்காமலிருக்கவே.
அனைத்து பொருட்களுடன் குடிலை எரிப்பதின் காரணம் அவைகளால் ஈர்க்கப்பட்ட தீய சக்திகளை (உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களால் உருவான) அழிக்கவே.
சில இடங்களில் மாத இறுதியாக ருதுவான பெண்களுக்கு இரு மாதம் வரக்கூடாதென்பதற்காக 3 அல்லது 5 ம் நாட்களில் இச்சடங்கு செய்யப்படுகிறது. நிச்சயமாக 11ம் நாளன்று செய்வதே சிறந்தது.
வெளியில் செல்லக்கூடாது , மற்றவர்களுடன் விளையாட கூடாது என்ற கட்டுபாடுகள் ஒய்வெடுக்க வேண்டும் என்பதற்காகவே.
மாதாமாதம் உதிர காலங்களில் முதல் மூன்று நாள்களுக்கு உடலை குளிர்விக்க கூடாது. ஒய்வு கொடுக்க வேண்டும். தொல்லைகாட்சி விளம்பரங்களை பார்த்து மரம் ஏறுதல், பந்து விளையாடுதல் மற்றும் குதித்து ஓடுவது போன்ற சாகசங்களில் ஈடுபடக்கூடாது.
(பணம் நிறைய வைத்து செலவு செய்ய வழி தேடுவோர் அரண்மனை போன்ற அரங்கில் ஊர் பேர் தெரியாத உறவினர்களை அழைத்து, கேசரியா கேப்பை களியா என விளங்காத மூப்பது வகை உணவுகளை பந்தியிட்டு, என் மகளும் மாதுவானால் என ஊரார் ஒவ்வொருவர் காதிலும் ஓதிவிடுங்கள் ஒன்றிரண்டு லகரங்கள் உம் சொத்தில் குறையும். உலகமே உம் செயல் கண்டு உருகும். தங்கள் தற்பெருமையும் பேசப்படும், மகளின் மனநிலையும் மாசடையும்)

No comments:

Post a Comment