Wednesday, 6 May 2015

நேர்மறை மனப்பாங்கு

நேர்மறை மனப்பாங்கு:
1. ஒருசிலர் எதிலும் குறை சொல்வது, எல்லாவற்றையும் சந்தேக மனப்பான்மையுடன் பார்ப்பது இந்த நிலையில் உள்ளனர்.
2. ஒருசிலர் சிலரின் தவறுகளை உண்மையாக உணர்ந்து, அவர் மீது உள்ள நல் எண்ணத்தால், அந்த தவறை சுட்டிக்காட்டி அந்த தவறிலிருந்து வெளிவர உதவுவர்.
இதில் எது தனக்கும் மற்றவருக்கும் பயனுள்ளது? இரண்டாவது கருத்தாகும். ஏன் ? இரண்டாவது கருத்து இருவர் நிலைக்கும் பயனுடையது. ஆனால் முதல் கருத்து நிலை தன் குறை கானும் மனப்பான்மையால் தானும் திருப்பதி இல்லாமல் மற்றவரையும் குறை சொல்லி புண்படுத்துவர். முதல் கருத்துடையவர் எதிர் மறை மனப்பான்மையுடையவர். இரண்டாவது கருத்த்துடையவர் நேர்மறை மனப்பான்மையுடைவர். நேர்மறை மனப்பான்மையால் தானும் நலம் பெற்று பிறரையும் நலமுடன் வாழ செய்ய முடியும்.
ஒரு பாதி தண்ணீர் கொண்ட ஒரு டம்ளரை பார்ப்பவர், அரை டம்ளர் காலியாக இருக்கு என்பார் இவர் எதிர் மறை மனப்பான்மையுடையவர், இன்னொருவர் அரை டம்ளர் நீர் இருக்கு என்பவர் நேர்மறை மனப்பான்மையுடையவர் ஆவர். நேர்மறை மனப்பான்மை யுடையவரால் என்றும் நன்மையே.
நேர்மறை மனப்பான்மை என்பது தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும் என்பதல்ல. நிறைகளை பார்த்து, குறைகளை அறிந்து சரி செய்வதாகும்.
ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு:
லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர். லக்னாதிபதி இருக்கும் இடம் அவர்மனப்பாங்கை தீர்மாணிக்கும்.
லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நேர்மறை மனப்பாங்கு உடையவர், 1,2,3,4,5,7,9,10,11 ல் இருப்பது நேர்மறை மனப்பாங்கைத் தரும்.
உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீசம் பெறும் பலம் பொறுத்து நேர்மறை மனப்பாங்கை செயல்படுத்தும் நிலை தரும்.
லக்னாதிபதி 6,8,12ல் இருப்பது எதிர்மறை மனப்பாங்கை தரும். பெறும் பலம் பொறுத்து செயல்படும் நிலை இருக்கும்.
தீய திசை புத்திகளில் தொடர்ந்து வரும் பிரச்சினைகளால் நமது சூழ்நிலைகளால் எதிர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு எல்லா வகையிலும் பிரச்சினைகளை அதிகரிக்கும்.
நல்ல திசை புத்திகளால் உற்சாகமும் வெற்றி களிப்பும், மகிழ்ச்சியும் உருவதால், நேர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு சோதனைகளை சாதனைகளாக, எல்லோர்க்கும் நல்லவனாகும் நிலை ஏற்படும்.
6,8,12 , பாதகஸ்தானம், சனி , ராகு , கேது, இவற்றின் திசையில் சுய புத்தியில் மிகுதியான எதிர்மறை மன்பாங்கு அதிகரிக்கும். சனி ராகு கேது உபஜெய ஸ்தாணங்களில் இருந்தால் நேர்மறை மனப்பாங்கு தரும்
மற்ற நல் பாவங்களின் 1,2,3,4,5,7,9,10,11 மற்றும் சூரி, சந், செவ், குரு, சுக் திசா புத்திகளில் நேர்மறை மனப்பாங்கு தந்து வாழ்வில் வெற்றி தரும்.
சூரியன் சனி, சனி செ தொடர்பு , சேர்க்கை, சம்மந்தம் சந்தேக மனப்பான்மை தரும். எதிலும் முழுமை பெற இயலாது.

No comments:

Post a Comment