Wednesday, 6 May 2015

“நான்” என்கிற மமதையில் வாழ்பவன் யார்?

“நான்” என்கிற மமதையில் வாழ்பவன் யார்?
இலக்கினத்திற்கு இரண்டாமிடமான வாக்குஸ்தானத்தில் செவ்வாய் பகை, நீசம் பெற்று இருக்க, இலக்கினாதிபதியும், வாக்கின் அதிபதியும் ஆறில் அமர, ஜாதகன் தனக்கு எல்லாம் தெரியும் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு திரிவான்.
இரண்டாமிடத்தினில் சுக்கிரன் பகை நீசம்பெற்று சனியுடனோ, இராகுவுடனோ கூடியிருந்து, இலக்கினாதிபதியும், இரண்டுக்குடைய வாக்கினதிபதியும் பனிரெண்டாமிடமான விரையஸ்தானத்தில் இருக்க, ஜாதகன் பல பொய்களைப் பேசுவார். அதன்மூலம் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வார். தற்புகழ்ச்சியானவர்.
ஒருவன் குருகுலத்தில் கல்வியும், வித்தையும் கற்றுக் கொள்வதற்காக குருவை அணுகினான். அவரும் கற்றுத் தருவதாக வாக்குறுதி தந்தார். அவனை விடிகாலை நான்கரை மணிக்கு தன்னைச் சந்திக்கும்படி சொல்வார். அவனும் சீக்கிரமே காலைக் கடன்களைமுடித்துவிட்டு, குருவை சந்திக்கச் செல்வான். அவர் குடிலின் வாசலில் நின்று, “ குருவே, நான் உங்களிடம் பாடம் கற்கவேண்டி வந்துள்ளேன்”.என்பான். உள்ளேயிருந்து ஒருகுரல், “போய் நாளை இதே நேரம் வாரும்” என சப்தமட்டும் வரும். அவனும் வந்துவிடுவான். இதேபோல்தான் ஒவ்வொரு நாளும் நடக்கும், அவனும் மறுநாளும் வந்து, “குருவே நான்” என ஆரம்பித்து முடிப்பான். உள்ளேயிருந்து, “நாளை” என்ற சப்தம் மட்டும் வரும். அவனும் வந்து விடுவான்.
ஒருநாள் யோசித்தான். நமக்கு பாடம் கற்றுத்தர குரு சம்மதிக்கிறார். ஆனால், அவர் சொல்லும் நேரத்திற்கு போனால், நாளை வா என்கிறாரே, காரணம் என்னாவாக இருக்கும் என யோசித்தான்.
அன்றைய இரவும் வந்தது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் குருகுலம் சென்றான். வாசலில் நின்று, “ குருவே, உங்களின் அடியான் வந்துள்ளேன்…..” என்று சொல்லி முடிப்பதற்குள், “உள்ளே வாரும்” என்று குரு அழைத்தார். அவனும் அறைக்குள் நுழைந்தான்.
இத்தனை நாள் திறக்காத கதவு, அவன், “அடியேன்” என்று தன்னைத் தாழ்த்தியவுடன் குருவின் இதயக் கதவுகள் திறந்தது.
நாமும் நம்மைத் தாழ்த்துவோம். உயர்த்தப் படுவோம்.

No comments:

Post a Comment