Wednesday 6 May 2015

ஜோதிட பழமொழிகள் :

ஜோதிட பழமொழிகள் :
1. பத்தில் குரு பதவிக்கு இடர்
2. இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
3. பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
4. நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
5. சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
6. வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
7. கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
8. ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
10. குரு பார்க்க கோடி நன்மை
11.கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
12.மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
13.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
14.மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
15.துலா கேது தொல்லை தீர்க்கும்
16.சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
17.சுவாதி சுக்ரன் ஓயா மழை
18.மறைந்த புதன் நிறைந்த கல்வி
19.சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
20.சித்திரை அப்பன் தெருவிலே
21.பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
22.விதி போகும் வழியே மதி போகும்.
23.அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
24.குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
25.சனி பார்த்த இடம் பாழ்
26.ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
27.எட்டில் சனி நீண்ட ஆயுள்
28.சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
29.அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
30.குரு நின்ற இடம் பாழ்
31.சனி பார்க்கும் இடம் பாழ்
ஜோதிட பழமொழிகள்
--------------------------
1. உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன்.
2. நீசனை நீசன் பார்த்தால் உச்ச பலன்.
3. அஷ்டமசனி, ஜென்ம ராசிக்கு 8ல் கோச்சார நீதியாக சனி வரும்போது அதுவே அஷ்டம சனி ஆகும்.
4. அஷ்டம சனி அழுதாலும் விடாது.
5. அஷ்டம சனி வந்தது போல் கட்டுவதற்கு கூட துணி விட்டு வைக்காது.
6. அஷ்டம சனி பிடித்தும் கெட்டிக்காரத்தனம் போகவில்லை.
7. ராஜபார்வை இருந்தால் அஷ்டம சனி என்ன செய்யும்? (குரு பார்வை)
8. சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும் புருஷன் அகப்பட மாட்டான்.
9. சனீஸ்வரன் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாருமில்லை.
10. காசி, ராமேஸ்வரம் போனாலும் சனி விட்டபாடில்லை.
11. குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும்.
ஒரு குடும்பத்தில் கடைசி குழந்தை (பரணி, பூரம், பூராடம்) சுக்கிரன் சாரம். சுக்கிர தசை நிகழ்ந்தால் கேடு விளைவிக்கும். குட்டி சுக்கிரன் வடக்கே போனால் மழை பெய்யும். தெற்கே போனால் வெற்றி நிச்சயம். மேற்சொன்ன நட்சத்திரத்தில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்த போது குழந்தை பருவத்திலேயே தெற்கு பக்கம் இடமாற்றம் செய்தால் செல்வம், வடக்கு பக்கம் இடமாற்றம் செய்தால் விவசாயம்.
12. குறுக்கு வழியில் செல்வம் தருபவர் ராகு.
13. ராகுவைப் போல் கொடுப்பாருமில்லை, கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை.
14. மேஷம் - தகடோடு எகரேல். மேஷ ராசிக்காரர்களோடு மோதுதல் கூடாது.
15. ரிஷபத்தானோடு தோரேல். ரிஷப ராசிக்காரர்களோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.
16. மிதுனம் - தண்டு கொண்டு இல் புகேல்.
இவர்கள் புத்திசாலிகள் என்பதால் இவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
17. கடகம் - தண்டாலுக்கு இடம் கொடேல். எவ்வித பிரச்சினைகளையும் சாதுர்யமாக சமாளிப்பர்.
18. கன்னி - கன்னி மகனை கைவிடேல்.
கன்னி ராசி ஆண் மகன் எனத் தெரிந்தால் நட்புக்கும் உறவுக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். எனவே இவர்களின் நட்பை உதாசீன படுத்தவே கூடாது.
19. துலாம் - துலாத்தான் எவ்விடத்திலும் தோனான். துலாம் ராசிக்காரர்கள் எதிலும் துவள்வது கிடையாது.
20. விருச்சிகம் - தேளானை பேணிக்கொள். விருச்சிக ராசிக்காரர்களை பொன் போல் பாதுகாக்க வேண்டும்.
21. தனுசு - வில்லானை சொல்லால் வளை. தனுசு ராசிக்காரர்களை அன்பு சொற்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்
22. மகரம் - மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன். இவருடைய ஜால வார்த்தைகளுக்கு மயங்கவே கூடாது.
23. கும்பம் - கும்பத்தோன் குன்நின்று வெல்வோன். வெற்றியின் உச்சம் அடைய பாடுபடுவர்.
24. மீன மகனை விடேல். பொது நிகழ்ச்சிகளில் மீன ராசிக்காரர்கள் இருந்தல் நியாயமான தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.
நட்சத்திர பழமொழிகள்
---------------------------
மூலத்தான்:-
ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பிறகு நான்காவது ஆண் குழந்தை பிறந்தாலும் அதுவும் மூலத்தான். ஐந்தாவது பெண் போகுமிடம் சிறப்பாக இருக்கும். ஆறாவது ஆண் பெருமை தரும். ஏழாவது பெண் இறப்பு. எட்டாவது ஆண் எட்டிப்பார்த்த இடம் குட்டிச்சுவர். பத்தாவது ஆண் மதி குறையச் செய்யும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்.
பூராடம்:-
பூராடம் பெண் பிறந்தால் நன்மையல்ல, பூராடம் போராடும் போகுமிடம் வாயாடும். பூராடம் ஆண் நன்மை, பூரட்டான் ஊராடான். பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முப்பது வயதிற்குள் குழந்தை பிறந்தால் உண்டு. இல்லையேல் இல்லை.
கேட்டை:-
கெட்ட குடிக்கு கேட்டை பிறந்தது. கேட்டையில் பிறந்தவன் மனதில் கோட்டை கட்டி வாழ்வான். கேட்டையில் பிறந்து நல்வழியில் வாழாது. கேட்டையில் பிறந்த பெண் மூத்த மருமகளானால் நன்மை.
ஆயில்யம்:-
ஆயில்யத்தில் மாமியார் ஆசாந்தியாள் (நோய் வாய்பட்டவள்)). ஆயில்யம் பெண்னை திருமணம் செய்தால் மாமியார் போல் சொல் பலிதம் ஆகும். மாமியார் சீக்காக இருந்தாலும் ஆயில்ய பெண் மருமகளாக வரும்போது பிழைத்து கொள்வாள்.
அவிட்டம்:-
அவிட்ட மகளை அந்நியனுக்க கொடேல். அவிட்டத்தில் பிறந்த பெண்னை சொந்தத்திலேயே கொடுக்க வேண்டும்.
மகம்:-
மகமகள் ஜகம் ஆள்வாள். மகத்தில் பெண் பிறப்பது சிறப்பு.
உத்திராடம்:-
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு கொள்ளையும். உணவுக்கு பஞ்சமில்லை. இவர் குடும்பத்தில் தம்பி தங்கைகளுக்கு நல்வழி காட்டுவார்.
உத்திரம்:-
உத்திரத்தில் ஒரு பிள்ளை ஊருக்கெல்லாம் தொல்லை. கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைவதால் உத்திரப்பிள்ளை தொல்லை அதிகம் கொடுக்கும்.
அஸ்தம்:-
அஸ்தத்தில் அப்பன் தெருவிலே. குழந்தை பிறக்கும் முன்னே அப்பன் இறப்பான். இவர் மருமகளாக வந்தால் மாமனார் இருந்தால், மாமனார் கணவர் இருவருக்கும் பிரச்சினை.
திருவாதிரை:-
திருவாதிரைக்கு ஒரு வாய் கனி. திருப்பி கேட்டால் கெடுப்பார் அடி. திருவாதிரையில் பிறந்தவர் ஒரு வார்த்தைக்கு மேல் பேசமாட்டார். திருவாதிரையில் திருடு போனால் திரும்பி வீடு வரும். திருவாதிரை நண்பர்கள் கூடாது.
பரணி:-
அடுப்புக்கு பாழ் போகாது. பரணியில் பிறந்தவர் சிறப்பாக இருப்பார். பெண் பரணி தரணி ஆளும்.
திருவோணம்:-
திருவோணத்தான் உலகை ஆள்வான். இவர் இறந்தாலும் புகழ் நிற்கும்.
சதயம்:-
சதயத்திற்கு சொல்புத்தி இல்லை. சொந்தபுத்தியும் இல்லை.
சுவாதி:-
சுவாதி பிறவா சம்பா விளையாது. சுவாதி என்ற சொல்லுக்கு சூரியன் என்று பொருள். கம்பீரமாக இருப்பார்கள். சுவாதி, விசாகம், மூலம், திருவோணம் (திருமண சடங்குகளுக்கு சிறந்த நட்சத்திரங்களாகும்).
திதி பழமொழிகள்
---------------------
1. அஷ்டமி நவமி தொட்டது துலங்காது.
2. ஏகாதசி மரணமெனில் துவாதசி தகனம் கூடாது.
3. சனி பிணம் துணை தேடும்.
4. தங்கும் வியாழன் தன்னோடு இரண்டு.
5. செவ்வாய், சனி முடி வெட்டுதல் தரித்திரம், தீங்கு.
6. அமாவாசை பித்ருகள் பலனில்லை.
7. கிருத்திகை நோய்.
8. அப்பா திதி, அம்மா திதி கூடாது.
9. தை 1,2ல் இறந்தவர்கள் மோட்சம் போவார்கள்.

1 comment: