Wednesday, 6 May 2015

நான்குவிதமான மலடிகளுக்கான தோஷங்கள்

நான்குவிதமான மலடிகளுக்கான தோஷங்கள்.
இந்த பிரபஞ்சத்தில் பரிணாமத் தோற்றத்தில் தான் உயிரினங்கள் பல்கிப் பெருகியுள்ளன. எல்லா உயிரினங்களிலும் இனக்கவர்ச்சியின் மூலமே, தங்களின் மரபணுக்களைக் ஒவ்வொரு தலைமுறைகளாக, காலங் காலமாக கடத்தி வருகின்றன. இதில் எந்த உயிரினமாக இருந்தாலும், தன் சந்ததிகளை உருவாக்க முடியாதவைகளும் உண்டு. சந்ததிகளை உருவாக்க முடியாத, எந்த உயிரினமும் வீணான உயிரினமாகக் கருதப்படும். அவைகளை, “மலடு” என்று ஒதுக்கப்படுகிறது.
இந்த “மலடை” நான்கு வகையாக, நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவைகளை, “வந்தியை” தோஷம் என்றழைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------
1) கதவீ வந்தியா :
பெண் குழந்தைகளை மட்டும் எவள் பெற்று எடுக்கிறாளோ, அவள் “ புருஷ வந்தியை” என்றும் அழைக்கப்படுவாள்.
----------------------------------------------------------------------------------------
2) ஸ்திரீ வந்தியை;
எவள் ஆண்குழந்தையை மட்டும் பெறுபவளும், பெண்குழந்தையை பெற முடியாதவளையும், “ஸ்திரீ வந்தியை” என அழைக்கப்படுவாள்.
-----------------------------------------------------------------------------------------
3) மிருத வந்தியை:
எவளுக்கு குழந்தைகள் பிறந்து இறந்து விடுகின்றதோ, அவளுக்கு, “மிருத வந்தியை” என்று பெயர்.
-------------------------------------------------------------------------------------------
4) ஸாஷாத் வந்தியை:
எவளொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறாளோ, அவளே, “ஸாஷாத் வந்தியை” என்று அழைக்கப்படுகிறாள்.

No comments:

Post a Comment