Sunday, 17 May 2015

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கலாமா?

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கலாமா?
இவ்வுலகில் உயிர்கள் ஜெனிப்பது என்பது, கர்மாவின் அடிப்படையிலே. காம நூல்களான வாத்ஸ்யாணர் எழுதிய காம சூத்திரம், அதிவீர ராம பாண்டியன் எழுதிய கொக்கோக வைபோகம் போன்ற இன்னும் பல நூல்களிலும் ஆண், பெண் உடலுறவு கொள்ள வேண்டிய நேரமும், சில விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. உடலுறவில் ஒரு கரு எப்போது உருவாகிறதோ, அப்போதே அதன் விதி தீர்மாணிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கரு உருவான நேரத்தை சாதரணமாக மனிதனால் கணிக்க இயலாது. அதனாலே நாம் குழந்தை பிறக்கும் நேரத்தை ஜாதகமாக கணிக்கிறோம். ஒரு குழந்தை பிறந்து இந்த உலகில் காலடி எடுத்து வைத்தவுடன், அதன் முதல் மூச்சால் இவ்வுலக பரிணமிக்கும் கிரக கதிர்களை தனக்குள் தானே எடுத்து கொள்கிறது. அப்போதே அதன் ஜாதகமும் செயல்பட துவங்கி விடும், ஆனாலும் நாம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்க தேவையில்லை. ஏனெனில் ஒரு குழந்தை பிறப்பது, அந்த குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் கர்மா, கொடுப்பினை், ஜாதக அமைப்பாகும். குழந்தை பிறந்த பின் பெற்றோர் யோகம் பெற வேண்டும் அல்லது அவயோகம் பெற வேண்டும் என்பது அந்த பெற்றோரின் ஜாதக அமைப்பை பொறுத்தது. ஆதலால் குழந்தை பிறந்ததால்தான் தனக்கு தீமை ஏற்பட்டது அல்லது நன்மை ஏற்பட்டது என்று கூறுதல் தவறு. அந்த குழந்தை பிறந்ததே அந்த பெற்றோரின் ஜாதக அமைப்பை பொறுத்தது. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் தனது அனைத்து குடும்ப உறவுகளுடன் தொடர்பு உடையதாகும். ஆனால் துல்லியமாக பலன் கணிக்க தனிப்பட்ட ஜாதகம் முக்கியம். ஒரு குழந்தை பிறந்தவுடன் நன்மை நடந்தால் இந்த குழந்தை பிறப்பால்தான் நன்மை நடந்தது, தீமை நடந்தால் இந்த குழந்தை பிறப்பால்தான் தீமை நடந்தது என்று கூறி குழந்தையின் மீது பழி சுமத்துதல் கூடாது. இதனால் பெற்றோர் குழந்தை உறவு முறை பாதிக்கப்படும். தீமையானால் அந்த குழந்தை பெற்றோரின் முழு அன்பை பெற்று நல்ல நிலையில் வளர முடியாது என்பதாலேயே பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பார்க்க கூடாது என கூறி வருகிறோம். எனது நண்பர் ஒருவரின் ஜாதகத்தை பார்த்த போது அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்து இருக்கும், அதன் பின் வாழ்வில் உயர் நிலை அடைந்து இருப்பீர் என்றேன். அது அவரது ஜாதக பலன். அதுவே நடந்து இருந்தது. அது போல் ஒரு குழந்தை பிறப்பை பெற்றோரின் ஜாதக அமைப்பே தீர்மானிக்கும். அதை அன்பு பாசத்துடன் வளர்த்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்துவது பெற்றோரின் கடமை என்பதை பெற்றோர் உணர்வது நலம். ஒரு குழந்தைக்கு உடல் நிலை பாதிப்பு , வேறு ஏதேனும் பிரச்சினை இருந்தால் மட்டுமே ஜாதகம் பார்க்க வேண்டும். மற்றபடி தவிர்த்தல் நலம். பெற்றோரர்களே கடமையை செய்யுங்கள். பலன் தானே கிடைக்கும்...

2 comments:

  1. யாருக்கு குழந்தையாக வேண்டும்
    நமக்கு யார் குழந்தை என்பதும்
    விதி.புதிய சேர்க்கை மாற்றும் குடும்ப
    நிகழ்வுகளை.ஜாதகம் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    ReplyDelete
  2. பிறந்த குழந்தையின் நேரம்:14:45மதியம்.
    பிறந்த தேதி:14-09-2018

    ReplyDelete